தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 maart 2015

”நோ பயர் சோன்” ஆவண படத்தை இலங்கையில் வெளியிட அனுமதி மறுப்பு

படகுகள் இன்றி திரும்பிச் செல்ல இந்திய மீனவர்கள் மறுப்பு- இலங்கை வரும் தமிழக குழு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 03:35.17 AM GMT ]
படகுகள் இன்றி திரும்பிச் செல்ல இந்திய மீனவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட 86 இந்திய மீனவர்களின் அரைவாசி பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகள் இன்றி நாடு திரும்ப மறுப்பு வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 பேரே படகுகள் இன்றி நாடு திரும்ப மறுத்துள்ளனர்.
இந்திய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் தமது படகுகள் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளமையை இந்திய மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை வரும் தமிழக குழு
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்க மீனவ குழு இன்று இலங்கை வரவுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவ படகுகளை பெறுவதற்காகவே இலங்கை வரவுள்ளார்கள்.
ராமேஸ்வர கடலோர பிரதேசங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் வாழும் 135 மீனவர்கள் இலங்கை சென்று 87 மீன்பிடி படகுகளை கையேற்கவுள்ளதாக இந்திய மீன்பிடி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மற்றும் நாகபட்டனம் ஆகிய பிரதேசங்களில் இருந்து 20 படகுகளில் இலங்கை செல்லவுள்ளதாக திணைக்களத்தின் உதவி இயக்குனர் எம். கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட படகுகள் இலங்கையில் பல இடங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே இந்திய படகுகள் விடுவிக்கப்படுவதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmxzB.html

மகிந்தவை அரசியலுக்கு அழைத்து வந்தால் வெற்றி பெற முடியாது: ராஜித்த சேனாரத்ன
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 04:55.04 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தேர்தலில் வெற்றி பெற செய்ய முடியாதென சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் உள்ள சிறிய கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மனமுறிவுடன் இருக்கும் பட்சத்தில் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவது மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிர்காலம் ஒன்று உருவாக போவதில்லை என அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இம்முறை 18 லட்ச இளைஞர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்கள் மூலம் பெரும்பான்மை வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே கிடைக்கும் எனவும் சிறிய கட்சிகள் மூலம் சிறுபான்மையுடைய வாக்குகளே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கிடைக்கும் இதனால் வெற்றிக்கு பாதிப்பேற்படுமென குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த மீண்டும் வந்தால் சுதந்திரக்கட்சி தோல்வியடையும்: முன்னாள் பிரதமர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், கட்டாயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படும் எனவும் அது கட்சியின் தோல்விக்கும் காரணமாக அமையும் எனவும் முன்னாள் பிரதமரும் சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலைவர்கள் கூறுவதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி ஆகிவிடாது. தற்போது அப்படி எதுவுமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது ஆளும் கட்சியில் உள்ளது. மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கூட்டங்களில் நான் கலந்து கொள்ள போவதில்லை.
மக்கள் அது சம்பந்தமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர். மக்களின் அந்த தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன். மகிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டுமாயின் அங்கீகரிக்கப்பட்ட முறைகள் உள்ளன. முதலில் அவர் கட்சியில் வேட்புமனுவை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னரே தேர்தலில் போட்டியிட வேண்டும். கட்சியின் ஊடாக வேட்புமனுவை பெற்றுக்கொண்டு வந்தால், மகிந்தவை பிரதமர் வேட்பாளராக போட்டியிட வைப்பது பற்றி ஆராய்ந்து பார்க்கலாம் எனவும் விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

”நோ பயர் சோன்” ஆவண படத்தை இலங்கையில் வெளியிட அனுமதி மறுப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 03:57.34 AM GMT ]
நோ பயர் சோனின் சிங்கள மொழிப்பெயர்ப்பு ஆவணப்படத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக, வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
சனல்4 வீடியோ காட்சிகளால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்கள் ஏற்படவில்லை. இதனையடுத்தே அதனை சிங்கள மொழிப்பெயர்ப்பில் வெளியிட்டுள்ளார்கள் என்று பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதன் காரணமாக நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த வீடியோ காண்பிக்கப்பட்ட போதும் உரிய பொறுப்புக்கூறல் இருக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நோ பயர் சோனின் சிங்கள மொழி பதிப்பை, இலங்கையில் வெளியிட அனுமதிக்குமாறு கெலம் மெக்ரே அனுமதி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmxzD.html

Geen opmerkingen:

Een reactie posten