தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

குர்ஹாம் ஷெய்க் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆயுதங்கள் தற்போது !

சங்கானையில் போட்டி போட்டு ஓட்டிய இ.பொ.ச சாரதி: பஸ் வீட்டுக்குள் புகுந்தது !
04 June, 2014 by admin
கரைநகரில் இருந்து யாழ் வந்து கொண்டிருந்த அரச பேரூந்து தனியார் மினிவானுடன் போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்து கொண்டிருந்த ஐஸ்கிறீம் வானுடன் மோதி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து கொண்டது.

சங்கானை 7ம் கட்டடைப் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற இந்த விபத்தில் பயணிகள் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர். பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




|http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6924


புகைப்படம் எடுக்கும் விமானத்தை வைத்து கதையோட்டிய சிங்கள ஊடகங்கள் !
04 June, 2014 by admin


சிங்கள ஊடகத்தில் எது வந்தாலும் அதனை அப்படியே மொழிபெயர்த்து, வெளியிட்டுவிடவேண்டும் என்று சில தமிழ் இணையங்கள் உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் யாழில் ஆளில்லா வேவு விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் அதி நவீன கமரா பொருத்தப்பட்டு இருந்ததாகவும் பெருஞ்செய்திகள் வெளியாகி இருந்தது யாவரும் அறிந்ததே. இது புலிகளுடையதாக இருக்கலாம் என்று கூட சில இணையங்கள் சந்தேகங்களை கிளப்பியது. ஆனால் உண்மையில் இந்த சிறிய ரிமேட் கன்றோல் விமானம் கொழும்பில் இயங்கிவரும் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானதாகும். வர்த்தக விளம்பரங்களை படம் எடுக்கும்போது, சிலவேளைகளில் ஆகாயத்தில் இருந்து எடுக்கவேண்டி இருக்கும். அப்படி படம் எடுக்கவே இதனைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். 

இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்கவிடம் நிருபர்கள் கேட்ட போது, கடந்த 2ம் திகது, பொலிசாரால் மீட்கப்பட்ட சிறியரக விமானமானது தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படுத்தளுக்காக பயன்படுத்தப்பட்ட விமானமாகும். இந்த நிறுவனம் மொனராகலை, தம்புள்ளை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதேபோல யாழ்ப்பாணத்திலும் அவர்கள் விளம்பர நடவடிக்கையை மேற்கொள்ளும் போதே அதற்குரிய மின்சக்தி (பற்றரி சார்ஜ்) போதியதாக இல்லாமல் அது விடுதியின் மேல் விழுந்துள்ளது. அந்த விமானம் 100 மீற்றர் தூரத்திற்கு பறக்க கூடியதாகும். இந்த விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியினையும் அவர்கள் பெற்று இருக்கின்றனர். 

அதற்குரிய அனுமதிக் கடிதங்களை எமக்கு காட்டியதுடன், குறித்த விமானத்தின் அடையாளத்தையும் எமக்கு கூறியதை அடுத்து அந்த சிறிய ரக விமானத்தை உரியவர்களிடம் கையளித்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவெளை இந்த விமானம் யாழில் உளவு பார்த்தாகவும் ஆனால் திடீரென விழுந்துவிட்டதாகவும் சில ஊடங்கள் பரபரப்பு தகவல் எழுதியுள்ளது. என்ன கொடுமை சரவணா !
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6923
குர்ஹாம் ஷெய்க் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆயுதங்கள் தற்போது !
04 June, 2014 by admin


பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் ஷெய்க் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஷெய்க் கொலை வழக்கு தொடர்பிலான விசாரணைகளின் போது, அரசாங்க இரசாயன பகுப்பாய்க்ளர் இதனைத் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்லிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ஷெய்க்கின் உடலில் காணப்பட்ட தோட்டாக்கள் ஆகியன, சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகளிலிருந்து வெளியானவை என்பதனை உறுதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகளின் போது சாட்சியளித்த பகுப்பாய்வாளர் குணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையன்று குர்ஹாம் ஷெய்க் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்டதுடன், அவரது ரஸ்ய காதலி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தார்.இந்த சம்பவத்துடன் தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதான பத்திரன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

காஸா நிலப்பரப்பில் தன்னார்வ தொண்டராக பணியாற்றி வந்த ஷெய்க் விடுமுறைக்காக இலங்கை சென்றிருந்த போது தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். ஷெய்க் கொலை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், பிரித்தானிய முடிக்குரிய இளவசரர் சார்ளஸ் ஆகியோரும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தில் ஐந்து தோட்டாக்களை மீட்டதாக குணதிலக்க குறிப்பிட்டு;ள்ளார்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6922

Geen opmerkingen:

Een reactie posten