[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 12:42.38 PM GMT ]
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு பொலிஸார் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மத்தல விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் முனையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மாலை திறந்து வைத்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவை பயன்படுத்தி நாட்டுக்கு பொய்யான தகவல்களை வழங்க வேண்டாம். அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களின் போது பொலிஸார் சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தவில்லை.
நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தவிடாத கண்ணுக்கு புலப்படாத சக்தி ஒன்று உள்ளது. அந்த சக்தி யார் என்பது குறித்து எனக்கு கேள்வி எழுகிறது.
நாட்டில் இனவாதத்தை தூண்டி, சிங்கள, முஸ்லிம் மக்களிடையிலான ஐக்கியத்தை சிதைத்து, தமது அரசியல் அதிகாரத்தை பாதுகாத்து கொள்ள முடியும் என அரசாங்கம் நினைக்குமானால், அது மாயை.
அளுத்கமவில் அண்மையில், பொதுபல சேனா அமைப்புக்கு கூட்டத்தை நடத்த அனுமதியை வழங்கிய நபர்கள் பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும்.
அந்த கூட்டத்தில் உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இனவாதத்தை தூண்டும் வகையில், வெறிப்பிடித்தவாறு பேசினார்.
பௌத்த சாசனத்தை பாதுகாக்க ஒழுங்கம் இருக்க வேண்டும் என புத்த பகவான் போதித்துள்ளார்.
ஒழுக்கமின்றி, ஒழுக்க கேடான மற்றும் பகையை ஏற்படுத்தும் தோரணையில் ஞானசார தேரர் கூட்டத்தில் கருத்துக்களை வெளியிட்டார்.
கூட்டம் முடிந்து சிறிது நேரத்தில் அளுத்கம பிரதேசத்தில் மோதல்கள் ஏற்பட்டன.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார். அந்த நெருப்பில் அரசாங்கம் பெட்ரோலை ஊற்றியது.
நாட்டில் உள்ள சில காவி உடை அணிந்தவர்கள், நாட்டின் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு இனவாதத்தை தூண்டி நாட்டை அழித்து வருகின்றனர்.
நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ள அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
தயவு செய்து அப்படியான செயல்களை நிறுத்துமாறு தான் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்ததாகவும் பாலித தெவரப்பெரும மேலும் தெரிவித்தார்.
மத்தல விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் முனையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 01:04.53 PM GMT ]
இதன் பின்னர், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பட்டது.
உலகில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எந்த விமானத்திற்கும் எரிபொருளை நிரப்பக் கூடிய வகையில், மத்தல விமான நிலையத்தில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
மறுக்கப்பட்டது கல்வியா, இல்லை எங்கள் உரிமையா? இந்திய அரசே பதில் சொல்: இயக்குநர் வ.கவுதமன்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 01:36.07 PM GMT ]
தமிழகத்தில் மருத்துவம் படிக்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதி மாணவிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழமாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடியுரிமை இல்லாததால் கலாந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
1990-ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அல்லிமலர்- ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995-ல் தமிழகத்திலுள்ள முகாமில் பிறந்தவர்.
தனது பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்று தனியார் மெட்ரிக் பள்ளியில் இலவசமாக மேல்நிலைக் கல்வியை பெற்றுள்ளார். அரசு பொது தேர்வில் 1170 மதிப் பெண்ணும் , மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் 197.33 பெற்றுள்ளார்.
மருத்துவம்தான் தனதுகனவு என்றுகூறி சென்னை இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட 2000-ஆம் ஆண்டுவரை இலங்கை அகதிகளுக்கு என்று இருபது இடங்கள் மருத்துவப் படிப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் 1996-ஆம் ஆண்டு மதிப்புமிகு உணர்ச்சிகவிஞர். காசி ஆனந்தன் அவர்களின் மகள் ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் முழுவதுமாக நீக்கியுள்ளது.
இதனால் நந்தினி போன்ற பல மாணவ- மாணவியினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திபத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும் போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாக வளரும் வாழும் எம் மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்.
இதற்கு மரியாதைக்குரிய தமிழக முதலைமைச்சர் விரைந்து தீர்வு காண வேண்டும். இலங்கையில் முள்வேலி முகாம்களை போன்று தமிழகத்திலும் முகாம்களில் வாடும் எம் தமிழ் உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளும் கல்வியும் கிடைக்க வேண்டும்.
இதற்கு இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும். எங்கள் தமிழ் சொந்தங்களின் அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வேற்றுமை களைந்து ஒன்றுப்பட்டு போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நந்தினியின் கல்விக்கும், தனிமனித உரிமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும்.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தாயுள்ளத்தோடு முதன்மையாக கவனத்தில் கொண்டு நந்தினி போன்ற மாணவர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten