ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான், தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தலைவர் உயிரிழந்த போது இரங்கல் செய்தி அனுப்பி வைத்தவர் என திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் கௌசல்யன் உயிரிழந்த போது, அனான் இரங்கல் செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
பயங்கரவாதத் தலைவர்களில் ஒருவரான கௌசல்யனின் மறைவிற்காக ஐக்கிய நாடுகள்; அமைப்பின் செயலாளர் நாயகம் இரங்கல் செய்தி அனுப்பி வைத்தமை சர்ச்சைக்குரியது என திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான ஓர் நபரே, இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளுக்கு தலைமை தாங்க உள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே, கொபி ஆனான் தலைமையிலான குழு மேற்கொள்ளும் இந்த விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என திவயின தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgxz.html
Geen opmerkingen:
Een reactie posten