தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 maart 2015

மோசடிக்காரர்கள் ஆட்சிக்கு வருவதும், வராததும் மக்கள் கைகளிலேயே!

காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 07:22.04 AM GMT ]
காணாமல் போனோரது முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆனைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆணைக்குழு மேற்கொண்ட பரிந்துரை மற்றும் இதுவரை இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்த அறிக்கை  மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இவ் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட இருந்தபோதும் அது பிற்போடப்பட்ட நிலையில் தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு.குணதாச தெரிவித்திருந்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தற்போது வடக்கு கிழக்கு பதிகளில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இம்மாதம் திருகோணமலையில் விசாரணை நடத்திய ஆணைக்குழு அடுத்த மாதம் அம்பாறையில் விசாரணைகளை நடத்தவுள்ளது.

ஆணைக்குழுவிற்கு இதுவரை 20,000 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUloyA.html

மோசடிக்காரர்கள் ஆட்சிக்கு வருவதும், வராததும் மக்கள் கைகளிலேயே!
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 08:09.59 AM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்நாட்டின் தலைவராக வேண்டுமென உறுதியாக நம்பியவர்கள், வெற்றிக்காக உழைத்தவர்கள் அநேகர் இன்று நல்லாட்சிக்காக உயிரை பணயம் வைத்து போராடுகிறார்கள்.
அவர்களின் பிரதான வாதமாக இருப்பது ஐக்கிய தேசிய கட்சிக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாட்டை சீர்ப்படுத்த முடியாது என்பதே ஆகும். 
எனவே எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோற்கும் என்ற உணர்வை மக்கள் மனதில் புகுத்துவதற்கான காரணங்களாக அவர்கள் முன்வைப்பது.
  • ஐக்கிய தேசிய கட்சி மோசடிக்காரர்களை பிடிப்பதில்லை.
  • மக்கள் வாக்களித்தது வரி அல்லது பொருட்களின் விலை குறைப்பதற்கல்ல மோசடிக்காரர்களை பிடிப்பதற்கே.
  • தேர்தல் முறையை உடனடியாக மாற்ற வேண்டும்.
  • நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதில் அவரசமில்லை.
  • பொது தேர்தலை முடிந்தவரை தாமதப்படுத்துதல்.
இந்த கட்டுக்கதையை சமூகமயப்படுத்தியதன் பின்னர் அதை வைத்து அரசியல் செய்யும் மேலும் சக்திகள் காணப்படுகின்றன அவர்கள்,
  • சம்பிக்க ரணவக்க உட்பட  முக்கிய ஜாதிக ஹெல உறுமய
  • நிமல் சிறிபால டி சில்வா, ராஜித்த சேனாரத்ன முக்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
  • ஷிரால் லக்திலக்க உட்பட ரணிலுக்கு எதிரானவர்கள்.
இதற்கமைய பார்த்தால் 43 பேரை வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தை நடாத்தி செல்வது அவசியமற்றது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் களமிறங்கி நாட்டை ஆட்சி செய்வதற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் முடிவுகளுக்கமைய எதிர்க்கட்சியாக அல்லது ஆளும் கட்சியாக செயற்பட வேண்டும் இதன் போது மக்களால் நிராகரிக்கப்பட்ட ஊழல் மோசடிகாரர்கள் உட்பட குழுவினர் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதும் வராமல் தடுப்பதும் மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUloyD.html

Geen opmerkingen:

Een reactie posten