[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 01:50.56 AM GMT ]
அவுஸ்திரேலிய பிரஜையான குணரட்னம் வீசா காலம் நிறைவடைந்து மூன்று மாத காலத்திற்கு மேல் மறைந்து வாழ்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்திற்கு மட்டுமே குமார் குணரட்னத்திற்கு வீசா வழங்கப்பட்டது.
குமார் குணரட்னம், தம்மை நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்குமாறு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு பல தடவைகள் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் கோரியிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கைக்கு குமார் குணரட்னம் மதிப்பளிக்காது தலைமறைவாக வாழ்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குமார் குணரட்னத்தை புலனாய்வுப் பிரிவினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குமார் குணரட்னத்திற்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென முன்னிலை சோசலிச கட்சி கோரி வருகின்றது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 05:15.09 AM GMT ]
ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 500 விசை படகுகளில் கச்சதீவு அருகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த போதே குறித்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.
கடற்படையினர் மீனவர்களிடம் இங்கே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடக் கூடாதென தெரிவித்து மீனவர்களை தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளனர்.
படையினர் மீனவர்களின் 10ற்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களையும், மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து கடலில் எறிந்துள்ளனர்.
மேலும் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இப்பகுதியில் தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் பட்சத்தில் கைது செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
19வது திருத்த சட்டம் வர்த்தமானியில் வெளியீடு
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 05:26.28 AM GMT ]
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொது மக்கள் தங்களுடைய ஆலோசனை மற்றும் கருத்துக்களை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் சமர்பிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், சுயாதீன ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இணையத்தளத்தின் ஊடாக குறித்த வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட முடியும்.
http://documents.gov.lk/Bills/2015/19th%20Amendment/E.pdf
Geen opmerkingen:
Een reactie posten