தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

மகிந்தர் அள்ளி வீசிய வாக்குறுதியில் மயங்கிய முஸ்லீம் தலைவர்கள் மயக்கம் தெளியமுன் தாக்குதல் !

கச்சதீவு தொடர்பில் தமிழக கோரிக்கை நிறைவேறினால் இலங்கைக்கு உதவியற்ற நிலை ஏற்படும்!
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 12:04.23 AM GMT ]
அதிகாரம் மிக்க தமிழகத்தின் கோரிக்கைக்கு அமைய இந்தியா கச்சதீவை மீண்டும் கைப்பற்றினால் அது சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினையை ஒத்த பிரச்சினையாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம்- இலங்கை சம்மேளனத்தின் அமர்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய பலரும் இந்தக் கருத்தை முன்வைத்தனர்.
கச்சதீவு விடயம் ஏற்கனவே முடிந்து விட்டது. எனினும் தற்போது அதனை திரும்பப்பெற தமிழ் நாடு கோரிக்கைகளை விடுத்து வருகிறது.
தமிழகத்தின் கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அங்கு, இலங்கைக்கு உதவியற்ற நிலை ஏற்படும்.
ஏனெனில் இதனை தடுக்கக்கூடிய சர்வதேச சட்டங்கள் இல்லை என்று உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர்.
தென்வியட்நாமின் பகுதிகளை சீனா கைப்பற்றியமை ஏற்றுக் கொள்ளத்தக்க விடயம் அல்ல என்பதையும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafq7.html

மகிந்தர் அள்ளி வீசிய வாக்குறுதியில் மயங்கிய முஸ்லீம் தலைவர்கள் மயக்கம் தெளியமுன் தாக்குதல் !

[ Jun 23, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4930 ]
பேருவளைச் சம்பவம் ஒருவாறு தணிந்தது என்று நினைத்த சில முஸ்லீம் தலைவர்கள், மகிந்தரை சந்திக்க மகிந்தரும் தனது பங்கிற்க்கு பல வாகுறுதிகளை அள்ளி வழங்கினார். இதில் கிறங்கி மயங்கிப்போன முஸ்லீம் அமைச்சர்களின் மயக்கம் தெளிய முன்னர் மீண்டும் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.
தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள முஸ்லிம், வர்த்தக நிலையத்தின் மீது நேற்று அதிகாலை (22.06.14) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தெஹிவளை ஹில் வீதியில் அமைந்துள்ள பெண்களுக்கான ஆடை நிலையம் மீது அதிகாலையில் கற்கள் வீசித் தாக்கப்பட்டுள்ளதுடன்- கட்டிடத்துக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை நேற்றிரவு பாணந்துறை- சரிக்கமுல்லை மற்றும் வரக்காபொல, கணிதபுர பகுதிகளில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டுள்ளதுடன் மதுபோதையில் கும்பல் ஒன்றின் நடமாட்டமும் அவதானிக்கப்பட்டு உள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சிங்களக் கும்பல்கள் வாள்- கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பாணந்துறை வேரவத்த ஆற்றுக்கு அக்கரையில் திரண்டு சென்று முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்குத் தயாரானதாக பிரதேசமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் கிடைக்கப்பெற்றவுடன் அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இலங்கைப் பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
இதேவேளை பதுளையில் முஸ்லீம் அமைச்சர்களை அவசரமாகச் சந்தித்த ஜனாதிபதி வழமையான தன் வாக்குறுதிகளை அள்ளிவீச அந்த வாக்குறுதிகளில் மயங்கிய முஸ்லீம் அமைச்சர்களின் மயக்கம் தெளிய முன்பே தாக்குதல்கள் மிரட்டல்கள் தொடர்வதாக கொழும்பின் முஸ்லீம் புத்திஜீவி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/223.html

Geen opmerkingen:

Een reactie posten