தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 juni 2014

இலங்கைக் கடற் படையினரால் 11 இந்திய மீனவர்கள் கைது

குருக்கள் மடம் படுகொலை: சடலங்களைத் தோண்ட நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 03:56.14 AM GMT ]
மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கல்முனையிலிருந்து கடந்த 1990ம் ஆண்டு காத்தான்குடி நோக்கிச் சென்ற 165 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதுடன் இவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு புதைக்கப்பட்டவர்களின்சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 22.4.2014 அன்று முறைப்பாடு செய்தார்.
தனது உறவினர்கள் இருவர் இதில் கடத்திக் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப், தமது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தினை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அடையாளப்படுத்தியதாக தெரிவித்தார்.
பொலிஸார் கேட்டுக்கொண்டதற்கிணங்கள எதிர்வரும் முதலாம் திகதி உரிய இடத்தினை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு நீதவான் றியாழ் உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaeo0.html

வீட்டுக் கிணறுகள் வற்றிவிட்டன! தண்ணீர் இன்றித் தவிக்கும் மலையாளபுரம், கிருஸ்ணபுரம் மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 03:13.40 AM GMT ]
வீட்டுக் கிணறுகள் வற்றிவிட்டன. ஊருக்குள் அட்சய பாத்திரம் போல நீர் இருக்கும் கிணறுகளும் அடியில் கொஞ்ச நீருடன் இன்றோ நாளை வற்றிவிடும் ஏக்கம்.
அகதி முகாமில் சிறு கான்களில் குடங்களில் வரிசையில் நின்று நீர் நிரப்பி கொண்டுவந்து அதை குடிப்பதற்கும், குளிப்பதற்கும், உடைகள் தோய்ப்பதற்கும் என எப்படி அவலப்பட்டோமோ அந்த வாழ்வு இன்னும் எங்கள் கிராமங்களில் தொடர்கின்றது.
அடிப்படை தேவையான தண்ணீர் இல்லாமல் ஏற்படக்கூடிய எண்ணற்ற பிரச்சினைகள் சிரமங்கள் பற்றி யாராவது கவனிப்பார்களா என கிளிநொச்சியின் கிருஸ்ணபுரம் மலையாளபுரம் மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
நேற்று அக்கிராமத்திற்கு விஜயம் செய்த பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் அம்மக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், மாதர் சங்கப் பிரதிநிதிகள் இந்த கவலையை வெளியிட்டனர்.
கிளிநொச்சி நகரில் இருந்து தொலைவில் உள்ள இந்தக் கிராமங்களில் அநேகமாக தெற்கில் இனவன்முறைகளால் சகலவற்றையும் இழந்து 1980களில் இங்கு வந்து குடியேறிய மக்களும் அவர்களின் பிள்ளைகளுமே வாழந்து வருகின்றனர்.
அவர்களில் வாழ்வில் இன்னும் இருள் சூழ்ந்தே காணப்படுகின்றது. அவர்கள் கேட்கின்றனர் கிளிநொச்சியில் கனபுரவீதிக்கு அப்பால் எப்படி வாழ்க்கை  இருக்கின்றது என்பதை ஒப்பிட்டுப்பாருங்கள் என்று.
மலையாளபுரம், கிருஸ்ணபுரம் போன்ற இந்த கிராமங்களில் வறுமை போக்குவரத்து பிரச்சினை வீட்டுத்திட்டங்கள் வழங்கலில் ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகள். என்று ஏராளம் பிரச்சனைகள் காணப்படுகின்றன.
இப்போது இந்த கிராமங்களில் சிறு ஆறுதலாக அருகிலுள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு திருமணம் முடித்த முடிக்காத இளம் பெண்கள் சென்று வருகின்றார்கள்.
அவர்களுக்கு அதில் குறிப்பிட்ட அளவு ஊதியம் கிடைப்பதாகவும் அதை கொண்டு சமாளிக்க முயல்வதாகவும் சொல்கின்றார்கள். உண்மையில் ஆடைத் தொழிற்சாலை அவர்களின் சற்று ஆறுதல்தான். மாலையில் வேலை முடிந்து வந்து தண்ணீருக்கு பரப்பரப்பாக அலைவதை காணமுடிகின்றது.
ஏனெனில் தமிழர் வீடுகளில் இரவு ஆறு மணிக்குப்பிறகு தங்கள் வீட்டுக்கிணற்று தண்ணீரை யாரும் அள்ளுவதை விரும்புவதில்லை. ஆனால் இந்த பெண்களின் தண்ணீர் அவலம் சிரமங்களை புரிந்து கொண்டு சில காணிக்காரர்கள் எப்போதும் வந்து தண்ணீர் அள்ளுங்கள் என்று இரக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கிராமங்களுக்கு போதிய தண்ணீர் வசதி இருந்தால் இந்த பிரச்சினை இல்லையே. எங்களுக்கு பொதுக்கிணறு அமைத்து தாருங்கள் என்றும் அங்குள் குண்டுகளை ஆழப்படுத்தி தாருங்கள் என்றும் அங்கலாய்க்கின்றார்கள்.
கிளிநொச்சியின் இந்த கிராமங்களில் குடிக்கவே நீருக்கு இத்தனை பிரச்சினை என்றால் குளிப்பதற்கும் உடைகளை சீராய் தோய்ப்பதற்கும் ஆரோக்கியமாக இந்த மக்கள் வாழ்வதற்கும் முடியுமா?
வளம் மிக்க இந்தக்கிராமங்களில் தோட்ட நிலங்கள் கருகிக் காய்ந்துபோய் கிடக்கின்றன. அங்குள்ள ஆண்கள் தொலைதூரம் கூலி வேலைக்குச் செல்கின்றார்கள். அவர்கள் வேலை முடிந்துவர இரவு ஏழு மணி எட்டு மணி ஆகின்றது.
வரும்போது புளுதியும் சேறுமாய் வருகின்றார்கள். குளிக்காமல் தூங்கமுடியுமா? கோட் சூட் அணிந்து தொழிலுக்கு செல்லும் மக்கள் இந்த கிராமங்களில் இல்லை.
இன்றைக்கு அவர்கள் கூலிகளாகவே இருக்கின்றார்கள். இந்த கோட் சூட் அணிந்து தொழில் செய்யக்கூடிய வல்லமையுள்ள இளம் சமுதாயம் உள்ளபோதும் இந்த கிராமங்களில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் இந்த சந்ததிகளையும் புளுதியில் புரளவைக்கின்றது.
கிளிநொச்சியின் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நிலை இன்று பட்டிணியும் வறுமையும் என்பதை மலையாளபுரம், கிருஸ்ணபுரம் போன்ற கிராமங்களின் வசதி வாய்ப்புக்களை வைத்து புரிந்துகொள்ளலாம்.
வீட்டுத்திட்டம் கிராமத்துக்கு வேறு வேறு நிலையில். ஏனெனில் கிராமத்துக்கு கிராமம் வேறு வேறு எண்ணமுள்ள கிராசேவகர்கள் கிராம நிர்வாகிகள். அதனால் தெரிவுகளும் வேறுவேறு.
பல வயோதிபர்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். உங்களுக்கு வீட்டுத்திட்டம் இல்லையா என்று கேட்டால். நாங்கள் இருவர் என்ற காரணத்தால் தரப்படவில்லை என்கின்றார்கள். அப்படி என்றால் இந்த வயோதிபர்கள் மரங்களின் கீழேயா வாழ்வது.
தங்கள் வாழ்வில் தங்கள் பிள்ளைகளேனும் உயர்ந்த வறுமையற்ற வாழக்கை வாழவேண்டுமென கனவுகாணும் கிளிநொச்சியின் கிருஸ்ணபுரம், மலையாளபுரம், பாரதிபுரம், விநாயகபுரம் இன்னும் இதுபோன்ற கிராமங்களின் மக்களின் எண்ணங்களில் இந்த சமுகமும் சமுகத்தை வழநடத்தும் பலரும் வறுமையையும் தண்ணீருக்கு அலையும் வாழ்வையும் புளுதி வீதிகளையும் ஆரோக்கியமற்ற பிள்ளைகளையுமே கையளிக்க விரும்பியோ, விரும்பாமலோ நினைப்பது இக்காலத்தின் வேதனை என்று சொல்வதை தவிர வேறு எதை கூறமுடியும்.
மலையாளபுரம், கிருஸ்ணபுரம் மக்களை சந்தித்த பா.உறுப்பினர் சி.சிறீதரனுடன் வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதே சபையின் உறுப்பினர் பாலாசிங்க சேதுபதி, தமிழரசு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபாலன், பா.உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaeoz.html
போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் - ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 05:03.42 AM GMT ]
போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போரை பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.  நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் வேறும் வழிகள் இருந்திருக்கலாம்.  இறுதிக் கட்ட போரை முடிவுக்குக் கொண்டு வரும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சில உளவியல் காரணிகளையும் அரசியல் காரணிகளையும் கருத்திற்கொள்ளவில்லை.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.  ஜனாதிபதி போரை எப்படியாவது தீர்க்கவே முயற்சித்தார்.  போரின் போது சிவில் மக்கள் உயிரிழக்கவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரண்டு தரப்பினராலும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கலாம்.  போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஏன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திக்க உறுதியளித்தார்.
நாட்டில் சரியான நீதிக் கட்டமைப்பு காணப்படுகின்றது.  இதன் ஊடாக விசாரணை நடத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கலாம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaeo2.html

இலங்கைக் கடற் படையினரால் 11 இந்திய மீனவர்கள் கைது
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 05:22.23 AM GMT ]
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்து மீறிய 11 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற் படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்த 11 இந்திய மீனவர்களும் நெடுந்தீவுக்கு அண்மைய பகுதிகளில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.
அவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டதாகப் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.
மேற்படி மீனவர்களை கடற்படையினர் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், குறித்த மீனவர்களை பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீரியல் வளத்துறையினர் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaeo3.html

Geen opmerkingen:

Een reactie posten