[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 03:34.35 PM GMT ]
இது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி இளம் அரசியல் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த ஊடகங்களில் இடம்பெறும் வெறுப்பை உண்டாக்கும் பேச்சுக்களால் நாட்டின் இயல்புநிலை மேலும் பாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆளும் கட்சியின் வசந்த சேனாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரின் பெர்ணான்டோ, நிரோசன் பெரேரா, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஹுனைஸ் பாரூக், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செஹான் சேமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ரகு பாலசந்திரன் ஆகியோரே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் அனைத்து பிரிவினரும் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். அதேநேரம் அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உதவ வேண்டும்.
இந்தநிலையில் நம்பிக்கை, மரியாதை மற்றும் நல்லெண்ணம் என்ற அடிப்படையில் அனைவரும் செயற்பட வேண்டும்.
அத்துடன் முன்னர் இடம்பெற்ற தேவையற்ற நடவடிக்கைகளை களைய அனைவரும் முன்வர வேண்டும் என்று இளம் அரசியல் உறுப்பினர்கள் கேட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRWLafq3.html
கனடாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா வலியுறுத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 11:37.33 PM GMT ]
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த ஆண்டுக்கான ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். கடந்த காலங்களில் கனடாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆட்கடத்தல்கள் அதிகமாக காணப்பட்டன.
இதில் பாதிக்கப்பட்ட பல இலங்கையர்களும், ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் குடியுரிமை வழங்கும் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கனேடிய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மனித கடத்தல் தொடர்பிலான இந்த அறிக்கையில், கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியிலில் இரண்டாம் வரிசையில் அமெரிக்கா இலங்கையை வைத்துள்ளது. ஆட்கடத்தல்களுக்கு எதிராக முறையான நடவடிக்கையை மேற்கொள்ளாத மற்றும் ஆட்கடத்தலுக்கு தூண்டுகின்ற நாடுகள் இந்த வரிசையில் இணைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRWLafq5.html
Geen opmerkingen:
Een reactie posten