கொழும்பில் வாழும் ஆயிரக்கணக்கான, தமிழ் பெண்கள் அமைச்சுக்களின் படிகளேறி சீரழியும் நிலை !
[ Mar 01, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 26190 ]
கொழும்பில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லீம் பெண்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் அமைச்சுக்களின் படிகளேறி சீரழிகின்றனர். கொழும்பில் அரசாங்கத்தினால் வழங்கும் வீடொன்றை பெற்றுக் கொள்வதற்காகவும், அல்லது தனது பிள்ளையை அரச பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்காக அமைச்சுக்களின் படிகள் ஏறி ஏறி வரிசையில் காத்து நின்கின்றனர். ஆனால் இந்தப் பெண்களின் கனவன்மார்கள் தமது மனைவிமார்களை அமைச்சுக்களுக்கு அனுப்பி சீரழியவைத்து விட்டு அவர்கள் வீடுகளில் அல்லது வியாபாரத்தில் தங்கி நிற்கின்றனர்.
இந்தப்பெண்கள், வரிசையில் மணித்தியாலயக் கணக்கில் சிலர் காத்துநிற்கின்றனர். சிலர் கைக்குழந்தைகளுடன் அபாயா அணிந்த பெண்கள், பேஸ்கவர் அணிந்த பெண்கள், மற்றும் கொழும்பில் முடுக்கு வீடுகளில் வாழும் தமிழ்ப் பெண்களும் இவ்வாரே சீரழிகின்றனர். அவர்கள் முண்டியடித்து சண்டையில் ஈடுபடுகின்றனர். சிலர் மயக்கமுறுகின்றனர். அவர்களது கைகளில் ஆகக் குறைந்தது ஒரு மனுவைக் கூட எழுதத் தெரியாமல் அங்கு இங்குமாக அலைகின்றனர். வீடொன்றைப் பெற்றுக் கொள்ள கடிதமொன்றை அமைச்சரிம் சமர்ப்பித்து தனது கண்னீர் கதைகளை வடிக்கின்றனர். ஆனால் அந்த அமைச்சுக்களில் உள்ள அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த கடிதத்தை பெற்றுவிட்டு தங்களுக்கு கொழும்பில் வீடுகட்டுமபோது பதில் அனுப்புகின்றோம். என அனுப்பி வைக்கின்றனர்.
வீடமைப்பு அமைச்சர் சொல்லுகின்றார். தனக்கு கொழும்பில் வீடுகட்டுவதற்கு தனது அமைச்சில் அதற்குரிய நிதி இல்லை. கிராமிய வீடுகளுக்காக மட்டும் 1 இலட்சம் ருபா வட்டியுடன் வீடமைப்பு கடன் மட்டுமே எனக்கு வழங்க முடியும் எனச் சொல்லுகின்றார். நகர அபிவிருத்தி நீர்விநியோக அமைச்சுக்கு சென்ற பெண்கள் கூறுகின்றனர். அங்கு சென்றால் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்தான் வீடுகள் தரக் கூடிய அமைச்சர் என்று சொல்லி இங்கு அனுப்புகின்றனர். நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளைச் சந்தித்தால் – நாங்கள் வீடுகள் கொழும்பில் உடைக்கும்போது கடிதம் தந்திருப்போம் அவர்களுக்குரிய வீடுகளை மட்டுமே வீடுகள் நிர்மாணிக்கின்றோம். வீடுகட்டி முடிய இன்னும் 2 வருடம் செல்லும் அதன்பிறகு வீடுகள் தருவோம். என அவர்கள் சொல்லுகின்றனர்.
மட்டக்குழியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் – கருத்து –
நாங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்குழியில் வைத்து முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை அழைத்து வந்து நகர அபிவிருத்தி அதிகாரிகள் ஊடாக கொழும்பில் வீடற்ற தமிழ் குடும்பங்களது 7ஆயிரம் விண்ணப்படிவத்தை கையளித்தார். கோட்டபாய அன்று எங்கள் முன் கூறுகையில் ,
கொழும்பில் வீடற்று இருக்கும் ; 80ஆயிரம் மக்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகள் நிர்மாணிக்கபட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடும் 550 சதுர அடி தொடர்மாடி வீடுகள. தரப்படும். வீடுகள் உடைத்தவர்களுக்கு கொம்பணிவீதியில 400 வீடுகள் கொடுக்கப்படும். பொரளை, கிராண்பாஸ், தெமட்டக்கொட, மாளிகாவததை, மட்டக்குழி, கொலநாவதை, போன்ற பகுதிகளில் தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கபட்டு சகலருக்கும் வீடு தரப்படும் எனக் கூறி எங்களது விண்ணப்பங்களை தொகையாகப் பெற்று நகர அபிவிருத்தி அதிகாரிகளிடம் கையளித்தார். ஆனால் அரசு மாறிவிட்டது புதிய அரசில் எங்களது விண்ணப்பங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவே இங்கு வந்தோம் என்கிறார்.
http://www.athirvu.com/newsdetail/2435.htmlபிரபாகரன் வீட்டை காட்டியதுபோல ராஜபக்ஷ வாழ்ந்த வீட்டை சுற்றுலா காட்டும் ரணில் !
[ Mar 01, 2015 05:56:45 AM | வாசித்தோர் : 25035 ]
போரில் வென்றுவிட்டோம் என்ற மமதையில் மகிந்த ராஜபக்ஷ ஆடாத ஆட்டம் இல்லை எனலாம். முல்லைத்தீவில் உள்ள பிரபாகரன் வீட்டை சிங்களவர்களுக்கு காண்பித்தார்கள். பெரும் சுற்றுலாத் தலமாக மாற்றினார்கள். ஆனால் மகிந்தருக்கு நியூட்டனின் விதி மறந்துவிட்டது போல. இந்த பூமியில் எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கும். அது இப்போது வேலைசெய்கிறது. மகிந்த ஆடம்பரமாக வாழ்ந்த அலரிமாளிகையை தற்போது எல்லாச் சிங்களவர்களுக்கும் , டிக்கெட் போட்டு காட்டி வருகிறார்கள் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்கள். மகிந்தர் வீட்டை சுற்றிப்பார்கவேண்டும் என்றால் இலவச டிக்கெட் எடுத்தால் போதும். அவர்களே அழைத்துச் சென்று காட்டுகிறார்கள்.
பெறுமதி மிக்க சந்தன கட்டையில் செய்த சிலைகள். தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஆடம்பர நாற்காலிகள். வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆனால் சிலைகள். மேலும் ஆடம்பர நீச்சல் குளம் என்று , ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ. இதனை மக்கள் நிச்சயம் பார்கவேண்டும் என்று , சிங்களவர்கள் தற்போது கூறிவருகிறார்கள். இதுவும் தற்போது கொழும்பில் களைகட்டியுள்ளது என்கிறார் அதிர்வின் சிறப்பு செய்தியாளர்.
http://www.athirvu.com/newsdetail/2436.html
என்னைப் பார்த்து கத்த வேண்டாம்: உங்கள் பிரச்சனை எனக்கு புரிகிறது என்றார் ரணில் !
[ Mar 02, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 14010 ]
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் , ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள். அதில் ரணில் விக்கிரமசிங்க தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு தெரியும். வாயை பொத்கிக்கொள்ளுங்கள் என்று கூட அவர் கூறியுள்ளார். இதனால் அவருக்கு சப்போட் செய்த சுமந்திரன் மற்றும் சம்பந்தர் ஆகியோர் அதிர்சியடைந்துள்ளார்கள் என்று , எமது அதிர்வின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன மகிந்தரை விட்டு பிரிந்து தனியாக தேர்தலில் போட்டியிட்டவேளை, வட கிழக்கில் ராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் 6,000 ஏக்கர் நிலத்தை மீண்டும் மக்களிடம் கொடுக்கும் என்றும். உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் ராணுவம் வைத்துள்ள நிலங்களையும் தமிழர்களிடம் மீளக் கொடுக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இதனை கண்மூடித்தனமாக நம்பிய சுமந்திரனும் , சம்பந்தர் ஐயாவும் மைத்திரிக்கு ஆதரவு வழங்கினார்கள்.ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரே ,ரணிலிடம் இக்கேள்விகளை முன்வைத்தார்கள். இதற்கு பதில் எதுவும் வழங்காத ரணில் தமிழ் தேசிய கூட்டமைப்பை திட்டி தீர்த்துள்ளார்.
இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் பல கேள்விகளை ரணிலிடம் கேட்டு , அவரை குடைந்துள்ளார். இதன் காரணமாகவே ரணில் கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2443.html
Geen opmerkingen:
Een reactie posten