[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 07:59.54 AM GMT ]
ஜனநாயகக் கட்சிக்கு பத்து லட்சம் வாக்காளர்கள் ஆதரவளித்து வருகின்றனர்.
ஜே.வி.பி கட்சிக்கும் ஆறு லட்சம் வரையிலான வாக்காளர்கள் ஆதரவளித்து வருகின்றனர்.
நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளுக்கு அடுத்த நிலையில் ஜே.வி.பி மற்றும் ஜனநயாகக் கட்சி ஆகியன திகழ்கின்றன.
எனவே, ஜனநயாகக் கட்சியை எவரும் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது.
பொதுத் தேர்தலுக்கு சென்றாலும், ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றாலும் எமது பலத்தை யாராலும் மறந்து விட முடியாது.
அரசியல் சாசனத்தை மாற்றுவதாகவும், நிபந்தனைகளை விதிப்பதாகவும் தேவதைக் கதைகளைக் கூறி வரும் சில கட்சிகளுக்கு காய்ச்சல் எடுக்கத் தொடங்கியுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeoy.html
முல்லைத்தீவில் புலனாய்வாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 06:51.39 AM GMT ]
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு நேற்றுமுதல் இராணுவ புலனாய்வாளர்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, இருந்த நிலையில் இன்று அவற்றை தகர்த்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முல்லை மண்ணில் காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணாமல் போனவர்கள் தொடர்பில் வழக்கு விசாரணை ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில், அவ் உறவுகளின் குரல்களை பலப்படுத்தும் வகையில் இன்று முல்லைத்தீவு கச்சேரிக்கு அண்மையாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது.
காணாமல் போனோருக்கான ஆர்ப்பாட்டம் ஒன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் தலைமையில் நீதிமன்றத்திற்கு முன்னர் நடாத்த இருப்பதாகவும் அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் முன்னர் பொலிசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற இருந்த கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு முல்லைத்தீவில் ரவிகரன் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ளவிருந்த காணாமல் போனோரின் உறவுகளுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக ரவிகரனுக்கும் அனந்தி சசிதரனுக்கும் மக்கள் தகவல்களை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் இராணுவப் புலனாய்வாளர்களின் முயற்சிகளை தகர்க்கும் பொருட்டு, முல்லைத்தீவு பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டும் அவர்களையும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முயற்சிகளை முன்னெடுத்தார்.
இதனையடுத்து, இன்று காலை இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே ஆங்காங்கே இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு நிகழ்வுகளை அவதானிக்க விடப்பட்டிருந்தனர்.
அவர்களின் அழுத்தங்களை மீறியதாய் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காணாமல் போன உறவுகளுக்காய் குரல் கொடுத்து தமது கவலையினையும் கோபத்தினையும் வெளிப்படுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், ரவிகரன், சிவாஜிலிங்கம், அன்ரனி ஜெகநாதன், மேரி கமலா குணசீலன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மணிவண்ணன் ஆகியோருடன் வலிவடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் விதத்தில் இரண்டு பேரூந்து வண்டிகளில் மக்கள் வருவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கைகள் அவர்களால் ஏற்படுத்தப்பட அங்கு அவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. பின்னர் பொலிசாரின் கட்டுப்பாட்டில் குழப்ப வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட மீண்டும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து சுரேஸ் பிரேமச்சந்திரன், அன்ரனி ஜெகநாதன், சிவாஜிலிங்கம், கஜேந்திரன், ரவிகரன் ஆகியோர் தமது உரைகளையாற்றி 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZfx2.html
Geen opmerkingen:
Een reactie posten