தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்துள் அத்துமீறி நுழைந்த இராணுவம்!

றிசாட் பதியுதீனின் ஏற்பாட்டில், பாரதிபுரம் மக்களை அச்சுறுத்திய பாகிஸ்தானிய பிரஜைகள்!
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 12:16.36 AM GMT ]
வவுனியா பாரதிபுரத்தில் உள்ள தமிழ் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறுää பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பேர் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச வாசிகளின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் குழு ஒன்றே இந்த அச்சுறுத்தலை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் பாகிஸ்தான் நிறுவனம் ஒன்று தொழிற்சாலை அமைக்கவிருப்பதாகவும், உடனடியாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
அவர்களுடன் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் சிலரும் வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfq6.html

யேர்மனி மற்றும் பிரான்ஸில் மலேசியா தூதரகத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 02:40.22 AM GMT ]
புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.
இவ் நடவடிக்கைக்கு எதிராக கடந்த நாட்கள் யேர்மனியில் பேர்லின் மற்றும் பிராங்க்போர்ட் நகரிலும் பிரான்ஸ் நாட்டிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
யேர்மனியில் பேர்லினில் மலேசியா தூதரகத்துக்கு முன்னரும் பிராங்க்போர்ட் நகரில் மலேசியா துணைத்தூதரகத்துக்கு முன்னரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டது.
நிகழ்வில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பதாகைகள் மக்களால் ஏந்திய வண்ணம், மலேசியா பாதுகாப்பு தேடி புகலிடம் தேடி வருபவர்களை சிங்கள பேரினவாத அரசிடம் திருப்பி அனுப்ப கூடாது எனவும் கோரப்பட்டு மனு கையளிக்கப்பட்டது.
பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையால் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனதுக்கு முன்னரும் கவனயீர்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.இக் கவனயீர்ப்பில் மலேசியா தமிழ் மக்களை சிங்கள கொலைக்களத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் மனு கையளிக்கப்பட்டது.
சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக அப்பாவித் தமிழர்களை நாடுகடத்தி, சித்திரவதைக்கும் கடூழியச் சிறைக்கும் இனவழிப்புக்கும் துணைபோகும் தமிழர் விரோதப் போக்குடைய நாடுகளுக்கு எதிராக நியாயக் குரல்களை எழுப்பி, உலகத் தமிழர்கள் போராட வேண்டியது மிகவும் அவசியமாகும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfr2.html
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்துள் அத்துமீறி நுழைந்த இராணுவம்!
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 12:05.54 AM GMT ]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.நகரின் 3ம் குறுக்குத் தெருவிலுள்ள தலைமை அலுவலகத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இராணுவத்தினர் அத்துமீறி உள் நுழைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நேற்று மாலை ஐந்து மணியளவில் சிவிலுடையில் சென்ற இராணுவத்தினரே கட்சி அலுவலகத்தில் புகுந்து விபரங்களை திரட்டிச்சென்றுள்ளனர்.
எனினும் விபரங்கள் சேகரிப்பதாயின் பொலீசார் வந்திருக்க முடியுமெனவும், அப்படியிருக்க இராணுவத்தினர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை தம்மை அச்சுறுத்தும் செயற்பாடு என கட்சித் தலைமை கருத்து வெளியிட்டுள்ளது.
சம்பவ வேளையில் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfq5.html

Geen opmerkingen:

Een reactie posten