குர்ஹாம் ஷெய்க்கை கொலை செய்த ஆயுதங்கள் அடையாளம்
பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் ஷெய்க் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஷெய்க் கொலை வழக்கு தொடர்பிலான விசாரணைகளின் போது, அரசாங்க இரசாயன பகுப்பாய்hளர் இதனைத் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்லிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ஷெய்க்கின் உடலில் காணப்பட்ட தோட்டாக்கள் ஆகியன, சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகளிலிருந்து வெளியானவை என்பதனை உறுதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸா நிலப்பரப்பில் தன்னார்வ தொண்டராக பணியாற்றி வந்த ஷெய்க் விடுமுறைக்காக இலங்கை சென்றிருந்த போது தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். ஷெய்க் கொலை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், பிரித்தானிய முடிக்குரிய இளவசரர் சார்ளஸ் ஆகியோரும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தில் ஐந்து தோட்டாக்களை மீட்டதாக குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/71913.html
துப்பாக்கிச்சூட்டில் பஸ் நடத்துனர் பலி
பஸ் நடத்துனரான பிரஹாத் சந்தன (வயது 34) தங்கல்ல பஸ் தரிப்பிடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.jvpnews.com/srilanka/71929.html
Geen opmerkingen:
Een reactie posten