[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 09:28.39 AM GMT ]
நேற்று மாலை 04 மணியளவில் குறித்த ஹெலிகொப்டர்கள் நகரத்தை சுற்றி பறந்து கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இலங்கை விமான சேவையின் வரம்பை மீறி யாழ்ப்பாண பிரதேசத்தில் இந்திய விமானங்கள் இரண்டு மூலம் பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வீசப்பட்டுள்ளது.
அது தொடர்பாக விமான படை ஊடக பேச்சாளர் கிஹான் செனவிரத்ன மேற்கொண்ட விசாரணையில் இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திட்டத்திற்காக குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நாளை வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில்,வட பகுதிக்கு இந்திய விமானங்கள் மூலமே அவர் பயணிக்கவுள்ளதாக விமான படை ஊடக பேச்சாளர் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmwzB.html
தன்னைப்பற்றி அவதூறாக வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது!– கருணா
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 09:14.53 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான வி.முரளிதரன்( கருணா) தன்னைப்பற்றி வெளியிடப்பட்டு வரும் பிழையான தகவல்கள் பற்றி விளக்கமளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் மீது சேறு பூசும் வகையில் சுமத்தப்பட்டு வரும் அரசியல் சூழ்ச்சின் வெளிப்பாடாக அவதூறான முறையில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றில் எந்தவிதமான உண்மைத் தன்மையும் இல்லை.
நேற்றைய தினம் கருணா கொழும்பில் தாக்கப்பட்டார் என்றும், மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். என்றெல்லாம் பல்வேறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
இவ்வாறன தகவல்கள் வெளியிடப்படுவதனால் மக்களுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி என்னுடைய அரசியல் செயற்பாடுகளை குழப்புகின்றதாகவே இருக்கின்றன. இவ்வாறான தகவல்களை நம்பி மக்கள் கலக்கமடையத் தேவையில்லை.
தமிழ் மக்களின் சமாதானத்திற்காகவே நான் அரசியலில் செயற்பட்டு வருகிறேன். இந்த செயற்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கும். சிறிலங்கா சதந்திரக் கட்சியானது ஒரு தேசிய அளவிலான கட்சியாகும்.
அக்கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகையில் சுதந்திரக் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் நான் தொடர்ந்தும் உப தலைவராகவே இருந்து வருகிறேன் என்றும் விமுரளிதரன் தெரிவித்தார்.
அரசியல் என்பது பொது நலன் சார்ந்தது என்ற வகையில் மக்களுக்கான எனது பணியைத் தொடர்ந்த வண்ணமே இருப்பேன். கடந்த மாதம் 28ம் திகதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அனுர பிரியதர்சன யாப்பாவால் எனக்கான உப தலைவர் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தகவல்கள் சரியாகக் கிடைக்காத சிலர் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான பிழையான, உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களும், ஆதரவாளர்களும் நம்பிவிட வேண்டாம். என்பதுடன் உண்மைகளை ஆராயும் தன்மையுடனும் செயற்படுதல் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதே நேரம், தொடர்ச்சியாகவும், 2 வாராங்களுக்கு ஒருதடவை பிழையான பிற்போக்குத் தனமான தகவல்களை வெளியிடுவதில் மிகவும் கவனமாகச் செயற்படும் புலம்பெயர்ந்துள்ள மற்றும் ஒரு சில தரப்பினர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் உப தலைவர் அவர்களே என்று விழிக்கப்பட்டுள்ளது.
இது இதுவரையில் தொடர்ச்சியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகவே செயற்பட்டு வருகிறார் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmwzA.html
Geen opmerkingen:
Een reactie posten