[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 11:31.39 AM GMT ]
ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விகடத்தனமான நாடாளுமன்ற ஆட்சி நாட்டுக்கு தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர் பழைய முறைக்கு அமைய சிறப்புரிமைகளுக்காக மீண்டும் இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாக மக்களுக்கு இதனை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நிறைவேற்று சபையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது குறித்து ஜேவிபி மீள்பரிசீலனை
புதிய தேசிய அரசாங்கத்தின் தேசிய நிறைவேற்று சபையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது குறித்து முடிவெடுக்கப்போவதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலின்போது உறுதியளிக்கப்பட்டமையை காட்டிலும் அமைச்சவையின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இணைந்துள்ள தேசிய அரசாங்கத்தின் நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்க வேண்டுமா? என்பதை யோசிக்க வேண்டியுள்ளதாக அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் அரசாங்கத்தில் இணைந்துள்ள நிலையில் நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக இருக்கமுடியாது என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls6B.html
இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகும் சாத்தியக்கூறு? - தினேஸை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்து
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 07:31.06 AM GMT ]
நேற்று வழங்கப்பட்ட அமைச்சரவை நியமனங்களை அடுத்து பாராளுன்றத்தில் எதிர்க்கட்சிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜே.வி.பியும் விளங்குகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ஜே.வி.பியை விடவும் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது.
எனவே எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 12 ஆசனங்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 60 ஆசனங்களும் ஜனநாயக கட்சிக்கு 07 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தினேஸை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்து
எதிர்கட்சி தலைவராக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவரத்னவை நியமிக்குமாறு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls4H.html
Geen opmerkingen:
Een reactie posten