இலங்கை பெண் எம்.பிக்கள் அமெரிக்காவில்
இலங்கை நாடாளுமன்றத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஷ்வாலைச் சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்பற்றி எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்து இந்தச் சந்திப்பில் இலங்கை எம்.பி.க்கள், நிஷாவிடம் விளக்கினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது என்று தெரியவந்தது.
http://www.jvpnews.com/srilanka/71932.html
கொழும்பில் போலிக் கடன் அட்டைகளுடன் நான்கு பேர் கைது!
பெருமளவு போலிக் கடன் அட்டைகளுடன் நான்கு பேர் கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 437 போலி கடன் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் நெல்லியடி, திருகோணமலை, வெள்ளவத்தை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்படும் கருவிக்ள மற்றும் 40 ஆயரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71939.html
அமைச்சுச் செயலருக்கு அழைப்பாணை
சதொச கட்டடத்தின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, உடைக்கப்பட்ட காண்ணாடிக் கதவுகளில் பதிவாகியுள்ள கை ரேகை அடையாளங்கள் குறித்த அமைச்சரின் செயலாளரின் கை ரேகையுடன் ஒத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சந்தேக நபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சதொச தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவின் செயலரை எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71936.html
Geen opmerkingen:
Een reactie posten