[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 11:10.22 AM GMT ]
இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நிலஅளவை பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு கூடிய காணி உரிமையாளர்களின் எதிர்ப்பு வௌியிட்டனர். இதனையடுத்து அப் பணிகள் கைவிடப்பட்டு நிலஅளவை அதிகாரிகள் திரும்பியுள்ளனர்.
இது குறித்து காணி உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கையில்,
கடந்த 2000ம் ஆண்டு யுத்தம் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து இருந்தோம். மீண்டும் நாம் ஊருக்கு திரும்பிய போது 11 குடும்பத்தை சேர்ந்தவர்களின் காணிகளை ஒன்றாக்கி இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர்.
அதில் நான்கு குடும்பத்தின் வீடுகள் உள்ளடங்கலாக 7 ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர்.
கடந்த ஆண்டு ஒரு குடும்பத்தின் வீட்டினை மட்டும் கையளித்தனர். அவர்களின் வீட்டுடன் இணைந்த காணியை இராணுவ பயன்பாட்டிற்காக வைத்திருந்தனர்.
ஏனைய வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுக்கான வாடகையை தருவதாக இராணுவத்தினர் கூறி இருந்தனர் நாம் வாடகை வாங்குவதற்கு சம்மதிக்கவில்லை வீட்டை கையளிக்குமாறே கோரி இருந்தோம்.
இந்த நிலையில் கடந்த 20ம் திகதி இராணுவ தேவைக்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான காணி அளவீடு செய்யும் பணிகள் யூன் 2ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நிலஅளவை திணைக்களத்தால் காணி உரிமையாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அதன் பிரகாரம் இன்று காலை நிலஅளவை திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் காணி அளவீடு செய்யும் பணிக்காக வந்திருந்தார்கள்.
நாம் எமது காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்கள் அனைவரும் திரும்பி சென்றனர் என தெரிவித்தார்.
இவ்வாறு இராணுவ பயன்பாட்டிற்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகளில் J/ 309 கிராமசேவையாளரின் காணியும் உள்ளடங்கப்படுகின்றது என்பதும், அவர் தற்போது வாடகை வீட்டிலையே குடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராணுவ முகாமுக்காக காணி அளவீடு செய்வதை தடுக்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடமாகாண சபை சபாநாயகர் சி.வி.கே. சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான சு.சுகிர்தன் பா.கஜதீபன் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பரஞ்சோதி ஆகியோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
(மேலதிக இணைப்பு) யாழ்.மாவட்டத்தில் இரு இடங்களில் படையினரின் தேவைகளுக்காக மக்களுடைய நிலத்தை சுவீகரிப்பதற்காக அளப்பதற்கு மேற்கொள்ளப்ப ட்ட முயற்சிகள் காணி உரிமையாளர்கள் மற்றும் தமிழ்தேசிய கட்சிகளின் கடுமையான எதிர்ப்பினையடுத்துக் கைவிடப்பட்டுள்ளது.
அச்வேலி தெற்கு பகுதியில் சுமார் 9குடும்பங்களுக்குச் சொந்தமான 4ஏ க்கர் நிலத்தில் படையினர் கடந்த 1995ம் ஆண்டு தொடக்கம் நிலை கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் தம்முடைய நிலத்தை வி டுவிக்க கோரிக்கை விடுத்துவரும் நிலையில்
கடந்த வாரம் நிலம் சுவீகரிக்கப்போவதாக படையினர் பிரசுரங்களை அனுப்பியிருக்கின்றனர். மேலும் இன்றைய தினம் 02.06.2014ம் திகதி சுவீகரிக்கவுள்ள நிலத்தை அளப்பதற்கு நில அளவையாளர்கள் வந்தி ருந்த நிலையில் மக்கள்
மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீ தரன் மற்றும் வடமாகாணசபை அமைச்சர் பேரவை தலைவர் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் ஆகியோர் திரண்டு கடு மையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இந்நிலையில் நில அளவையாளர்கள் நிலத்தை அளக்காமல் சென்று ள்ளனர். இதேபோன்று கடந்த 2001ம் ஆண்டு நூணாவில் மத்திப கு தியிலிருந்து மக்கள் வெளியேறிய நிலையில் அப்பகுதியில் சுமார் 11 குடும்பங்களுக்குச் சொந்தமான 7ஏக்கர் நிலத்தை
ஆக்கிரமித்த படையினர் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கின்றனர். அதனையும் இன்றைய தினம் சுவீகரிப்பதற்காக நில அளவையாளர்கள் மூலம் அளப்பதற்கு முயற்சி எடுத்திருந்த நிலையில் அங்கேயும் நில உரிமையாளர்கள் மற்றும்
தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் திர ண்டு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்த நிலையில் நில அளi வயாளர்கள் பின்வாங்கியிருக்கின்றனர். குறிப்பாக அச்சுவேலி பகுதியில் கடந்த 19வருடங்களாகவும்
நூணாவில் பகுதியில் கடந்த 13வருடங்களாகவும் மக்கள் இடம்பெய ர்ந்து மாற்றிடங்களில் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் படையினரின் தேவைகளுக்காக என பகிரங்கமாக குறிப்பிடப்பட்டு மக்களுடைய நில த்தை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மேலும் மக்கள் தாம் இடம்பெயர்ந்து சென்றபோது இருந்த வீடுகள் ம ற்றும் வீட்டிலிருந்த சொத்துக்கள் படையினரால் கொள்ளையிடப்பட்டு வெறும் நிலம் மட்டுமே தற்போது உள்ளதாக சுட்டிக்காட்டியிருப்பதுட ன் மனிதவுரிமைகள் ஆணைக்குழு
யாழ்.அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்களிடம் பல தடவைக ள் முறைப்பாடு கொடுத்தபோதும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவி ல்லை என மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgv1.html
ஜெயலலிதா கூறுவதை பொருட்படுத்த போவதில்லை!- ராஜித சேனாரட்ன
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 10:12.08 AM GMT ]
இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடரும். எனினும் விசேட விதமாக மீனவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாக்கு நீரிணைக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு வரலாற்று உரிமை இருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித, பாக்கு நீரிணையில் தமிழகத்தின் பக்கம் இருக்கும் கடலில் மீன்பிடிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இலங்கை பகுதியில் மீன்பிடிக்க அவர்களுக்கு உரிமையில்லை.
உலகில் எந்த நாடும் தமது கடல் எல்லைக்குள் மீறி வந்து மீன்பிடிக்க அனுமதிக்காது. சர்வதேச கடல் எல்லையில் தமது பகுதியில் மாத்திரமே மீன்பிடிக்க முடியும் எனவும் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாக்கு நீரிணைக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு வரலாற்று உரிமை இருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித, பாக்கு நீரிணையில் தமிழகத்தின் பக்கம் இருக்கும் கடலில் மீன்பிடிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இலங்கை பகுதியில் மீன்பிடிக்க அவர்களுக்கு உரிமையில்லை.
உலகில் எந்த நாடும் தமது கடல் எல்லைக்குள் மீறி வந்து மீன்பிடிக்க அனுமதிக்காது. சர்வதேச கடல் எல்லையில் தமது பகுதியில் மாத்திரமே மீன்பிடிக்க முடியும் எனவும் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgvy.html
Geen opmerkingen:
Een reactie posten