[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 11:27.02 PM GMT ]
கொழும்பில் அமைந்துள்ள சந்திரிக்காவின் வீட்டிற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சஞ்சரித்து, வீட்டைப் படமெடுத்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வீட்டைப் படமெடுத்த மூன்று தமிழர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வட மாகாணத்தைச் சேர்ந்த இவர்களிடமிருந்து வீடியோ கமரா உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafxz.html
விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்போர் மீது நடவடிக்கை! அரசாங்கம் தீர்மானிக்க முடியாது!- தயான் ஜெயதிலக
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 12:19.55 AM GMT ]
ஐநா விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்றமே தீர்மானிக்க முடியும். மாறாக அரசாங்கம் கூறுவதைப் போன்று செயற்படமுடியாதென ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைக்குழுவின் குழுவின் முன் சாட்சியமளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தரப்பினர் பகிரங்கமாக தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
எம்மைப் பொறுத்தவரையில் சர்வதேச விசாரணைக்குழு நாட்டிற்குள் வருகை தருவதை நாம் எதிர்க்கின்றோம்.
இருப்பினும் தற்போது விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டிற்கு வெளியிலிருந்தாவது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.
குறித்த விசாரணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிப்போர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கத் தரப்பு கூறுகின்றது.
மறுபக்கத்தில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
சர்வதேச விசாரணைக்குழுவை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
அப் பிரேரணைக்கு பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வாக்களிக்காத நிலையில் அதற்கு ஆதரவாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது.
அவ்வாறிருக்கையில், சாட்சியமளிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உயர்நீதிமன்றமே தீர்மானிக்க முடியும்.
அந்தவகையில், சர்வதேச விசாரணையையும் சாட்சியமளிப்பதனையும் வலியுறுத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பில் மூன்றாம் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதனை நிறுத்தவேண்டும்.
கூட்டமைப்பில் சிறந்த சட்டத்தரணிகள் காணப்படுகின்றார்கள். ஆகவே சாட்சியமளிப்பது தொடர்பில் அவர்கள் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து அதனூடாக இப்பிரச்சினைக்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் தயான் ஜயதிலக.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLafx3.html
Geen opmerkingen:
Een reactie posten