லண்டன் தமிழர் உணவகத்தில் அடித்தே கொன்ற நபர்கள் யார் ? பொலிசார் விசாரணை !
[ Mar 12, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 38105 ]
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மிட்லேன்ட் - கொவென்றி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இலங்கை பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருனோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வீட்டில் வைத்து தாக்கப்பட்டாரா ? இல்லை உணவகத்தில் வைத்து தாக்கப்பட்ட பின்னர் வீடு சென்றாரா என்று தெரியவில்லை.
பிரதேச பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொலை சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பேர்மிங்காம் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 20, 31 மற்றும் 39 வயதுடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மிட்லேன்ட் பொலிஸார் தெரிவித்தனர். இதுபோக இதில் ஒரு தமிழ் பெண்ணும் கைதாகியுள்ளார்.
உணவகம் ஒன்றை நடத்திவரும் நபரே இவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விடையம் தெரிந்த கொவன்ரி வாழ் தமிழர்கள் அதிர்வு இணையத்தை தொடர்புகொண்டு ,அங்கே நடந்த சம்பவத்தை தெரிவிக்கலாம் : 074481 88888.
ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கு விபரத்தை பாதுகாக்க மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் தலையீடு !
[ Mar 12, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 12595 ]
தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநரான அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அலோசியஸ் என்பவர் ராஜபக்ஷக்களின் கறுப்பு பணம் வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள் தொடர்பில் தகவல் வௌியாகாதிருக்க தனது முழு ஆதரவையும் வழங்கி வருவதாக மிகவும் நம்பிக்கைக்குரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அலோசியஸ் என்பவர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரின் வர்த்தக பங்குதாரர் ஆவார்.
நாமல் ராஜபக்ஷ டுபாயில் ‘MASHREQUE BANK' வங்கியில் கணக்கு வைத்திருந்து அதில் 650 மில்லியன் அமெரிக்க டொலர் வைப்புச் செய்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களின் உதவியுடன் ராஜபக்ஷக்களின் கறுப்பு பணம் தொடர்பில் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளதால் அச்சமடைந்துள்ள ராஜபக்ஷக்கள் தங்கள் கணக்கு விபரங்களை மறைக்க கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
அண்மையில் திடீரென யோசித்த ராஜபக்ஷ டுபாய் மற்றும் யுக்ரேன் சென்றது இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவென தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கு வைத்துள்ள நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி (Power of Attorney) என்ற அட்டையை எடுத்துக் கொண்டு யோசித்த டுபாய் சென்று ‘MASHREQUE BANK' வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்து தனது சகோதரரின் கணக்கில் உள்ள 650 மில்லியன் டொலரை உடனடியாக யுக்ரேன் வங்கிக் கணக்கொன்றுக்கு மாற்றும்படி கோரியுள்ளார். அவ்வளவு தொகை பணத்தை ஒரே முறையில் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியாது என்றும் அது சர்வதேச நிதிச் சட்ட மீறல் என்பதால் வங்கியை மூடும் அளவு பிரச்சினை ஏற்படும் என்றும் யோசித்தவிடம் வங்கிப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் மருமகனான அலோசியஸின் யோசனைப்படி ‘MASHREQUE BANK' வங்கிக் கணக்கு குறித்த தகவலை வௌியிடாதிருக்கும் (Non disclosure agreement) இரகசிய ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர். அதன்படி குறித்த வங்கி கணக்கு விபரம் குறித்து பிரிதொரு நபருக்கு தகவல் வழங்குமாயின் வங்கிக்கு எதிராக ராஜபக்ஷ மகன்மார் வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனால் விசாரணை நடத்தும் சர்வதேச நிறுவனங்களுக்கு அந்த வங்கியால் தகவல் வழங்க முடியும்.
கோட்டாபயவை கைது செய்ய தீர்மானம்: உண்மையில் என்ன நடக்கிறது !
[ Mar 13, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 6905 ]
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன் தினம் (11) மாலை இடம்பெற்ற தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் 'மிதக்கும் ஆயுத களஞ்சியம்' தொடர்பில் நடக்கும் விசாரணையில் கோட்டாபய ராஜபக்ஷவை உடன் கைது செய்து பூரண விசாரணை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான விசாரணையின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மிதக்கும் ஆயுத களஞ்சியம்' தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று சபை கூட்டத்தில் யோசனை முன்வைத்ததாக ராஜித குறிப்பிட்டுள்ளார்.'மிதக்கும் ஆயுத களஞ்சியம்' தொடர்பில் எவன்காட் நிறுவனம் அரச ஊழியர்களுக்கு பணம் வழங்கி பலாத்காரம் செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல விடங்கள் குறித்து அநுரகுமார திஸாநாயக்க கருத்து வௌியிட்டதாக ராஜித கூறியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2564.html
Geen opmerkingen:
Een reactie posten