[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 09:56.14 AM GMT ]
நாட்டை அமைதியற்ற சூழலுக்குள் தள்ளி அப்பாவி மக்களை பலி கொள்ளும் நீதியற்ற நிலையினை கண்டிக்க வேண்டிய காலத்தின் மிக முக்கியமான தருணத்தில் நடத்தப்படும் இந்த கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தில் தவறாது பா.உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் நகரசபை பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர் மனித உரிமை ஆர்வலர்கள் புத்திஜீவிகள் அனைவரும் கலந்துகொண்டு மானுடத்து எதிராக இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதிகள், அராஜகங்களை கண்டித்து நீதி கோரி குரல் கொடுக்குமாறும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து த.தே.கூட்டமைப்பு கவனயீர்ப்பு போராட்டம்
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahqz.html
சமூக வேலைத் திட்டங்களில் முன்னாள் போராளிகளே தீவிரம்: பொ. ஐங்கரநேசன்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 10:12.46 AM GMT ]
கடின உழைப்பு, செய்நேர்த்தி, பொதுநோக்குப் போன்ற நற்பண்புகளெல்லாம் இவர்களது தலைமைத்துவத்தால் இவர்களுக்கு ஊட்டிவளர்க்கப்பட்டவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பார்த்தீனியம் ஒழிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ பார்த்தீனியத்துக்கு 10 ரூபா என்று பணம் கொடுத்துக் கொள்வனவு செய்யும் திட்டமொன்றை வடமாகாண விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையில் பங்கேற்றவர்களுக்குப் பணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும்,
பார்த்தீனியம் விவசாயத்துக்கும் மனித உடல்நலத்துக்கும் மாத்திரம் அல்லாமல் உள்ளூர் தாவர இனங்களின் உயிர்ப்பல்வகைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள ஓர் அந்நிய ஊடுருவல் இனம் என்பதால்தான் அதனை ஒழிப்பதில் விவசாய அமைச்சு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.
பொதுமக்களின் பங்கேற்பு இல்லாமல் எந்த ஒரு திட்டமும் வெற்றி பெறாது. அதனால் வேலைக்கு உணவு, பணம் கொடுத்துக் கொள்வனவு என்று பொதுமக்களையும் பார்த்தீனியம் ஒழிப்பில் இணைத்துக்கொள்ளும் விதத்திலான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், பொதுமக்களின் பங்கேற்பு எதிர்பார்த்ததைவிடவும் குறைவாகவே உள்ளது.
போருக்குப் பிறகு, அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகையோடு எல்லாவற்றுக்கும் அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் சமூகமாக எமது சமூகம் மாறிவிட்டது. வீட்டு வாசலில் நிற்கும் பார்த்தீனியத்தைக்கூட இன்னொருவர் வந்து பிடுங்கவேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் விதிவிலக்காக, பார்த்தீனியம் ஒழிப்பில் முன்னாள் போராளிகள் பலர் விருப்பத்தோடு எங்களுடன் கைகோர்த்திருக்கிறார்கள்.
முன்னாள் விடுதலைப் புலிகள் தடுப்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் யாரும் குற்றவாளிகள் அல்லர். தங்கள் காலத்துக்குரிய பணியை நிறைவேற்றப்புறப்பட்டவர்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தில் இருந்து ஒதுங்கியும் பயந்து ஒடுங்கியும் வாழுகின்ற நிலையே இன்று நிலவுகிறது.
இந்நிலை மாற்றப்பட வேண்டும். போராளிகள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. போராளிகளைப் பணியில் இணைத்துக்கொள்வதற்கும் யாரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. அர்ப்பணிப்பு உணர்வும் செயலூக்கமும் மிக்க ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளையும் உள்வாங்கக்கூடிய வேலைத்திட்டங்களை அடையாளங்கண்டு முன்னெடுப்பது நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு. எல். எம் ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் கி.சிறீபாலசுந்தரம், அ. சகீலாபானு, மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ. சிவபாதம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந. சுதாகரன் மற்றும் விவசாயப் போதனாசிரியர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
500 கிலோவுக்கும் அதிகமான பார்த்தீனியத்தை வழங்கியவர்களுக்குப் பணத்தோடு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahq1.html
90 வீதமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 09:59.17 AM GMT ]
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, நிலாவெளி, குச்சவெளி, புல்மோட்டை உட்பட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அதேவேளை கண்டியில் பெரும்பாலான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பில், மருதானை, ஆமர் வீதி, புறக்கோட்டை, கிராண்டபாஸ், மாளிகாவத்தை பகுதிகளிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கொழும்பில் பதற்றங்கள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இன்று காலை முதல் முக்கியமான இடங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே வவுனியா நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளதுடன் தமிழர்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் வழமை போல் இயங்கி வருகின்றன.
கொழும்பு, வாழைச்சேனை, யாழ் மற்றும் வவுனியா, ... முஸ்லிம்கள் ஹர்த்தால்
அளுத்கம தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் இன்று வியாழக்கிழமை இரண்டாவது முறையாகவும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும், அவஸ்தைக்குள்ளாக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளைக் கண்டித்து அமைதியான சாத்வீக கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இந்த ஹர்த்தால் இடம்பெறுகின்றது.
இதனால் அரச, தனியார் நிறுவனங்களும், காரியாலயங்களும், வர்த்தக நிலையங்கள் என்பன முற்றாக அடைக்கப்பட்டிருந்தது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருப்பதனைக் காணக்கூடியதாக இருந்தது.
தற்போது இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையால் பாடசாலைகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்க வீதிகளில் பரவலாக பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ் மற்றும் வவுனியாவிலும் ஹர்த்தால்
சிங்கள இனவாத அமைப்பினால் அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் சமபவத்தினைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த கடையடைப்புப் போராட்டத்திற்கான அழைப்பினை முஸ்லிம் உரிமைக்கான அமைப்பு விடுத்திருந்தது.
அதன்படி இன்றைய நாள் முழுதும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, அமைதியான முறையில் தமது கண்டனத்தினைத் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த மாவட்டங்களிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் வழமை போன்று இயங்கி வருகின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா முஸ்லிம் வர்த்தகர் சங்கம், 'அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்த தாக்குதல் சம்பவமானது, நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என அச்சங்கம் கூறியது.
கொழும்பில் ஹர்த்தால்
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று முஸ்லிம்களால் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டித்தே இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி கொழும்பு புறக்கோட்டை கொம்பனிவீதி கண்டி போன்ற இடங்களில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்காரணமாக முஸ்லிம்களின் கடைகள் மூடப்பட்டுள்ளன
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahq0.html
Geen opmerkingen:
Een reactie posten