தமிழ்மொழி தினப்போட்டியில் வரலாற்றை மாற்றி சிங்கள மொழியில் தேசியகீதத்தினை இசைக்கவைத்த கி.மாகாண கல்விப்பணிப்பாளர்.
கிழக்கு மாகணத்திற்குரிய மாகாணமட்டத் தமிழ்த்தினப் போட்டி பட்டிருப்பு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ந. புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்றது இதன்போது கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரி. ஏ நிசாம் அவர்களின் அழுத்தத்தின் பேரில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியகீதம் இசைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தினப்போட்டியில் வரலாற்றில் ஒருபோதும் நடக்காத இவ் நிகழ்வை விரும்பாத நடுவனம் வகிக்க வந்த நடுவனர்கள் வெளிநடப்பு செயதமையால் சிலபோட்டிகள் ஆரம்பிப்பதற்கு காலதாமதமானதாக போட்டிக்கு வருகை தந்தவர்கள் தெரிவித்தனர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் காலையில் போட்டிக்கு தயாராக ஒப்பனை செய்தவண்ணம் மாணவர்கள் இருந்ததாகவும் போட்டி பி.ப. 3 மணிக்கே ஆரம்பமானதாகவும் தெரிவித்தனர்
மாகாண கல்விப்பணிப்பாளரிடம் பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்கள் இது பட்டிருப்பு தொகுதி தமிழ்தொகுதி ஆகவே கிதத்தினை தமிழ் மெழியில் இரண்டாவதாகவேனும் இசைக்கப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையினை மாகாண கல்விப்பணிப்பாளர் முற்றுமுழுதாக மறுத்ததாகவும் வலயக்கல்விப் பணிப்பாளர் ஓர்சிலருக்கு பதிலளிளத்தமையை அறியமுடிகின்றது.
எது எவ்வாறாக இருந்தபோதும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தனது பதவியினை தக்கவைத்தக் கொள்வதற்காக ஆளுனர் அவர்களை திருப்திபடுத்த மேற்கொண்ட செயலாகவும் அறியமுடிகின்றது
தமிழினை வழர்க்க வேண்டும் என வாயளவில் பேசிவிட்டு அரசகொள்கையில் காணப்படும் இரு மொழிக் கொள்கையை மீறி இனத்தினை அடகு வைத்து பதவியினை தக்கவைத்துக் கொள்வதற்கு
இவரினை தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது என்பதுதான் உண்மை.
இங்கு குறிப்பிடத்தக்க இன்னுமொரு விடயம் என்னவென்றால் தமிழ்மொழித்தினப்போட்டிக்கு
சுவிஸ் நாட்டில் தலைமைகாரியாலயத்தை கொண்டியங்கும் கிழக்கு மாகாண புலப்பெயர் அமைப்பான ‘உதயம்’ எனும் அமைப்பு இந் நிகழ்வுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியினை வழங்கி அனுசரணை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரினை தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது என்பதுதான் உண்மை.
இங்கு குறிப்பிடத்தக்க இன்னுமொரு விடயம் என்னவென்றால் தமிழ்மொழித்தினப்போட்டிக்கு
சுவிஸ் நாட்டில் தலைமைகாரியாலயத்தை கொண்டியங்கும் கிழக்கு மாகாண புலப்பெயர் அமைப்பான ‘உதயம்’ எனும் அமைப்பு இந் நிகழ்வுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியினை வழங்கி அனுசரணை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் நாட்டு உதயம் அமைப்பு கல்விப்பணிப்பாளரிடம் காசோலையினை கையளிப்பதனையும் இந்தப்படத்தில் காணலாம்.
தமிழ் அழிகிறது இதை தடுக்க தகுதியற்ற அரச ஆதரவு அமைப்புக்களும் மற்றும் பல அரச அரசியல் வாதிகளும் வெளிநாட்டு தமிழர் அமைப்புக்களும் யார் மீது யார் குறை செல்வது
ஆரம்ப காலத்தில் கிழக்கிற்கு அபிவிருத்தி என உருவாக்கப்பட்ட உதயம் அமைப்பு நாளடைவில் அரசியல் கலப்புக் காரணமாக பிளவு ஏற்பட்டு சில முக்கியஸ்தர்கள் வேறு ஒரு அமைப்பை உருவாக்கினர்
இரு அமைப்புக்களும் வௌ; வேறு பாதைகளில் இயங்கத் தொடங்கினாலும் உதயம் அமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினை மையமான வைத்தே தமது செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் கிழக்கு மக்களை விட பிள்ளையானை வைத்தே அரசியல் செய்வதே பிரதானமானதாக இருந்தது காரணம் இவ் அமைப்பின் சில முக்கியஸ்தர்கள் இங்கு அரசியல் செய்வதானால் வெளிநாட்டு மக்களின் பணமே இவர்களுக்கு வியாபாரம்
கடந்த மாதங்களில் கிழக்கின் உதயம் என பிள்ளையானின் அலுவலகத்தில் விசேட கரும பீடமும் திறக்கப்பட்டுள்ளதுடன் இதனால் இன்று உதயம் அமைப்பில் சின்னாபின்னமாகி சிதறியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
பிள்ளையானுக்கு கெபாடுத் பணத்திற்கு கணக்கில்லை மீண்டும் அங்குள்ள தமிழரின் பணத்தை இங்கு வீனாக்க தயாராகிறது யார் வாழ யாரின் பணம் அங்கு அனாதைகளுக்கு என பணத்தை திரட்டி இங்குள்ள அலுவேசிகளுக்கு வழங்கி இங்குள்ள அனாதைகளை வீதிக்கு எடுக்கிறது இவ் அமைப்புக்கள்
வெகு விரைவில் இதன் முழு விபரம் மற்றும் ஏனைய அமைப்புக்களின் சமூக விரோத செயற்பாடுகளும் பட்டியலிடப்படும்
Geen opmerkingen:
Een reactie posten