[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 07:45.38 AM GMT ]
மாணவிகளை பாடசாலைக்கு ஏற்றி வந்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் 6 மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அட்டாளைச்சேனை பாலத்தடி வீதியால் மாணவிகளை பாடசாலைக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்திற்குள்ளானதால், முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலை மாணவிகள் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரு மாணவிகளுக்கு தலை, கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஏனைய நான்கு மாணவிகள் சிறுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மோட்டார் சைக்கிளில் ஓட்டி வந்தவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்துக்களில் 4 பேர் பலி
நாட்டில் சில இடங்களில் இன்று நடந்த விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெஹிவளை அத்திட்டிய விகாரை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகரகம - மொறட்டுவ இடையிலான இலக்கம்- 192 பஸ்ஸில் மோதுண்டு 55 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் பஸ்ஸை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதேவேளை முந்தல் பொலிஸ் பிரிவின் உடப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 65 வயதான நபர் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் மோதுண்டு இவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் மாரவில கிறிகம்பளை குடியிருப்பு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே பலங்கொட கிறிந்திகல பிரதேசத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதிய விபத்தில் 28 வயதான இளைஞர் உயரிழந்துள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZfx7.html
யாழ்.திக்கம் வடிசாலை அதிகாரப் பிடிக்குள் சீரழிவதை தடுக்க வேண்டும்: சிறீதரன் எம்பி
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 07:14.03 AM GMT ]
யாழை்.மாவட்டத்தில் இருக்கும் திக்கம் வடிசாலை அதிகாரப் பிடிக்குள் சிக்குண்டு இருப்பதால், தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வட பகுதியில் எமது மக்களில் காலம்காலமாக கள் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் சீவல் தொழிலாளிகள் வாழ்வு இன்று அதிகாரப் பிடிக்குள் சிக்குண்டு சீரழியும் நிலையில் இருக்கின்றது.
இணக்க அரசியல் என்ற போர்வையில் அரசாங்கத்தோடு இணைந்து, வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் தாரைவார்த்துக் கொடுப்பதிலும் தமிழர்களுக்கு எதிரான எல்லா அநீதிகளுக்கும் துணை போவதையும் தமது பிரகடனப்படுத்தப்படாத கொள்கையாக கொண்டு செயற்படுகின்ற கட்சியும் அதன் அமைச்சரும் சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்துள்ளனார்.
தொழில் ரீதியாக தமிழர் பொருளாதாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பங்காற்றி வருகின்ற சீவல் தொழிலாளிகளின் வாழ்வாதாரமான திக்கம் வடிசாலையை தமது சுயநல நோக்கங்களுக்காக கைப்பற்றி அதன் மூலம் கொள்ளை இலாபத்தை உழைக்கவும் தென்னிலங்கை பணமுதலைகளுக்கு பங்குகளை தாரைவாரக்கவும் முனையும் நோக்கில் திக்கம் வடிசாலையை இயங்கவிடாமல் மூடி வைத்திருக்கின்றார்கள்.
இதன் மூலம் யாழ். மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்த சீவல் தொழிலோடு பிணைந்திருக்கின்ற தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் எதிர்காலத்தில் நிர்க்கதியாகும் நிலை ஏற்படுத்தப்படுகின்றது.
அன்றாட சீவியத்திற்கான தொழில் நிலையில் இருந்து வளர்ந்து கூட்டுறவு மயப்படுத்தப்பட்ட ஒரு நிறுவன ரீதியான நிலைக்குள் யாழ். மாவட்டத்தை சேர்ந்த முன்னைய நல்லெண்ணம் படைத்தவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ள சீவல் தொழிலாளர்களின் பயணமும் வளர்ச்சியும் இன்று தடைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது திக்கம் வடிசாலையில் 5கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய மதுசாரம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மதுசாரத்தை கொழும்பிற்கு கொண்டு செல்கின்ற நடவடிக்கையில் தற்போது வடபகுதி அமைச்சர் ஒருவர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தொழிலாளிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இந்த நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாறாக திக்கம் வடிசாலை திறக்கப்பட்டு யாழ். மாவட்ட சீவல் தொழிலாளர்களின் எதிர்காலம் சிறக்க அக்கறையுள்ள அனைவரும் முன்வர வேண்டுவதுடன், இத்தகைய தொழிலாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல்கொடுக்கவும் செயற்படவும் முன்வர வேண்டும்.
மணித்தியாலத்துக்கு 1350 லீற்றர் உற்பத்தி செய்யக்கூடிய வட பகுதியின் மிகப்பெரிய வடிசாலையான திக்கம் வடிசாலை மூடிப்பட்டிருப்பதன் பின்னணியில் சுயநலனைத்தவிர எந்தவித பொதுநோக்கமும் இல்லை.
இலங்கையில் தெற்கு கித்துளால் அடையாளப்படுத்தப்படுவதுபோல வடபகுதி பனையாலும் பனம் கள்ளாலும்தான் அடையாளப்படுத்தப்படுகின்றது.
இந்த பனையும் பனம் கள்ளும் அதனுடானான உற்பத்தியும் வழிமுறைகளும் சரியாக கவனிக்கப்பட்டால் சந்தையில் செயற்கைபான உற்பத்திகளோடு போட்டி போடுகின்ற நம்பிக்கையும் எதிர்காலம் பற்றிய தூரநோக்கும் வடபகுதி சீவல் தொழிலாளர்களிடம் உண்டு.
யாழ். மாவட்டத்தில் ஏராளம் கள் விற்பனை நிலையங்கள் உள்ளன. அதன் மேலாக பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் அதன் மேலாக சமாசங்கள் உள்ளன.
அனைத்தின் அடிப்டையாகவும் அடித்தளமாகவும் மிகவும் ஆபத்தான தொழிலை செய்யும் சீவல் தொழிலாளர்களே இருக்கின்றார்கள்.
கள் இறக்கும் போது இருக்கக்கூடிய வலிகள் அவர்களுக்கே தெரியும். அது பெரிது. சிறு சிறு சேமித்து அந்த தொழிலாளிகள் தமது அன்றாட சீவியத்தை ஓட்டுகின்ற நிலையை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று யாழ். மாவட்டத்தில் அருந்தியது போக எஞ்சி இருக்கின்ற கள் வெறுமனே ஊற்றப்படுகின்ற நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் திக்கம் வடிசாலை மூடப்பட்டு இருப்பதே.
திக்கம் வடிசாலை என்பது வெறுமனே சாராய உற்பத்தி நிறுவனம் அல்ல, அதனுடாக ஏராளம் உப உற்பத்திகளும் சந்தைக்கு வரும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியதாக இருக்கின்றது.
எமது மண்ணின் தொழிலாளர்களின் எண்ணத்தால் வியர்வையால் உருவான திக்கம் வடிசாலை தமது சுயநல நோக்கங்களுக்காகவும் எங்கிருந்தோ வரும் முதலாளிகள் வருமானம் பெற்றுக் கொள்வதற்காகவும் கைமாறும் நிலையை யாவரும் கண்டிப்பதுடன் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வடபகுதி மக்கள் பிரதிநிதிகள் முயலவேண்டுமென வேண்டிக் கொள்ளவேண்டியது இந்த காலத்தின் கடமையாக இருக்கின்றது.
அரசாங்கத்தோடு, சேர்ந்து நிற்கும் வடபகுதி அதிகார தரப்பால் தாம் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தமக்காக குரல்கொடுக்க யாரும் இல்லையா என ஏக்கத்துடன் யாழ் மாவட்டத்தின் சீவல் தொழிலாளிகளின் இன்றைய நிலை காணப்படுகின்றது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நம் எல்லோரதும் கடமையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZfx5.html
படையினரே வடக்கில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணம்: சி.வி.விக்னேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 06:35.12 AM GMT ]
வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் செய்த போதே முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இராணுவத்தினர் பலர் நிலை கொண்டிருப்பதே காணி சுவீகரிப்பு, மீன்பிடி தொழில் சார்ந்த பிரச்சிரைன உட்பட வடக்கில் அடிப்படையான பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
பாதுகாப்பு படையினர் காணிகளை கைப்பற்றியுள்ளதன் காரணமாகவே அவற்றின் உரிமையாளர்களான மக்கள் அந்த காணிகளில் வசிக்கவும் விவசாயத்தில் ஈடுபடும் உரிமையும் இல்லாமல் போயுள்ளது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZfx0.html
Geen opmerkingen:
Een reactie posten