[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 12:07.12 AM GMT ]
100 நாள் திட்டத்தை எவரும் பணயமாக வைத்து அழுத்தங்களை பிரயோகிக்க இடமளிக்க முடியாது.
எதிர்வரும் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது பற்றி எவ்வித சந்தேகமும் கிடையாது.
100 நாள் திட்டத்திற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றது.
நல்ல முறையில் இந்த 100 நாள் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
100 நாள் திட்டத்தை பணயமாக வைத்துக்கொண்டு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது.
100 நாள் திட்டம் அமுல்படுத்துவதற்கு மக்கள் வழங்கிய கால அவகாசம் முடிவடைந்ததன் பின்னர்ää மீண்டும் தீர்மானிக்கும் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கான ஒழுக்கக் கோவை ஒன்றை பெபரல் அமைப்பு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சமர்ப்பித்த நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2014ல் சிறியளவான மனித உரிமை முன்னேற்றம்!- பிரித்தானியா
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 01:46.55 AM GMT ]
இந்நிலையில், 2014ம் ஆண்டுக்கான மனித உரிமை நிலை தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சுதந்திரமான கருத்துக்கூறல், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், கொலைகள், சித்திரவதைகள், வடக்கின் தமிழர்கள் மீதான கட்டுப்பாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மீது தாக்குதல்கள் என்பன தொடர்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதித்துறை பலவீனப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்ட போதும் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களுடன் இணங்கி செயற்பட இலங்கை அரசாங்கம் மறுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சர்வதேச நியமங்களை கடைப்பிடிக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் கோரி வருவதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தமது 2014 மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வருடம் இடம்பெற்ற தென்மாகாண மற்றும் மேல்மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் அமைதியாக இடம்பெற்றபோதும் அதற்காக அரசாங்கத்தரப்பு பாரியளவான அரச சொத்துக்களை பயன்படு;த்தியதாக பிரித்தானிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரல் அமைப்பின் ஒழுக்க விதிகள் எனக்கு பொருத்தமற்றது!– தேர்தல் ஆணையாளர்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 01:49.24 AM GMT ]
அரசியல் அமைப்பு அல்லது சட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்படாத எந்தவொரு ஆவணத்தையும் பின்பற்றக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கான ஒழுக்க விதிகளை பெப்ரல் என்ற தேர்தல் கண்காணிப்புக்குழு நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.
இந்த ஒழுக்கக் கோவையை பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாரச்சி, தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பித்தார்.
அதனைத் பெற்றுக் கொண்ட தேர்தல் ஆணையாளர் இந்த ஒழுக்க விதிகள் எனக்கு பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ளார்.
இவற்றை பின்பற்ற வேண்டுமாயின் சட்ட ரீதியான அங்கீகாரம் இதற்கு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நூறு நாள் திட்ட வாக்குறுதிகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்!- பிரதி அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 01:51.56 AM GMT ]
தேர்தலில் அளிக்கப்பட்டதனைப் போன்று வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஏப்ரல் மாதம் 23ம் திகதியின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நூறு நாள் திட்டத்தின் சகல வாக்குறுதிகளையும் நூறு நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் தொடர்ச்சியாக நாடாளுமன்றைக் கூட்டி தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும்.
நூறு நாள் திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசியல் தலைவர்கள் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுத்தார்கள்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற நூறு நாள் போதாது என்றால் திட்டத்தை இரு நூறு நாட்களாக அறிவித்திருப்பார்கள் என பிரதி அமைச்சர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கை பிரித்து தீர்வுபெறும் நோக்கம் கூட்டமைப்பிற்கு துளிகூட இல்லை: பா.அரியநேத்திரன்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 03:45.52 AM GMT ]
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தின மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் தமிழ் தேசியத்துக்காக தந்தை செல்வாவின் மென்சக்தி போராட்டத்தில் பெண்களின் பங்கு அதிகளவில் இருந்தது. அதேபோன்று வடக்கு கிழக்கில் நடைபெற்ற மென் சக்தி போராட்டத்திலும் பெண்களின் பங்களிப்பானது ஒரு அழியாத வரலாறாகவே உள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டமாக இருக்கலாம், தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கலாம் இவைகள் அனைத்தும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை தகர்த்து பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டி நடத்தப்பட்டவையே.
2009ஆண்டு மே மாதத்துக்கு பிறகு இலங்கையில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை சனல்4 என்னும் தொலைக்காட்சி சேவை ஆவணப்படமாக திரையிட்டு காட்டியது. அதில் பெண்கள் மிகவும் கொடூரமாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
இசைப்பிரியா என்ற ஊடகப்பெண், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார் என்பதற்காக மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வரலாறு கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு உள்ளது.
ஆனால் தற்பொழுது நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக எல்லாம் மாறிவிட்டது என்று நினைக்கின்றோம். அது உண்மையல்ல. ஆள்பவர் மாத்திரமே மாறியிருக்கின்றார். அதனால் எமக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
ஹம்பாந்தோட்டை முள்ளை பொலநறுவை முள்ளால் எடுத்துள்ளோம். அவ்வளவுதான் மாற்றம். முள்ளு முள்ளாகத்தான் உள்ளது. தமிழ் தேசிய அரசியலை வென்றெடுப்பதற்காக மே மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் எட்டுப்பரீட்சை எழுதியிருக்கின்றோம்.
எட்டுப்பரீட்சை என்பது எட்டு தேர்தலை நாங்கள் சந்தித்திருக்கின்றோம். விடுதலைப்போராட்டத்திற்கு பின்னர் நாம் எதிர்கொண்ட முதலாவது தேர்தல் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டோம். நாங்கள் 14பேரும் அன்று தெரிவு செய்யப்படாவிட்டிருந்தால் இந்த வெல்லாவெளி பிரதேசமும் சிங்கள குடியேற்றமாக மாறியிருக்கும்.
நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரித்ததன் காரணமாகவே இன்று நாங்கள் சர்வதேசத்தில் நின்று நீதி கேட்டு கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வாக்களிக்காவிட்டிருந்தால் எமது மக்களை சோரம் போகச் செய்திருப்பார்கள்.
சிங்கள குடியேற்றங்களை செய்யும் போது வாயை பொத்துக்கொண்டு இருந்திருப்பார்கள். அதனை தடுப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செய்து கொண்டுள்ளது. ஆனால் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தயாராகவுள்ளோம். அரசியல் பணி என்பது நீண்ட பயணம். கிழக்கு மாகாணசபையில் நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்ததன் காரணமாக அதுதான் எங்கள் அரசியல் பயணம் என சிலர் நினைக்கின்றனர்.
மாகாணசபை என்பது எங்கள் அரசியல் பணியின் ஒரு அங்கம். எங்கள் இலட்சியம் என்பது நீண்டபயணம். இந்த பயணத்தில் எட்டுப்பரீட்சையில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். தற்போது ஒன்பதாவது பரீட்சையை எதிர்கொண்டுள்ளோம்.
இந்த ஒன்பதாவது பரீட்சையான பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் மூலம் தற்போது ஐ.நா.வின் வாசல்படியை தட்டிக்கொண்டிருக்கும் நாங்கள் உள்ளே செல்வதற்கான நிலையேற்படும்.
மாகாணசபை என்பது எமது மக்களின் அன்றாட தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய தற்காலிக ஏற்பாடு வடக்கு கிழக்கை பிரித்து தீர்வுத்திட்டத்தினைப் பெறும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு துளிகூட இல்லை. கிழக்கு மாகாணசபையினை பொறுத்தவரையில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகளவில் உள்ளனர். தமிழ் உறுப்பினர்கள் குறைந்தளவிலேயே உள்ளனர்.
இதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. இந்த விடயங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு எவருக்கும் அருகதையில்லை. கறுப்புக்கண்ணாடியை கழட்டிவைத்துவிட்டு வெள்ளைக்கண்ணாடியை அணிந்துபார்த்தால் எங்கள் பணி எதுவென்று புரியும்.
எமக்கான உரிமை கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்: அரியநேத்திரன்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அரசியல் பயணம் என்பது ஒரு தாயகத்தில் வாழக்கூடிய மக்கள் தன்னாட்சி அதிகாரம் அற்று சுதந்திரம் அற்று அங்குள்ள பெரும்பான்மை இனத்தவரின் கீழ் அடிமைகளாக இருக்காமல் அதனை அறுத்தெறிந்து ஒரு இனத்திற்குத் தேவையான உரிமையைப் பெறும் அரசியலே கூட்டமைப்பின் அரசியல் பயணமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
நேற்று மட்டக்களப்பு எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியானது பாடசாலை அதிபர் சா.பரமானந்தம் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை அமைச்சர் துரைராஜசிங்கம், உறுப்பினர்களான மா.நடராசா,பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) மற்றும் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.புள்ளைநாயகம், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜீ.சுகுணன், வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள். அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இன்று புதிய அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பெடுத்து ஆட்சி செய்து வருகின்றதே தவிர தமிழ்மக்களுக்கான எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஆட்சியை மாற்றுவது மாத்திரம் தமது கடமையல்ல 65 வருடகாலமாக தமிழர்கள் பட்ட துன்பதுயரங்களுக்கு இறுதித்தீர்வுகாண்பதே எமது நீண்டநாள் இலக்கு என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது.
வெறுமனே அரசாங்கத்தில் போய் சேர்ந்து கொண்டு அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு நாங்கள் தயாரில்லை, எமது மக்கள் கூட்டமைப்பிற்கு இன்று நேற்றல்ல பல தசாப்தகாலங்களாக ஒருமித்து பலப்படுத்தி வருகின்றார்கள்.
நாங்கள் இந்தநாட்டிலே நடைபெற்ற எட்டு தேர்தல் பரீட்சையில் சித்தியடைந்திருக்கின்றோம், அதன்காரணமாக எங்களை சர்வதேசம் மதித்து எங்கள் கருத்துக்களையும் உள்வாங்கி செயற்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு நடைபெற்ற எந்தத்தேர்தலாக இருந்தாலும் அவை அனைத்திலும் கூட்டமைப்பு அதீத வெற்றியீட்டி சாதனை படைத்திருக்கின்றது இதற்கு முழுக்கு முழுக்க தமிழ்மக்களே பொறுப்பானவர்கள் அவர்களது பலம் எம் பக்கம் இருக்கும் வரைக்கும் தமிழர்களுக்கான தீர்வை பெறுவதில் எமக்கு சிரமம் கிடையாது.
தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் இருந்திருந்தால் எமது எல்லைக்கிராமங்கள் எங்கள் கைவசம் இருந்து பெரும்பான்மை இனத்தவர்களினால் மிகவும் இலகுவாக பறிக்கப்பட்டிருக்கும் இன்று நாங்கள் சகலவற்றையும் இழந்து நிலமற்றவர்களாகப் போயிருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகியிருக்கும்.
கூட்டமைப்பானது இணைந்த வடகிழக்கில் எங்களுக்குரிய உரிமையைத்தான் கேட்டு நிற்கின்றோம் அந்த உரிமையை தரும் வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் நாங்கள் மகிந்தவை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்றுதான் மைத்திரிக்கு வாக்குச்சேர்த்தோம்,
மாறாக மைத்திரி எங்களுக்கு எதையும் செய்வார் என்று நாங்கள் அவரை ஆதரிக்கவில்லை இரண்டு பேரும் முள்ளுத்தாள் ஒன்று அம்பாந்தோட்டை முள்ளு, மற்றையது பொலநறுவை முள்ளு இரண்டு முட்களும் குத்தும் என்பது எமக்குத் தெரிந்த விடயம்.
நாட்டிலே புதிய ஆட்சி வந்து விட்டது தற்போது புலனாய்வாளர்கள் புதிய செயற்பாட்டில் மீண்டும் இறங்கிருக்கின்றார்கள் நேற்று ஒரு பாடசாலைக்குச்சென்று அங்குள்ள ஆசிரியரை அழைத்து உமது உறவுகள் எந்த நாட்டில் வசித்து வருகின்றார்கள் என்ற விளக்கத்தினை கேட்டிருக்கின்றார்கள்.
இப்படியாக பல வேலைத்திட்டங்களில் இலங்கை புலனாய்வாளர்கள் இன்றும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறு இவர்களது கெடுபிடி தொடர்ந்து கொண்டுதான் செல்கின்றது.
இதுதான் புதிய ஆட்சியின் பயன். இந்தியப்பிரதமர் மோடி வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளயிருக்கின்றார் அவரது விஜயம் தமிழ்மக்களை பொறுத்தவரையில் மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது.
அதனை கூட்டமைப்பு வரவேற்கின்றது. மோடியின் வருகை தமிழ்மக்களுக்கு நல்ல செய்தியினை கொடுக்கவேண்டும் வெறுமனே இந்தியப்பிரதமர் வந்தார் வடமாகாணம் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டார் என்று இராமல் அவர் இந்த அரசாங்கத்திற்கும் சர்வதேச விசாரணைக்கும் அழுத்தம் கொடுத்திருக்கின்றார் என்ற செய்தியை கூறவேணடும் அதனைத்தான் கூட்டமைப்பும் எதிர்பார்க்கின்றது எனக்கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmv6C.html
Geen opmerkingen:
Een reactie posten