[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 09:42.20 AM GMT ]
இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியொன்றை முஸ்லிம் பேரவை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், உயிரிழப்புகள், காயங்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான பாரிய வன்முறைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சம் அதிகாரித்துள்ளது.
அளுத்கமவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அங்கு நடத்தப்படவிருந்த பேரணியை தடுத்து நிறுத்துமாறு முஸ்லிம் பேரவை உட்பட முஸ்லிம் அமைப்புகளும் அரசியல்வாதிகளும் பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்ததையும் முஸ்லிம் பேரவை நினைவூட்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையும் கட்டாயமானதுமாக உள்ளது என்பது எமது எண்ணமாகும்.
நாட்டில் மீண்டும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த ஜனாதிபதியின் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றோம்.
கலாசாரங்களுக்கு மரியாதை வழங்குவது, இன மற்றும் மத சகிப்பு தன்மை என்பது இந்த நாட்டின் தொன்மையான பாரம்பரிய வளமாக இருந்து வந்துள்ளது.
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் நடந்த வன்முறைகள் தன்னிச்சையாக நடக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக பொதுபல சேனா, சிஹல ராவய, இராவணா பலய ஆகிய அமைப்புகள் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைகள் மீது மூலோபாயமாக திட்டமிட்டு, ஒருங்கிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அடிப்படைவாதிகள் முஸ்லிம் மற்றும் இதர சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக தொடர்ந்தும் வன்முறைகளை தூண்டி வருவது நிறுத்தப்பட வேண்டும்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடத்த தவறு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நடந்து விடக் கூடாது என்பது முக்கியமானது.
தனிப்பட்ட மோதல்கள் நாட்டில் இன வன்முறை நாட்டில் தொடர்ந்து விடக் கூடாது எனவும் இலங்கை முஸ்லிம் பேரவை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahqy.html
முஸ்லீம்களுக்கு எதிரான வன்செயல்கள் சிங்கள பௌத்த மேலாதிக்க இனவெறியின் மற்றுமொரு கோர முகம்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 09:35.06 AM GMT ]
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுவிபரம்:
கடந்த சில தினங்களாகத் தென்னிலங்கையில் மிகத் திட்டமிட்டு அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவன்செயல்கள் இன்றைய தினத்தில் (17.06.2014) மத்திய மலைநாட்டின் பதுளை போன்ற நகரங்களிலும் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.
சிறீலங்காவின் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள்
சிறீலங்காவின் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள்
செறிந்து வாழும் அளுத்கமை, தர்க்காநகர் ஆகிய பகுதிகளில் பௌத்த பல சேனாவின் நேரடி நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு எதிரான வன்செயல்களையும், அப்பாவி முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத் தலங்கள், பொருளாதார மையங்கள் குடியிருப்புக்கள் எல்லாம் நிர்மூலமாக்கபபட்டு, அவர்களை அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முயல்வதும், சிங்கள பௌத்த மேலாதிக்க அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாகவும், 1983இல் தமிழ்மக்களுக்கு எதிரான இனவெறி வன்செயலின் தொடர்ச்சியாகவுமே விளங்கமுடிகிறது.
இத்தகைய இனவழிப்பு செயற்பாடுகள் தொடர்வதனையும் தமிழ்மக்களைத் தொடர்ந்து முஸ்லீம் மக்களும் சிறீலங்காவின் இனவழிப்பு திட்டத்திற்கு பலிக்கடாக்களாக்கப்படும் அபாயம் வெளிப்படுவதையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவன்மையாகக் கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்திலும் பங்கேற்கிறது.
அதேவேளையில் இலங்கைத்தீவு முழுவதனையும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் குறியீடாக மாற்ற முயற்சிக்கும் சிங்கள பௌத்த தேசிய வன்முறையாளர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு எதிராகத், தமிழ்மக்களும் முஸ்லீம் மக்களும் ஒன்றாக இணைந்து போராடவேண்டிய உன்னதமான தருணம் வந்துவிட்டது என்பதனையும் நாம் விரைந்து சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இலங்கைத் தீவில் 1880ல் இந்திய வர்த்தகர்களுக்கு எதிராக அனகாரிக தருமபாலாவின் தலைமையிலான எதிர்ப்பும், 1883ஆம் ஆண்டு சிங்கள கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொட்டகேனா கலவரமும், 1915இல் சிங்கள் முஸ்லிம் கலவரமும் 1950இல் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிப்பும், 1956ஆம் ஆண்டு ஜூலை தமிழர்களுக்கு எதிரான களனிக் கலவரமும் ,1958, 1977 தமிழர்களுக்கெதிரான இனக்கலவரமும், 1983 தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு வன்செயலும், 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும், காலத்துக்குக்காலம் சிங்கள பௌத்த மேலாதிக்க வெறி கொண்ட தேசியவாதிகளால் சிறிலங்கா தீவினை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக்கும் இலக்குடன் முன்னெடுக்கப்பட்டன.
தற்போதைய முஸ்லிம்களுக்கெதிரான இனவன்செயல்களும் இந்த வரிசையில்தான் அமைகின்றன. சிறிலங்கா அரசு கலவரங்களைத் தமது அரசியல் இராணுவ இலக்குகளை அடையும்
கருவிகளாகவே வழிநடத்தினர். தமிழர்களுக்கெதிரான 1958, 1977 இனக்கலவரங்களும், 1983 இனவழிப்பு வன்செயல்களும் சிறிலங்கா அரசின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டவை
என்பதும் காலத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாகும்.
கருவிகளாகவே வழிநடத்தினர். தமிழர்களுக்கெதிரான 1958, 1977 இனக்கலவரங்களும், 1983 இனவழிப்பு வன்செயல்களும் சிறிலங்கா அரசின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டவை
என்பதும் காலத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாகும்.
போதி பல சேனாவின் கூட்டத்தைத் தடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் நிராகரிப்பும் போலிசாரின் செயலற்றமையும், தற்போதைய முஸ்லிம்களுக்கெதிரான இன வன்செயல்களும் சிறிலங்கா அரசின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான சான்றுகளாக அமைகின்றன.
இலங்கைத் தீவு சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமல்லாது, தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்ட இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறீஸ்தவர்கள் பௌத்தர்கள் ஆகியோரினதும் பாரம்பரிய தாயக பூமியாகும்.
தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் சிறிலங்கா தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமக்கென ஆள்புலத்தினையும் வாழ்வாதாரத்தினையும் பண்பாட்டுச் சுவடுகளையும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கொண்டிருந்தார்கள்.
காலத்துக்குக் காலம் செல்வாக்கு செலுத்திய சமயக்கோட்பாடுகளையும், மார்க்க நம்பிக்கைகளையும் உள்வாங்கிய மக்கள் மதங்களால் வேறுபட்டிருந்தும் , மொழியாலும்
மொழிசார் பண்பாட்டினாலும் ஒன்றுபட்டு செழுமைபெற்றனர். மதவெறியும் மேலாதிக்க உணர்வும் என்றுமே அவர்களைப் பிரிக்கவில்லை. பிரித்தாளும் அரசியல் தந்திரோபாயமும், அதிகாரப் போட்டிகளும் பெரும்பான்மை சனநாயகத்தின் தவிர்க்க முடியாத குறைபாடும் காரணிகளாக அமைந்து, இன்று தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தமது பாரம்பரிய தாயகத்திலும் மரபுரிமையான வாழ்விடங்களிலும் திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றார்கள்..
மொழிசார் பண்பாட்டினாலும் ஒன்றுபட்டு செழுமைபெற்றனர். மதவெறியும் மேலாதிக்க உணர்வும் என்றுமே அவர்களைப் பிரிக்கவில்லை. பிரித்தாளும் அரசியல் தந்திரோபாயமும், அதிகாரப் போட்டிகளும் பெரும்பான்மை சனநாயகத்தின் தவிர்க்க முடியாத குறைபாடும் காரணிகளாக அமைந்து, இன்று தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தமது பாரம்பரிய தாயகத்திலும் மரபுரிமையான வாழ்விடங்களிலும் திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றார்கள்..
அவர்களது பண்பாட்டு அடையாளங்களும் வாழ்வாதார வளங்களும் வழிபாட்டு உரிமைகளும் மேலாதிக்க இனஉணர்வு கொண்ட பெரும்பான்மையினரின் அதிகாரவெறிக்கு
பலியாக்கப்படுகின்றன.
பலியாக்கப்படுகின்றன.
இவற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கும் தன்னம்பிக்கையும் பொருண்மிய தற்சார்பும் தன்னாட்சியுரிமையும் கொண்ட வலுவான சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்கும், தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமிழ் மொழிபேசும் மக்கள் என்ற குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக வேண்டிநிற்கின்றேன்.
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahp7.html
இனவாதத்திற்கு எதிராக ஜே.வி.பி துண்டுப்பிரசுரம்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 09:14.05 AM GMT ]
அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கி வரும் பௌத்த இனவாத அமைப்புகள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஜே.வி.பி இன்று நாடு முழுவதும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.
ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தலைமையில் கொழும்பு கோட்டை ரெயில் நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahp6.html
யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 08:58.17 AM GMT ]
கடந்த 15ம் திகதி தொடக்கம் அளுத்கம பகுதியில் சிங்கள இனவாத அமைப்புக்களால் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில் சுமார் 4பேர் உயிரிழந்துள்ளதுடன், 80ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தும், பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிந்தும் உள்ளன.
இந்நிலையில் மேற்படி வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், சிறுபான்மை இனங்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமையினை கண்டித்தும் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது பெருமளவு முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பெருமளவில் கலந்து கொண்டிருந்த நிலையில் நண்பகல் 12.மணி தொடக்கம் 12.30 வரையான அரைமணி நேரம் மேற்படி போராட்டம் நடைபெற்றிருந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள், அளுத்கம சம்பவம் சொல்வது மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும், மத வழிபாட்டு தலங்களை உடைக்காதே. அரச பயங்கரவாதத்தை நிறுத்து, பொலிவியாவில் விருது அளுத்கமவில் வன்முறை, போன்ற கோஷங்களை பதாகைகளாக எழுதிக்கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த போராட்டம் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டது. எனினும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahp5.html
Geen opmerkingen:
Een reactie posten