தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 maart 2015

ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் கவனம்

மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார்: அஜித் பெரேரா
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 04:00.32 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் வாய்ப்பை, கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கமாட்டார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் ராஜபக்சவும் அந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு மஹிந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் கடந்த ஜனாதிபதி தேர்தலைக்காட்டிலும் அதிக தோல்வியை தழுவிக்கொள்வார் என்று பெரேரா குறிப்பிட்டார்

ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் கவனம்
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 04:20.53 PM GMT ]
இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் சுடப்படுவர் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமை தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்டது.
லோக்சபாவின் பிரதிசபாநாயகரும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்றக்குழு தலைவருமான எம் தம்பித்துரை இந்த பிரச்சினையை முன்வைத்தார்.
இலங்கையின் பிரதமர், இந்திய பிரதமர் இலங்கைக்கு சென்று திரும்பிய பின்னரும் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் மத்திய அரசாங்கம் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதன்போது தம்பித்துரையின் கருத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.
இந்தநிலையில் தாம் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உறுதியளித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp6D.html

Geen opmerkingen:

Een reactie posten