தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

கோத்தபாயவின் அறிவிப்பால் கதி கலங்கியுள்ள சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வீட்டுத் திட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 08:25.53 AM GMT ]
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 191 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வரும் அகதிகளுக்காக இந்த வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
வணியார் அகதி முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு 41 வீடுகளும், தும்பாலாலி முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு 150 வீடுகளும் இவ்வாறு நிர்மாணிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgp3.html
கோத்தபாயவின் அறிவிப்பால் கதி கலங்கியுள்ள சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 08:29.39 AM GMT ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது அரசியல் வருகை தொடர்பில் பத்திரிகை ஒன்றில் வெளியிட்ட கருத்து காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கோத்தபாயவின் அறிவிப்பால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கதி கலங்கி இருப்பதாக அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபாய தேர்தலில் அல்லது தேசிய பட்டியல் ஊடக நாடாளுமன்றத்திற்கு வந்தால், நேரடியாக தாம் அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவோம் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
நாட்டின் ஜனாதிபதியாக செயற்படுவது மகிந்த ராஜபக்ஷ அல்ல கோத்தபாய ராஜபக்ஷ என்பது ஏற்கனவே அமைச்சர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விடயமாக இருந்து வருகிறது.
கோத்தபாயவின் இந்த அறிவிப்பை அடுத்து, ராஜபக்ஷவினரின் குடும்ப ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தொலைபேசிகள் ஊடாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கும் இந்த அமைச்சர்கள் விரைவில் ஒன்று கூடி தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமை, குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgp4.html

Geen opmerkingen:

Een reactie posten