[ புதன்கிழமை, 25 யூன் 2014, 07:47.45 AM GMT ]
பாணந்துறையில் அமைந்திருந்த நோலிமிட் நிறுவன காட்சியறை சில நாட்களுக்கு முன் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தின் காரணமாக சுமார் 40 கோடி பெறுமதியான இழப்பு ஏற்பட்டிருப்பதாக நோலிமிட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே திரிமான்ன, ஒத்துகரு, லங்கா ஈ நியூஸ் போன்ற இணையத்தளங்கள் இச்சம்பவம் தொடர்பான சில ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளன.
அதன் பிரகாரம் நோலிமிட் நிறுவனத்தை தீக்கிரையாக்கி அழிக்கும் தீர்மானத்தையடுத்து குறித்த தினத்தில் பாணந்துறை பகுதியில் புலனாய்வுப் பிரிவினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை ஒருங்கிணைப்பதற்காக புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கபில ஹெந்த விதாரணவின் பாதுகாப்பு அதிகாரியொருவர் நேரடியாக பாணந்துறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அவரது டிபெண்டர் வாகனம் நோலிமிட்டை அண்மித்த பகுதியின் சூழ்நிலைகளை நோட்டமிடும் நோக்கில் அப்பகுதியில் பல தடவைகள் சுற்றித்திரிந்தது.
இது பிரதேசவாசிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே அவர்கள் உடனடியாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவினர் மற்றும் அப்பகுதி பொலிஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், எதனையும் கண்டு கொள்ள வேண்டாம் என்று மேலிடத்திலிருந்து பணிப்புரை வந்துள்ளது.
மேலும் இது தொடர்பான கள ஒருங்கிணைப்பு வேலைகளை பொறுப்பெடுக்குமாறு பிரதான பொலிஸ் பரீட்சகர் மகேஷ் பெரேராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கபில ஹெந்த விதாரணவின் பாதுகாப்பு அதிகாரி பயணித்த வாகனம் உடனடியாக அப்பகுதியிலிருந்து திருப்பியழைக்கப்பட்டதுடன், கூடுதல் புலனாய்வாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அதன் பின்பே தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குற்றவாளிகள் உடனடியாக பலத்த பாதுகாப்புடன் அப்பகுதியை விட்டு அகற்றப்பட்டுள்ளார்கள்.
தீ வைப்புச் சம்பவம் நடைபெற்று அரை மணிநேரத்துக்கும் மேலாக பொலிஸ் பொறுப்பதிகாரி மகேஷ் பெரேரா தீயணைப்பு வண்டிகளைத் தருவிப்பதில் கவனம் செலுத்தாமல், சம்பவம் தொடர்பான தகவல்களை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் கபில ஹெந்த விதாரணவின் பாதுகாப்பு அதிகாரி பயணித்த டிபெண்டர் வாகனம், அதன் இலக்கத் தகடு மற்றும் தீவைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பான காட்சிகள் சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் நோலிமிட் சிசிடிவி கமெரா பதிவுகளும் உள்ளடங்கும்.
எனினும் இந்தப் பதிவுகள் அனைத்தும் வெளிவராமல் பாதுகாப்பதில் பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பில் உள்ள புலனாய்வாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். நோலிமிட் நிறுவன முகாமைத்துவத்தின் செயற்பாடுகளையும் அவர்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுள்ளனர்.
இச்சம்பவங்களின் மறுபுறமாக நோலிமிட் தீவைப்புச் சம்பவம் தொடர்பில் முஸ்லிம்கள் மீதே பழியைப் போடுவதற்கான நடவடிக்கைகளும் பாதுகாப்புத் தரப்பினரால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மின்சாரக் கசிவு என்று மூடி மறை்க்க முற்பட்ட நிலையில், மின் இணைப்பு பகுதியில் தீப்பற்றாத நிலையில் மின்சாரக் கசிவு சாத்தியம் இல்லை என்பதை சமூக வலைத்தளங்கள் ஊடாக பலரும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அளுத்கம இனக்கலவரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்காத காரணத்தினால் கோபம் கொண்ட முஸ்லிம்களே நோலிமிட் நிறுவனத்திற்கு தீவைத்ததாக சம்பவத்தை மூடி மறைப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக அளுத்கம இனக்கலவரத்திற்கு எதிராக நடைபெற்ற ஹர்த்தால் சம்பவத்தின் போது காட்சியறைகளை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று நோலிமிட் முகாமைத்துவம் அச்சுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaet7.html
சாக்கில் கட்டி ஆற்றில் வீசப்பட்டார் சுனந்த தேசப்பிரிய: திடுக்கிடும் தகவல்கள்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 08:19.42 AM GMT ]
வானொலியில் இன்று காலை இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மங்கள சமரவீர தற்போது ஜனநாயகம் குறித்து மிக பெரிதாக பேசி வருகிறார். ஆனால் அவர் அமைச்சராக இருந்த போது அப்படி நடந்து கொள்ளவில்லை.
சாக்கில் போட்டு கட்டப்பட்டு களு கங்கையில் வீசப்பட்ட சுனந்த தேசப்பிரிய சாக்கின் கயிறு கழன்ற நிலையில் உயிர் தப்பி, நீந்தி வந்து, அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து தனது உயிரை காப்பற்றி கொண்டார்.
அன்று மங்கள சமரவீரவுக்கு உதவிய அமைச்சர் இன்றைய அரசாங்கத்திலும் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த சம்பவம் பற்றிய சகல தகவல்களை இன்றைய தேர்தல் ஆணையாளர் அறிவார் எனவும் ஹட்சன் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaeu0.html
பாதுகாப்புத் தருவது தான் உன்வேலை- பொலிஸாரை விரட்டியடித்த ஞானசார தேரர்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 08:37.39 AM GMT ]
பொதுபலசேனாவின் ஏற்பாட்டில் நேற்று கண்டி தலதா மாளிகையில் உறுதிமொழி ஏற்பு (அதிர்ஷ்டான) பூஜை நடைபெற்றது. இதன்போது பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம்பன்வெல, பொதுபல சேனாவின் பூஜையை பிறிதோர் இடத்தில் நடத்துமாறு ஞானசார தேரரைக் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதிலளித்த ஞானசார தேரர், நாங்கள் எதனைச் செய்வதாக இருந்தாலும் பாதுகாப்புச் செயலாளரிடம் சொல்லிவிட்டுத்தான் செய்கின்றோம். எனவே எங்களுக்குப் பாதுகாப்புத் தருவது தான் உன் வேலை.
ஒதுங்கிப் போய் உன் வேலையை மட்டும் பார்த்துக் கொள். இல்லை என்றால் பாதுகாப்புச் செயலாளரிடம் முறையிட வேண்டியிருக்கும் என்று கடுமையான தொனியில் எச்சரித்தார்.
இதனையடுத்து பொலிசார் அவ்விடத்திலிருந்து விலகிச் சென்று பாதுகாப்புப் பணியில் மட்டும் ஈடுபட்டனர்.
பூஜைகள் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஞானசார தேரர், தமது அமைப்பு இனவாத அமைப்பு இல்லை என்றும், வன்முறையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.
எனினும் ஊடகவியலாளர்கள் யாரையும் அனுமதிக்காத நிலையில் தலதா மாளிகைக்குள் நடைபெற்ற பூஜையின் போது அளுத்கம தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பூஜைகள் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஞானசார தேரர், தமது அமைப்பு இனவாத அமைப்பு இல்லை என்றும், வன்முறையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.
எனினும் ஊடகவியலாளர்கள் யாரையும் அனுமதிக்காத நிலையில் தலதா மாளிகைக்குள் நடைபெற்ற பூஜையின் போது அளுத்கம தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு மும்மணிகளின் ஆசி வேண்டியும் பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது.
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்காக தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பதாக பூஜையில் கலந்துகொண்டவர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாகவே தகவல்கள் வெளியில் கசிவதைத் தடுக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் உள் நுழையாது தடுக்கப்பட்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaeu1.html
Geen opmerkingen:
Een reactie posten