இந்த மாதம் முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையில் தங்கியிருந்து, அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து வெளிநாடுகளில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருந்த அவர், இலங்கையில் தேர்தல் நெருங்குகின்ற சூழ்நிலையில், இந்த மாதம் முதல் இலங்கையிலேயே தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவரும், அமைச்சர்கள் சிலரும் இணைந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களை தொகுதி ரீதியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான செயற்பாடாகவே அமையும் என்று குறித்த அமைச்சர் அந்த ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZev5.html
Geen opmerkingen:
Een reactie posten