கிளிநொச்சியில் பௌத்த விகாரை ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் பொலன்நறுவ ஆட்சிக்காலத்தில் அங்கிருந்த பௌத்த விகாரைக்குரிய ஆதாரங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் 66-2 பிரிகேட்டின் கீழுள்ள 20வது இலகு காலாற்படைப் பிரிவினரால், இந்த பௌத்த விகாரையின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, தொல்பொருள் ஆய்வு நிபுணர்களுடன் அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, சுமார் 60 அடி விட்டமும், 12 அடி உயரமும் கொண்ட தாதுகோபத்தின் சிதைவுகள், பழங்கால செங்கல் அடுக்குகள். பாதச்சுவடுகள் பதிந்த கல், கற்தூண்கள், போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
இவை பொலன்நறுவ ஆட்சிக்காலத்தில், அங்கிருந்த பௌத்த விகாரை ஒன்றினது சிதைவுகள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தப் பகுதியில், விரைவில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு இந்தப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்தப் பகுதியில், 1940ம் ஆண்டு வரை ஒரு பிள்ளையார் கோவில் இருந்ததாகவும், அதன் பின்னர், 1980களில் சிவன் கோவில் கட்டப்பட்டதாகவும் அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
1965இல், இந்தப் பகுதியைத் துப்புரவு செய்த ஆலயக் குருக்கள், 4-6 அடி உயரமுள்ள, சமாதி நிலை புத்தர் சிலை ஒன்றைக் கண்டெடுத்ததாகவும், அதனையும், அந்தப் பகுதியில் காணப்பட்ட அரச மரம் ஒன்றையும் பின்னர் புலிகள் அழித்து விட்டதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZfw6.html

கிளிநொச்சி மற்றும் உருத்திரபுரம் பகுதிகளில், புத்தரின் புராதன சின்னங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தொல்பொருள் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். குறித்த இந்தப் பகுதியில் ஸ்ரீ பாத(அதாவது சினனொளி பாத மலை) யில் உள்ளதுபோன்ற புத்தரின் கல்வெட்டுக்கள் மற்றும் புராதன பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியை சுற்றிவளைத்துள்ள இலங்கை இராணுவத்தினர் , அப்பகுதியில் முன்னர் சிங்கள மக்களே வசித்து வந்தார்கள் என்று கூறியுள்ளார்கள். இரவோடு இரவாக சில கல்பாறைகளை அங்கே போட்டுவிட்டு இராணுவத்தினர் இவ்வாறு கூறுகிறார்கள் என்று பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை இராணுவத்தினர் புலிகளையும் இவ்விடையத்தில் சாட மறக்கவே இல்லை !
இந்த புராதன சின்னங்களை புலிகள் முதலிலேயே கண்டு பிடித்துவிட்டார்கள் என்றும், ஆனால் அவர்கள் அதனை அழித்துவிட்டதாகவும் இராணுவத்தினர் கூறிவருகிறார்கள். பல கற்கள் மற்றும் புராதன சின்னங்களை புலிகள் வேண்டும் என்றே அழித்துவிட்டதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்துள்ளார்கள். இப்பகுதியில் அகழ்வுவேலைகள் ஆரம்பமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இனி கிளிநொச்சியும் , சிங்களவர்களின் பூர்வீக இடமாக மாறிவிடும் போல இருக்கே ?
கிளிநொச்சியில் புத்தர் வாழ்ந்த புராதன சின்னங்கள் உள்ளதாம்: சிங்களத்தின் கண்டுபிடிப்பு !
05 June, 2014 by admin
கிளிநொச்சி மற்றும் உருத்திரபுரம் பகுதிகளில், புத்தரின் புராதன சின்னங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தொல்பொருள் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். குறித்த இந்தப் பகுதியில் ஸ்ரீ பாத(அதாவது சினனொளி பாத மலை) யில் உள்ளதுபோன்ற புத்தரின் கல்வெட்டுக்கள் மற்றும் புராதன பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியை சுற்றிவளைத்துள்ள இலங்கை இராணுவத்தினர் , அப்பகுதியில் முன்னர் சிங்கள மக்களே வசித்து வந்தார்கள் என்று கூறியுள்ளார்கள். இரவோடு இரவாக சில கல்பாறைகளை அங்கே போட்டுவிட்டு இராணுவத்தினர் இவ்வாறு கூறுகிறார்கள் என்று பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை இராணுவத்தினர் புலிகளையும் இவ்விடையத்தில் சாட மறக்கவே இல்லை !
இந்த புராதன சின்னங்களை புலிகள் முதலிலேயே கண்டு பிடித்துவிட்டார்கள் என்றும், ஆனால் அவர்கள் அதனை அழித்துவிட்டதாகவும் இராணுவத்தினர் கூறிவருகிறார்கள். பல கற்கள் மற்றும் புராதன சின்னங்களை புலிகள் வேண்டும் என்றே அழித்துவிட்டதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்துள்ளார்கள். இப்பகுதியில் அகழ்வுவேலைகள் ஆரம்பமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இனி கிளிநொச்சியும் , சிங்களவர்களின் பூர்வீக இடமாக மாறிவிடும் போல இருக்கே ?
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6930
Geen opmerkingen:
Een reactie posten