தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

இந்தியாவின் வெளிவிவகார கொள்கை இலங்கை தமிழர்களுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்!- ஹிந்துஸ்தான் டைம்ஸ்


ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 03:24.35 PM GMT ]
இலங்கை மத்திய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக புலனாய்வு தரப்பில் சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் தகவல் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த ஆறு அமைச்சர்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டையும்,  செயற்பாட்டையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் தொடர்புகளை வைத்திருக்கும் நபர்கள், அன்றாட செயற்பாடுகள், தொலைபேசி உரையாடல்கள் போன்றவற்றை கண்காணிப்பதற்காக புலனாய்வு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தர்கா நகரில் காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிறப்பு அதிரடிப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 03:20.04 PM GMT ]
அளுத்கம பகுதியில் கடந்த வாரம் பேரணி நடத்திய பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவே சிறப்பு அதிரடிப் படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுவதற்கு, பௌத்த அடிப்படைவாத குழு ஒன்று மேற்கொண்ட பேரணியே காரணமாக அமைந்திருந்தது.
இதன் போது 900 சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும் அவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ள அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர, முஸ்லிம்களுக்கு இல்லை என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய காடையர்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக, பாதுகாப்பு தரப்பில் குறித்த ஊடகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் குறித்த ஊடகம் இந்த செய்தியை பிரசுரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வெளிவிவகார கொள்கை இலங்கை தமிழர்களுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்!- ஹிந்துஸ்தான் டைம்ஸ்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 03:20.57 PM GMT ]
இலங்கை தொடர்பில் கொள்கை வகுக்கப்படும் போது, இலங்கை தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்க இந்தியா இலங்கையை வலியுறுத்தி வந்தது.
ஆனால் கடந்த ஒரு தசாப்தமாக இந்தியாவின் வலியுறுத்தல்களை எந்த ஒருநாடும் பின்பற்றாத நிலையே காணப்படுகிறது.
இலங்கையிலும் இந்தியாவுக்கு இதே நிலைமை காணப்படுகிறது. இந்தியாவின் ஸ்திரமற்ற வெளிவிவகார கொள்கையே இதற்கு காரணம்.
ஆனால் புதிய பிரதமர் நரேந்திர மோடி இந்த நிலைமையை மாற்றி அமைப்பார் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
இந்தநிலையில் இலங்கை தொடர்பில் கொள்கை வகுக்கப்படும் போது, தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக் கொடுக்கவும் இந்தியா முன்னிற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten