தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

சர்வதேசம் எம்மை சுற்றிவளைத்துள்ளது - ஜாதிக ஹெல உறுமய

இலங்கை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது: சுப்பிரமணியன் சாமி
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 11:16.30 AM GMT ]
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதப் பயிற்சி அளித்து வருவதாகவும், இது மிகவும் ஆபத்தானது எனவும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
இவ்விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தீவிரவாதத்தை விரட்டியடிக்க இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டியது முக்கியம்.
இதுதொடர்பாக இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும், பேச வேண்டும்.
பாகிஸ்தானியர்களால் பயிற்சி அளிக்கப்படும் இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் ஊடுறுவி வருகிறார்கள்.
இது அபாயகரமானது. பாஜக, தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு ஒரு தவறை செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள்தான் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahq6.html
ஐ.நா விசாரணையாளருக்கு ஐ.தே.க, ஜே.வி.பி, மு.கா. மறைமுக ஆதரவு?
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 11:28.44 AM GMT ]
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நடத்த உள்ள விசாரணைகளுக்கு இடமளிப்பதா, இல்லையா என்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு வாக்காளிக்காது தவிர்த்து கொண்டதன் மூலம் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி என்பன மறைமுகமாக ஆதரவை வழங்கியுள்ளதாகவும் நாட்டுக்கு எதிரான இந்த செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனைக்கு அமைய இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசாரணைக்கு இடமளிப்பதா, இல்லையா என்பதை அறிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இடமளிக்க கூடாது என்பதற்கு 144 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், இடமளிக்கப்பட வேண்டும் என 10 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்தது.
உலக நாடுகளை தமது எண்ணத்திற்கு அமைய கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல வல்லரசுகள் ஐ.நா, ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமை பேரவை ஆகியவற்றை ஆபரணமாக பயன்படுத்தி வருகின்றன.
மனித உரிமை என்ற வார்த்தையை பயன்படுத்தி அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் சிரியாடு, ஈராக், லிபியா, சூடான் போன்ற நாடுகளை மிகவும் கவலைக்குரிய நிலைமைக்குள் தள்ளியுள்ளன.
இந்த நாடுகளில் எண்ணெய் வளத்தை சுரண்டுவதே இந்த மனித உரிமை என்ற வார்த்தையை மேற்குலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் சிரியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதத்தை பார்க்கும் போது அது அமுலில் இருக்கும் சட்டத்திட்டங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயற்பட்ட விதத்தை பார்க்கும் போது அவர் புலிகப் பயங்கரவாதிகளுக்கு சார்பாக செயற்பட்டு வந்துள்ளார்.
இலங்கை 30 வருடங்களா பயங்கரவாதத்தினால் துன்பங்களை அனுபவித்த நாடு. அமைதியை விரும்பும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைவரும் அந்த துன்பங்களை அனுபவித்தனர்.
எவ்வாறாயினும், புலிகளின் பயங்கரவாத்தை அரசாங்கத்தினால் தோற்கடிக்க முடிந்தது. புலிகளை அழித்தது, அவர்களின் எஜமானர்களான மேற்குலக நாடுகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
இதனால் மனித உரிமை மீறல் குற்றங்களை சுமத்தி, வெற்றி கொண்ட சமாதானத்தை மீண்டும் பிடிங்கி எடுத்து புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டவே மேற்குலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
கஷ்டத்திற்கு மத்தியில் வெற்றி கொண்ட சமாதானத்தை பறிப்பதற்காகவெ மனித உரிமை என்ற போர்வையை போர்த்தி கொண்ட விசாரணைகளை அனுப்ப முயற்சித்து வருகின்றனர்.
நாடு என்ற வகையில் அந்த விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வர அனுமதிக்க முடியாது.
இது குறித்து அரசாங்கம் தீர்மானிப்பதை விட நாட்டு மக்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மூலம் தீர்மானங்களை எடுத்து உலகத்திற்கு தெரியப்படுத்துவது மிகவும் பலமானது.
நாடு என்ற வகையில் சகல அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி அதனை எதிர்த்திருக்க வேண்டும். நாட்டை பற்றி சிந்தித்து இதன் போது செயற்பட்டிருக்க வேண்டும்.
எனினும் நாட்டுக்காக பணி செய்வதை புறந்தள்ளி விட்டு ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பல்வேறு கதைகளை கூறி உலகத்திற்கு பலமான செய்தி தெரிவிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவறவிட்டன.
இதன் மூலம் இவர்கள் மறைமுகமாக விசாரணையாளர் இலங்கை வருவதை ஆதரித்துள்ளனர்.
அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்தனர்.
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களை காரணம் காட்டியே அவர்கள் இந்த பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
எனினும் அன்று காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை கொலை செய்த புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் கைகுலுக்கவும் உடன்படிக்கையில் கையெழுத்திடவும் ஹக்கீம் தயங்கவில்லை.
ஆனால் இன்று அளுத்கம என்ற துரும்புச் சீட்டை சுட்டிக்காட்டி சர்வதேச விசாரணைக்குழுவிற்கு இடமளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் முஸ்ஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahq7.html
சர்வதேசம் எம்மை சுற்றிவளைத்துள்ளது - ஜாதிக ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 11:52.42 AM GMT ]
சிங்களவர்களை போல் முஸ்லிம் தரப்பிலும் வன்முறைகள் ஏற்பட முஸ்லிம்கள் பரப்பிய வதந்திகள் காரணமாக அமைந்தது என மேல் மாகாண அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமவின் தலைவர்களில் ஒருவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் பள்ளிகளுக்கு தீமூட்டப்பட்டுள்ளன. பலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.
முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் என்னை தொடர்புக் கொண்டு பேருவளையில் குழந்தைகள் உட்பட 11 முஸ்லிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறினார்.
இது பச்சை பொய், செவ்வாய் கிழமை அதிகாலையில் நான்கு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் கூறினர். இது பச்சை பொய். ஒருவர் தொலைபேசியில் கூறியதும் அதனை தேடிப்பார்க்காது அனைவரிடம் அந்த கதைகளை கூறுகின்றனர்.
அதேபோல் கடந்த காலம் முழுவதும் நாட்டில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதலை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வந்தனர்.
இலங்கையில் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன.
14 வயதான சிங்கள சிறுவனுக்கு பாலியல் சேட்டை செய்வது வேறு எதற்கும் அல்ல சிங்களவர்களை தூண்டவே அவர்கள் அப்படி செய்தனர்.
சிங்கள பௌத்தர்களை தூண்டவே பொசன் பௌர்ணமி தினத்தில் பௌத்த பிக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பொதுபல சேனாவின் கூட்டம் முடிந்து அனைவரும் அமைதியாக கலைந்து செல்லும் போது கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் நடத்தி பௌத்தர்களின் ஆத்திரத்தை தூண்டினர்.
இந்த நோக்கத்திலேயே புலிகள் அன்று அரந்தலாவவில் பிக்குகளை கொலை செய்தனர். அந்த நோக்கத்திலேயே மஹாபோதி மீதும் தலதா மாளிகை மீதும் தாக்குதல் நடத்தினர்.
எனினும் இந்த சம்பவங்களால் பௌத்த சிங்கள மக்கள் ஆத்திரமடையவில்லை. அவர்கள் புலிகளின் நோக்கத்தை அறிந்திருந்தனர்.
யுத்தம் முடிந்து 5 வருடங்களில் எமது தந்திரங்கள் எமக்கு மறந்து போய்விட்டன.
நாம் இன்னும் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றோம். அன்று நாம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞான வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மோதினோம்.
தற்போது உலகின் வல்லரசான அமெரிக்காவுடன் நாம் இன்று மோதிக்கொண்டிருக்கிறோம்.
நாம் சர்வதேசத்தினால் சுற்றிவளைப்பட்டிருக்கின்றோம் என்பதை முழு நாட்டு மக்களும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahry.html

Geen opmerkingen:

Een reactie posten