[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 05:40.23 AM GMT ]
தமிழக மீன்பிடிப் படகுகளை விடுவிக்க 150 பேர் கொண்ட தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று இலங்கை சென்றுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 86 படகுகள் காங்கேசன்துறை, காரைநகர், மற்றும் தி்ருகோணமலை பகுதியில் கடற்படையினரின் கட்டுபாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட 34 படகுகளை கொண்டு செல்வதற்காக தமிழகத்தில் இருந்து மீன்வளத்துறையினர் மீனவர் குழுக்களுடன் இலங்கை சென்றனர்.
150 பேர் கொண்ட இந்த குழு இரண்டாக பிரிந்து காங்கேசன் துறைக்கும், திருகோணமலைக்கும் செல்லவுள்ளது.
படகுகள் மட்டுமின்றி மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகள், மற்றும் ஜிபிஆர்எஸ் கருவிகளையும் இலங்கை அரசு இந்திய குழுவிடம் ஒப்படைத்துள்ளது.
மொத்தம் 86 படகுகளை இலங்கை கைப்பற்றி வைத்திருந்தது. முதல்கட்டமாக இயங்கும் நிலையில் உள்ள 34 படகுகளை இந்திய மீட்பு குழுவினர் இன்று தமிழகம் கொண்டு செல்லவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழியை உடைக்கிறார் ரணில்: ராமதாஸ்,வேல்முருகன்
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 06:46.54 AM GMT ]
அவர் இன்று இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியின் போதே இரண்டாவது முறையாகவும் இதுமாதிரியான கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.
அவர் முதலாவது தடவையாக இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்த போது தன்னிடம் மன்னிப்பு கேட்டு கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தெரிவித்து ஒரு வாரத்திற்குள் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் நிறைவு பெற்று நாடு திரும்பிய நிலையில் இலங்கை பிரதமர் மீண்டும் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருப்பது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதோ என எண்ண தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்திய கடற்பரப்பு மிகவும் குறுகியது என்பதால் இப்பிரச்சினையை துப்பாக்கி முனையில் தீர்ப்பதற்கு முனைதல் தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால்தான் விசைபடகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனும் பட்சத்தில் பெரும்பாலும் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையிலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையிலும் நுழைவது தவிரக்க முடியாத ஒரு விடயம்.
இலங்கை கடற்படையினரால் எந்தளவு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ அதில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.
இந்தளவு சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ள இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணமுடியும் என்பதை உணர்ந்தமையினாலேயே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை பிரதமர் முன்வைத்துள்ள கருத்து வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழியை உடைப்பதற்கு சமமாகும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
டில்லியில் கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற இந்திய-இலங்கை கூட்டு ஆணையத்தின் 8வது கூட்டத்தில் சர்வதேச எல்லைபகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை குறைத்து கொள்ளல், எல்லை மீறும் மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள் கூடாது, அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் வேண்டும் என இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை பிரதமருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் கூட இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டது.
இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு நடந்து கொள்வது இனப்படுகொலைகளத்ததின் எல்லையை வங்கக்கடலுக்கும் விரிவுபடுத்துவதாக அமைந்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மாத்திரம் எல்லை தாண்டுவதில்லை, இலங்கை மீனவர்களும் இதனை செய்கிறார்கள் இதற்காக மீனவர்களை சுட்டு கொள்வதே தீர்வு என்றால் வங்கக்கடல் செங்கடலாக மாறிவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை உணர்ந்து இது போன்று பொறுப்பில்லாத கருத்துக்களை முன்வைக்காமல் இருதரப்பு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முனைய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தெரிவித்துள்ளதுடன்,
இது போன்ற சீண்டல்களை தொடர்ந்தால் இலங்கை பிரதமர் போன்று கருத்துக்களை முன்வைக்கும் தலைவர்களை கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு ஒருபோதும் பின்னோக்கி செல்லாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ரணிலின் கருத்தை கண்டிக்கும் வகையில் இந்தியாவுக்கான இலங்கை தூதுவரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும்,
இலங்கையின் இத்தகைய இனவெறி போக்குக்கு சரியான பாடம் புகட்ட தமிழ்நாட்டு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனும் தீர்மானத்தை மத்திய அரசு இனியாவது நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், தி.வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlo5D.html
தீர விசாரித்த பின் கருத்துக்களை முன்வையுங்கள்: சுரேஸ் பிரேமசந்திரன் ரணிலிடம் வேண்டுகோள்
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 05:48.26 AM GMT ]
கடத்தப்பட்டவர்களை தடுத்து வைத்திருக்கும் இரகசிய முகாம்கள் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைக்கும் கருத்தை ஏற்று கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமில் 700ற்கும் மேற்பட்டவர்கள் கோத்தபாய முகாமில் வைத்திருந்ததாகவும், வேறு 35 குடும்பங்களை வைத்திருந்ததாக பா.உ சுரேஷ் முன்வைத்த கருத்திற்கு இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதியிடம் விசாரித்ததாகவும்,
அவ்வாறானதொரு இரகசிய முகாம் அங்கு இல்லை என அவர்கள் கூறியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததையடுத்து நீதி அமைச்சரும் அதே கருத்தையே முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன, முன்னாள் அமைச்சர்களின் பல்வேறுப்பட்ட ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது,
பல்வேறுப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாளாந்தம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொடுத்து அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 700 பேரை கொண்டதொரு முகாம் அந்த முகாம் கோத்தாபாய முகாம் எனும் அடிப்படையில் இயங்கியது, பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இத்தகவலை தெரிவித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
இது தொடர்பில் விசாரிப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வியெழுப்பியுள்ளார், மேலும் குறித்த இரகிசய முகாம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
குறித்த இரகசிய முகாம் தற்போது இல்லாதிருந்தாலும், கடந்த காலங்களில் அவ்வாறானதொரு முகாம் இருந்தது முற்றிலும் உண்மை என சுரேஷ் பிரேமசந்திரன் ஆணித்தனமாக தெரிவித்துள்ளார்.
இதற்கான சாட்சியங்களுக்கான உயிர் உத்தரவாதங்கள் வழங்கப்படும் பட்சத்தில் அந்த சாட்சியங்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும் எவ்வித விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் கடற்படை தளபதி மற்றும் இராணுவ தளபதி கூறினார் எனும் அடிப்படையில் அவ்வாறானதொரு இரகசிய முகாம் இல்லை எனும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், உண்மைகளை மூடிமறைக்கும் ஒரு யுக்தி எனவும், தமி்ழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த முகாம்கள் குறித்து விசாரணைகளை விரைவில் ஆரம்பியுங்கள் இதன் பின்னர் இது தொடர்பில் கருத்துக்களை முன்வையுங்கள் என சுரேஷ் பிரேமசந்திரன் பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் காணாமல் போன 20 ஆயிரம் பேர் பஸ்வண்டிகளில் ஏற்ப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள், ஆனால் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளாமல் வெறுமனே அவர்கள் அங்கு இல்லை என்பது சாதாரணமான பதில்,
எனவே இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கம் போலல்லாது முழுமையான விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான பதிலை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlo4J.html
Geen opmerkingen:
Een reactie posten