தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 juni 2014

முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் பேச்சுவார்த்தை!- ரவூப் ஹக்கீம்- கோத்தபாய இன்று சந்திப்பு

இனவாத, மதவாத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதில்லை!– தேர்தல் ஆணையாளர்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 11:38.03 PM GMT ]
இனவாத,  மதவாத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான கட்சிகளை பதிவு செய்வதனை தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கட்சிகளை பதிவு செய்வதன் மூலம்  சில அரசியல்வாதிகள் தங்களது சுய கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். இதனால் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
ஏற்கனவே இவ்வாறான இரண்டு அரசியல் கட்சிகளின் பெயர்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி,  அகில இலங்கை பொதுமக்கள் காங்கிரஸாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய முஸ்லிம் முன்னணி என்ற கட்சி ஐக்கிய சமாதான முன்னணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கட்சிகளை பதிவு செய்யும் போது இன மற்றும் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பெயர்களை கட்சிகளுக்கு வழங்குவது ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafx0.html
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது குறித்த யோசனைக்கு இதுவரையில் பதில் இல்லை!!– வாசுதேவ
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 11:45.44 PM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது குறித்த யோசனைக்கு அரசாங்கம் இதுவரையில் பதில் எதனையும் அளிக்கவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென இடதுசாரி கட்சிகள் சில கூட்டாக இணைந்து அரசாங்கத்திடம் கோரியுள்ளன.
இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த இதுவரையில் அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய வேண்டுமெனத் தெரிவித்து இடதுசாரி கட்சிகளான ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் ஸ்ரீலங்கா கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இரண்டு மாதத்திற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளன.
இந்தக் கடிதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுக்க ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விடயம் குறித்து இடதுசாரி கட்சிகளுடன் அரசாங்கம் இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafx1.html
முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் பேச்சுவார்த்தை!- ரவூப் ஹக்கீம்- கோத்தபாய இன்று சந்திப்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 01:38.37 AM GMT ]
முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
முஸ்லிம் மத அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் பாதுகாப்புச் செயாளலரை சந்தித்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் அமைந்தாக முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் பௌத்த சமூகங்களுக்கு இடையிலான நீண்ட கால உறவுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ரவூப் ஹக்கீம்- கோத்தபாய இன்று சந்திப்பு
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று பிற்பகலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்துப் பேசவிருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றமை குறித்து அமைச்சர் ஹக்கீம் சீற்றமடைந்திருக்கும் நிலையிலும் - அது பற்றிய விவகாரத்தை ஐ.நா. மற்றும் மேற்குலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு போனமை மூலம் அரசுக்கும் நாட்டுக்கும் நீதி அமைச்சர் ஹக்கீம் துரோகமிழைத்து விட்டார் என்ற விசனம் அரசுத் தலைமையிடம் நிலவும் இவ்வேளையிலும் - இந்தச் சந்திப்பு நிகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்
http://www.tamilwin.com/show-RUmsyGRYLafx4.html

Geen opmerkingen:

Een reactie posten