கிளிநொச்சிமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நீர்த்தாங்கிக்காணி நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கின்றது. இதன் காரணமாக அங்கு அமைக்கப்படவேண்டிய புதிய கிளிநொச்சிக்கான புதிய நீர்தாங்கியை இரத்தினபுரம் வீதியில் ஒரு பள்ளக்காணியில் பாடசாலைக்கு சொந்தான நிலத்தில் அமைக்கப்படுகின்றது. அக்காணியில் ஒரு மாவட்ட நூலகம் அமைப்பதற்கான ஆலோசனை முதலில் முன்வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் இப்படியான கூட்டங்களில் , சில முடிவுகளை எடுத்து வருகிறோம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த இலங்கை இராணுவம் அனுமதிப்பது இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6906
Geen opmerkingen:
Een reactie posten