தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

தமிழ் பேசும் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்?

ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளரே வெல்வார்!- ஜே.வி.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 10:07.35 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த போகும் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பொது இணக்கம் இல்லை என ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படுவார் என அந்த கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் அந்த கட்சியின் பிக்கு முன்னணி மாதுளுவாவே சோபித தேரர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பொது இணக்கம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியினால் துன்பங்களை அனுபவிப்பவர்கள் மற்றும் ஏனைய பல்வேறு சக்திகளில் உள்ளவர்களை ஒன்றிணைக்கக் கூடிய மாற்று சக்தியை ஜே.வி.பி கட்டியெழுப்பும்.
ஐக்கிய தேசியக் கட்சி என்ன தீர்மானத்தை எடுத்தாலும் நாட்டின் பொது நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய சக்திகள் எமது மாற்று சக்தியுடன் ஒன்றிணைந்து வெற்றியடையும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 09:51.05 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகளின் இழுபறி நிலை காரணமாக வெறுப்படைந்துள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டுமாயின் எதிரணி அரசியல் கட்சிகள் பொது மற்றும் யதார்த்தமான வேலைத்திட்டம் ஒன்று வருவது அவசியம்.
எனினும் தெற்கின் எதிரணி அரசியல் கட்சிகள் குழுவாதம்,தனி நபர்வாத அடிப்படையில் மாத்திரமல்லாது அதிஷ்டத்தின் அடிப்படையில் செயற்படும் நிலைமைக்கு சென்றுள்ளன.
தெற்கில் உள்ள எதிர்க்கட்சிகளின் இவ்வாறான செயற்பாடுகள் அதிகாரத்தை கைப்பற்ற தேவையான 51 வீத வாக்குகளை பெற முடியாது செய்து விடும் என தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இப்படியான நிலைமையில், 51 வீதமான வாக்குகளை வெல்ல முடியாத பொது வேட்பாளர் எனக் கூறிக்கொள்ளும் தெற்கின் பொது வேட்பாளர் மீது நம்பிக்கையின்றி நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு பதிலாக தமிழ் பேசும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, இரண்டாவது விருப்பு வாக்கை தென் பகுதியின் வேட்பாளருக்கு வழங்குமாறு கூறுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் அடையாளம் மற்றும் அவர்களின் தேவைகளை குறைத்து மதிப்பிடாத பலமும் கட்டியெழுப்பப்படும் என்பது தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் நிலைப்பாடாக இருக்கின்றது.
தமிழ், முஸ்லிம் மக்களின் இந்த புதிய திட்டம் காரணமாக சிறுபான்மை வாக்குகள் தனக்கே கிடைக்கும் என எண்ணி செயற்பட்டு வரும் தெற்கின் பொது வேட்பாளர்கள் அனைவரும் இரண்டு முறையல்ல மூன்று முறை சிந்திக்க வேண்டிய நிலைமையேற்படும்.
சகல எதிர்க்கட்சிகளும் தனி நபர் நோக்கங்களை புறந்தள்ளி விட்டு ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதை ஒரே இலக்காக கொண்டு செயற்படாது போனால் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும் என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten