[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 08:30.49 PM GMT ]
மங்கள சமரவீரவின் இந்த உரை ஜெனீவா நேரடிப்படி நாளை பிற்பகல் 1.20 மணிக்கு இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அமர்விற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரெனவும் அமைச்சின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான அறிக்கையை செப்டெம்பர் மாத அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தையடுத்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலிலிருந்து இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கவென ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஆரம்ப அமர்வில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றவுள்ள உரை உலக முழுவதுமுள்ள தமிழர்களின் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. மங்கள சமரவீர தனது உரையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த அறிக்கையை பிற்போட்டமைக்காக நன்றி தெரிவிப்பதுடன் உள்ளக பொறிமுறையை விரைவில் நிறுவுவதாகவும் உறுதி வழங்குவாரென அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருந்து நேரடியாக ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். இவர் தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்ட கூட்டத் தொடரில் பங்குபற்றும் அமைச்சர் சமரவீர, இதில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா வருகை தந்திருக்கும் ஏனைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் சந்தித்து இலங்கையின் புதிய அரசாங்கம் நால்லாட்சி மற்றும் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 06 ஆம் திகதி அமைச்சர் மங்கள சமரவீர நாடு திரும்பவுள்ளார்.
கடந்த மாதம் நடுப்பகுதியில் வொஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த மங்கள சமரவீர அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்தித்து பேச்சு நடத்திய அதேநேரம் இலங்கை குறித்து ஜெனீவா அறிக்கையை அடுத்த அமர்விற்கு ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 28வது கூட்டத் தொடர் மார்ச் 27 ஆம் திகதி வரையில் நடைபெறும். உயர்மட்ட அமர்வில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, ஐக்கிய நாடுகள் செய லாளர் நாயகம் பான்கீமூன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணை யாளர் செய்ட் அல் ஹுசேன், ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் சேம் குடேசா, மனித உரிமை பேரவையின் தலைவர் ஜோசிம்ருகர் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
இந்நிலையில் நாளை இலங்கை தொடர்பில் இலங்கை அமர்ச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் மார்ச் மாத சவால்!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 06:02.30 AM GMT ]
வழக்கமாகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வு நடைபெறும் காலம், இலங்கை அரசுக்கு கடுமையான நெருக்கடிகள் மிக்க காலமாகவே இருந்திருக்கிறது.
2012ஆம் ஆண்டு, அதிகாரிகள், அமைச்சர்கள் என்று கிட்டத்தட்ட 72 பேர் கொண்ட பெரியதொரு குழு ஜெனீவாவில் முகாமிட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்காகவே இந்தக் குழு ஜெனீவா சென்றிருந்தது.
இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய அரசாங்கத்துக்கு ஜெனீவாவில் மார்ச் மாத அழுத்தங்கள் அவ்வளவாக இல்லை. என்றாலும், நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள பேரவையின் கூட்டத்தொடரில், உயர்மட்டப் பிரதிநிதிகளின் அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவுள்ளார்.
இதில் அவர், உள்ளநாட்டு விசாரணைப் பொறிமுறை பற்றிய தமது வாக்குறுதிகளை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், ஜெனீவாவுக்கான பயணத்தை பீஜிங்கில் இருந்தே ஆரம்பித்திருந்தார்.
கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களை அவர் சீனாவில் கழித்திருந்தார். வெளிவிவகார அமைச்சராக கடந்த ஜனவரி இரண்டாவது வாரத்தில் பொறுப்பேற்ற பின்னர், மங்கள சமரவீர சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல்பயணம் இதுவாகும்.
அதைவிட இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கொழும்பில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் உயர்மட்டப் பிரமுகரும் இவரேயாவார். எனினும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில், நடைபெறும் உயர்மட்ட சந்திப்பு இதுவே என்று கூற முடியாது.
ஏனென்றால் சீன அதிபரின் விசேட தூதுவராக உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சோ ஏற்கனவே கொழும்புக்கு வந்திருந்தார். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்த போது அவற்றை இடைநிறுத்தப் போவதாக இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போத சீன அரசின் விசேட தூதுவராக லியூ ஜியான்சோ கொழும்பு வந்தார்.
அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரம சிங்க உள்ளிட்ட இலங்கை இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சுகளின் பின்னர் சீனாவின் திட்டங்கள் குறித்த, முக்கியமான கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளின் மாற்றங்கள் தென்படுகின்றன.
எதிர்கட்சியில் இருந்த போது, தாம் ஆட்சிக்கு வந்தால் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று வீரவசனம் பேசிய இப்போதைய அரசாங்கத் தலைவர்கள் அனைவருமே சீன அரசின் விசேட தூதுவரின் வருகைக்குப் பின்னர் அடங்கிப் போயினர். அவர் கொண்டு வந்த செய்தி மிகவும் கடுமையானதாக இருந்திருக்கலாம்.
1.5 பில்லியன் டொலர் செலவில் கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்மானிக்கும் பொறுப்பை சீனாவே ஏற்றிருந்தது. அந்த உடன்பாடு, முன்னைய அரசாங்கத்தினால் எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் கையெழுத்திடப்பட்டது என்பது உண்மையே என்றாலும் அது ஒரு சர்வதேச இருதரப்பு உடன்பாடு என்பது முக்கியமான விடயம்.
ஒரு சர்வதேச இருதரப்பு உடன்பாட்டை முறித்துக்கொள்வதன் பிரதிபலனை எதிர்கொள்ள நேரிடும் என்று சீனா எச்சரிக்கை செய்திருக்கலாம். அதனால் தான், இந்த திட்டத்தின் 25 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்துள்ளதாகவும் தற்போதைய கட்டத்தில் இதனை இடைநிறுத்துவதனால், அதற்கு ஏற்பட்ட செலவை சீனாவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டி எற்படும் என்றும், இந்தியாவிடம் கூறியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அதாவது சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை ரத்துச் செய்யத் தயாரில்லை என்பதே, இலங்கை அரசாங்கத்தின் இறுதி முடிவாக மாறிவிட்டது. ஆனால் அதனை வெளிப்படுத்துவதற்கு இருக்கின்ற தயக்கம் காரணமாக அறிக்கைகள், ஆய்வுகள், மீளாய்வு என்று இழுத்தடிக்கப்படுகிறது, இப்போதைய நிலையில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்க இலங்கை அரசாங்கம் தயாராகிவிட்டது. ஆனால் அந்த உடன்பாட்டில் சில திருத்தங்களை மேற்கொள்ள விரும்புகிறது.
கொழும்பு துறைமுக நகரத்தில் 20 ஹெக்ரெயர் நிலப்பரப்பை சீனாவுக்கு சொந்தமாக வழங்கும் உடன்பாட்டு விதிகளை மாற்றியமைக்க விரும்புகிறது இலங்கை. கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளியிட்ட கருத்துகளில் இருந்து இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அவரது அந்த உரை சீனாவின் பொருளாதார பலம் குறித்து இலங்கை அச்சம் கொண்டுள்ளதும் கொழும்புத் துறைமுக நகரத்தில் அதன் இராணுவத்திட்டங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தைக் கொண்டிருப்பதையும் உணர்த்தியிருக்கிறது.
எப்படியாவது சீனாவுக்கு நிலத்தை உரிமையாக எழுதிக்கொடுக்காத வகையில் உடன்பாட்டை மாற்றியமைப்பதே இப்போதைய இலங்கை அரசாங்கத்தின் சவால்மிக்க காரியம். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் சீனப்பயணத்திலும் இதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அவரது பயணத்துக்கு முன்னரே எதிர்வு கூறப்பட்டிருந்தது.
சீனாவில் அவரது பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் இந்தப் பத்தி எழுதப்படும் போது வெளியாகவில்லை. எனினும் கொழும்புத் துறைமுக நகர விவகாரம் தான் புதிய அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு விவகாரமாக உள்ளது.
புதிய அரசாங்கம் சீனா, இந்தியா, உள்ளிட்ட எல்லா நாடுகளுடனும் சமமான உறவைப் பேணப்போவதாக புதுடில்லியில் வைத்தே கூறியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இது இந்தியாவுக்கு ஒரு வகையில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். புதிய அரசாங்கம் சீனாவைக் கைவிட்டு ஒரேடியாக இந்தியா பக்கம் சாய்ந்து விடும் என்று இந்திய அரசாங்கம் எதிர்பார்திருக்கலாம்.
ஆரம்பத்தில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் அது நடைமுறைச் சாத்தியமான காரியமல்ல என்பது இந்தியக் கொள்கை வகுப்பாளருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள மிகப் பெரியளவிலான பொருளாதார உறவு, அவ்வளவு இலகுவாக அதனிடம் இருந்து இலங்கையை விலகிச்செல்ல இடமளிக்காது.
இந்த உண்மையை உணர்ந்து கொண்டதாலோ, இந்தியாவும் அணிசேரா நாடுகளில் ஒன்று என்பதாலோ மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அடங்கி கொண்டது புதுடில்லி.
இந்தியாவும் ஒரு அணிசேரா நாடு என்பதை உணர்ந்து கொண்டே தாம் தொடர்ந்தும் அந்தக் கொள்கையைக் கடைபிடிப்போம் என்று தந்திரமாக நழுவியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இந்த விடயத்தில் சீனாவையும் இந்தியாவையும் புதிய அரசாங்கம் திறமையாகவே கையாளத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புது டில்லிப் பயணத்தை முடித்து விட்டு வந்தாலும் இந்தமாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வரப்போகிறார்.
சீனா விடயத்தில் இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் தான் நடந்து கொள்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லி வந்த போது நடத்தப்பட்ட பேச்சுக்களில் விடுபட்ட விவகாரங்களை வைத்து இலங்கைக்கு அவர் அழுத்தங்களைக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக மங்கள சமரவீரவின் பீஜிங் பயணத்தின் பின்னர் ஏற்படும் நிலைமைகளைப் பொறுத்து காய்களைநகர்த்தக் காத்திருக்கிறது இந்தியா. எனவே நரேந்திர மோடி கொழும்பு வந்து செல்லும் வரை இலங்கை அரசாங்கத்தினால் நிம்மதி கொள்ள முடியும். அது போலவே இந்தியப் பிரதமர் கொழும்பு வந்து சென்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிம்மதியாக இருக்க முடியாது.
ஏனென்றால் இம்மாத இறுதியில் அவர் சீனாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அங்கும் அவர் நிச்சயம் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
முன்னைய அரசாங்கம் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட இருதரப்பு உடன்பாடுகளை மதித்து நடக்க வேண்டியது ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட புதிய அரசாங்கத்தின் கடப்பாடு என்று ஏற்கனவே சீனத் தரப்பில் இருந்து கருத்து வெளியாகியிருந்தது.
எனவே முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களைத் தொடர்வதற்கான உறுதிப்பாட்டை மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து சீனா எதிர்பார்க்கும். அதற்காக சீனா தனது எல்லா சக்திகளையும் பயன்படுத்தவும் கூடும். அதையும் சமாளித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிம்மதி கொள்ளலாம்.
சீனா, இந்தியா என்ற இரண்டு உலக மகா சக்திகளுக்கு இடையேயும் அணி சேராமல் செயற்பட எத்தனிக்கும் புதிய அரசாங்கத்துக்கு இந்த மாதம் ஒரு சோதனைக்குரிய மாதமாகவே இருக்கப்போகிறது.
மார்ச் மாத ஜெனீவா பொறியில் இருந்து தப்பித்தாலும் இந்த பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறது புதிய அரசாங்கம்.
ஹரிகரன்
அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 11:28.42 PM GMT ]
சில வாராந்தப் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்கக் கூடாது என்றும், தேர்தல் முறைமையை மாற்றத் தேவை இல்லை எனவும் தாம் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. அச்செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், தாம் அவ்வாறு குறிப்பிடவில்லை. அச்செய்தி அடிப்படையற்றது என்றும் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இவ்விடயங்கள் தொடர்பாகக் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவென தம் அலுவலகத்தில் அவசர செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தினார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீல.சு.கட்சியின் மத்திய குழு அரசியலமைப்புத் திருத்தத்திற்காக நியமித்துள்ள கமிட்டியின் தலைவர் என்ற வகையில் தாமும் இக்குழுவின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, ஜோன் செனவிரட்ன, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் இணைந்து அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக எமது கட்சியின் நிலைப்பாட்டை முன்வைப்பதற்கான வரைவொன்றைத் தயாரித்துள்ளோம்.
குறித்த வரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைகள்
01. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்..
02. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம், அமைச்சுக்களுக்கு செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம், ஆகியன நீக்கப்பட வேண்டும்.
03. ஜனாதிபதி பதவிக்காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களுக்குக் குறைக்கப்பட வேண்டும்.
04. கட்சி தாவலைக் கடுமையாகத் தடை செய்யும் சரத்து அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
05. விருப்பு வாக்கின்றி தொகுதிக்குப் பொறுப்புக் கூறக்கூடிய வகையில் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கு ஏற்ப கலப்பு தேர்தல் முறைமையை உருவாக்குதல் வேண்டும்.
குறித்த வரைவு ஸ்ரீல.சு.க. மத்திய குழுவின் கலந்துரையாடலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இவ்வரைவு குறித்து தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்குக் கால அவகாசம் கேட்டுள்ளனர். இதற்கென ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது கருத்துக்களை அறிந்ததும் இறுதி வரைவை வரைந்து கட்சி மத்திய குழுவின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படும் என்றார் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா.
அவசரமாக அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படக்கூடாது!: தினேஸ் குணவர்தன
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 11:57.42 PM GMT ]
அரசியல் அமைப்பின் திருத்தங்கள் அவசரமாகவும், பதற்றமாகவும் செய்யப்படக்கூடாது.
அரசியல் அமைப்பின் 77, 78, 83, 121, 122 ஆகிய சரத்துக்களின் அடிப்படையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
திருத்தங்கள் நாடாளுமன்றிற்கு எவ்வாறு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பது 77ம் சரத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த சரத்துக்களை மீறி செயற்பட முடியாது.
அவசரமாக திருத்தங்களைச் செய்து மக்களினதும் அரசியல் கட்சிகளினதும் உரிமைகளை மீறக்கூடாது.
அரசியல் அமைப்பினை பார்வையிட்டதன் பின்னரே சட்ட நிபுணர்கள், அமைப்புக்கள் அது குறித்த கருத்துக்களை உச்ச நீதிமன்றில் முன்வைக்க அவகாசம் கிடைக்கும்.
பொது மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தெரியாமல் அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்யப்படக் கூடாது.
அரசியலமைப்பு மாற்றங்கள் தற்போதைய அரசியல் அமைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக் கொள்வதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹோட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு காலதாமதமின்றி அரசாங்கம் தீர்வு காணவேண்டும்! தமிழரசுக்கட்சி
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 01:07.45 AM GMT ]
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தீர்மானங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் அங்கு மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக,
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையின் நிலைமையை ஆராய்ந்து தமிழர்களின் காணிகளை மீள் கையளித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல்,
காணாமல் போனோர் சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி உடனடியாக இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொள்கின்றது.
போர் சூழலில் இடம்பெயர்ந்த ஒவ்வொருவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீள் குடியேற்றும் வகையில் செயற்பட வேண்டும் என அரசை வற்புறுத்துகின்றது.
இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றது எனவும் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினாகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் நடவடிக்கை!- காணி அமைச்சர்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 01:16.53 AM GMT ]
கந்தளாய் பராக்கிரம வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை நோக்கி நாட்டை நகர்த்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத அனைத்து உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மெதிரிகிரியவில் இரண்டு உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுவேன்.
அன்று அமைச்சுப் பதவியிருந்த போதிலும் எதனையும் செய்ய முடியவில்லை.
எனினும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
எவரது தலையீடுகளும் இடையூறும் இன்றி பணிகளை செவ்வனே மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளை வான்களோ, குண்டர் கூட்டங்களோ தற்போது கிடையாது என எம்.கே.டி.எஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUnx2I.html
Geen opmerkingen:
Een reactie posten