தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

ஐநா. பிரதி தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு மீண்டும் ஒரு வருடத்திற்கு பதவி நீடிப்பு!


அளுத்கம சம்பவமே இறுதியானதாக இருக்க வேண்டும்: விமலஜோதி தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 03:13.36 AM GMT ]
அளுத்கம சம்பவமே இறுதியானதாக இருக்க வேண்டும். நாட்டில் இதுபோன்ற இனியொரு சம்பவம் இடம்பெற அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது என்கிறார் தெஹிவளை – நெதிமால பெளத்த கலாசார நிலையத்தின் அதிபர் கிரம விமலஜோதி தேரர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியவாதிகள் எமது நாட்டின் மீது அழுத்தம் செலுத்துவதற்கு இத்தகைய சம்பவங்கள் துணையாக அமையும். எனவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற அனுமதிக்க முடியாது.
சாசனம், சம்புத்த ஜயந்தி மன்றத்தின் வேலைப்பளு காரணமாக தாம் பொதுபல சேனாவின் செயற்பாடுகளில் இருந்து கடந்த எட்டு மாதங்களாக விலகி இருப்பதாகவும் வேகமான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் காலகட்டத்தில் இனங்களுக்கு இடையில் சக வாழ்வை சீர்குலைக்க மதவாதிகளுக்கு செயற்பட இடமளிக்க முடியாதென்றும் தேரர் தெரிவித்தார்.
2500 ஆண்டுகளுக்கும் மேல் எழுத்து மூல வரலாறு கொண்ட பெளத்தர்கள் வாழும் ஒரே நாடு இலங்கையாகும்.
சகல இனத்தவரும் ஐக்கியமாகவும், சக வாழ்விலும் ஈடுபட்டுள்ளனர். மதவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிறு குழுவினர் காரணமாக தேசிய ஒற்றுமைக்கும் சக வாழ்வுக்கும் தடை ஏற்பட ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அளுத்கமை பகுதியில் நடந்த சம்பவங்களின்போது பல அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து செயற்பட்ட முறையை நான் அனுமதிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஐநா. பிரதி தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு மீண்டும் ஒரு வருடத்திற்கு பதவி நீடிப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 04:53.19 AM GMT ]
ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிப் பிரதிநிதி பதவியில் உள்ள போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு, நியூயோர்க் பணியில் மேலும் ஓராண்டு காலத்துக்குப் பணிநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூதுவருக்கான தரநிலை அந்தஸ்தைக் கொண்டுள்ள அவருக்கு ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதி பிரதிநிதி பதவியில் ஏற்கனவே ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிவிலியன் பேரில் அவருக்கு இப்போது ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுற்ற நிலையில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஜெனரல் சவீந்திர சில்வாவின் பெயரும் அதிகம் அடிபட்டு அவர் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற நிலையில் இவ்வாறு மீண்டும் பதவிநீடிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten