[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 09:15.19 AM GMT ]
இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்ள இந்தியா கதவை திறந்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்ற அதிகார பகிர்வை வழங்குவது குறித்து இலங்கை கவனம் செலுத்த வேண்டும் எனக் நரேந்திர மோடி கூறியமை இதற்கு உதாரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கு மேல் அதிகாரங்களை வழங்குமாறு கூறுவது மிகவும் கெடுதியான நிலைமையாகும்.
இதனை அரசியல் பலவந்தம் என்றே நாங்கள் கருதுகிறோம். எந்த நாட்டின் தலைவரும் வேறு நாடு ஒன்றின் நாடாளுமன்றத்தில் உரையாற்றி, அரசியல் அமைப்புச் சட்ட மாற்றுமாறோ, அதற்கும் அப்பால் செல்ல வேண்டும் என்றோ கருத்தை முன்வைக்க மாட்டார்.
எனினும் இலங்கைக்கு வந்த மோடி அப்படியான கருத்தை முன்வைத்தார். இது கெடுதியான நிலைமை, அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை.
இலங்கை அரசியலமைப்பு சம்பந்தமாக மட்டுமல்ல, இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் இந்திய பிரதமர் தேவையற்ற அழுத்தங்களை கொடுத்து வருகிறார்.
பலாலி விமானப்படையின் விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக மாற்ற வேண்டும் அந்த விமான நிலையத்திற்கு இந்தியாவில் இருந்து சிவில் விமானங்கள் தரையிறங்க வேண்டும் எனவும் மோடி அழுத்தம் கொடுக்கின்றார்.
இது முழுமையாக வடக்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். சிவில் விமான நிலையம் இயங்கினால், அந்த இடத்தில் விமானப்படை முகாமை கொண்டிருக்க முடியாது.
இதே போன்ற நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான அழுத்தங்களை இந்தியா கொடுத்து வருகிறது எனவும் வசந்த பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlozB.html
சோபித்த தேரரை பிரதமராக்க முயற்சி
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 09:24.49 AM GMT ]
இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை விட்டு விலகி விட்டால் கூட்டணியின் தேசிய பட்டியலுக்கு மாதுலுவாவெ சோபித்த தேரர் பெயரிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் அத்துரலிய ரத்ன தேரரின் பிவித்துரு ஹெடக் தேசிய இயக்கம் ஆகியவற்றின் பொது வேட்பாளர்களின் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டை முன்னிலைப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை ஒழித்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட 19வது அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் பொது தேர்தல் ஒன்றை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த யோசனைக்கு மாதுலுவாவே சோபித தேரர் ஏற்றுகொள்ளாவிட்டால், பாராளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரத்ன தேரரை பிரதமராக்குவதற்கான திட்டங்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத் திருத்தங்களில் சூழ்ச்சிகள் வேண்டாம்: ஜாதிக ஹெல உருமய
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 09:44.20 AM GMT ]
அரசியல் சாசனத் திருத்தங்களின் ஊடாக சிலர் பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது நோக்கமாக இருக்கக் கூடாது ஜனாதிபதி முறைமை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.
இதேவேளை தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அரசியல் சூழ்ச்சித் திட்டங்கள் சிலர் மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் இணங்கினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
19வது திருத்தம் தொடர்பான வர்த்தமானியை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய
உத்தேச 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக பிரதமர் சமர்ப்பித்தாலும் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதை ஜாதிக ஹெல உறுமய எதிர்த்ததாக மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் 30(01) ஷரத்துக்கு அமைய நிறைவேற்று அதிகாரம், அரசு ஆகியவற்றின் பிரதானியாகவும் முப்படைகளின் சேனாதிபதியாக ஜனாதிபதி இருந்தாலும் அதன் 19(01) ஷரத்தில் அரசாங்கத்தின் பிரதானி பிரதமர் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜாதிக ஹெல உறுமய புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடுவதை எதிர்த்ததாக சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ள எந்த விதத்திலும் இடமளிக்க போவதில்லை.தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது தனிநபர்களை திருப்திப்படுத்தும் முறை இருக்கக் கூடாது. அது மக்களை மகிழ்விக்கும் திருத்தமாக இருக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 100 நாள் வேலைத்திட்டத்தை பின்னுக்கு தள்ளி விட்டு செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்த முன்னுக்கு வந்து செயற்பட வேண்டும். அப்படி செய்ய முடியாது என்றால், அது அவரது இயலாமை.
நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியுமேயன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவால் அதனை செய்ய முடியாது.
தற்போது உருவாகி இருப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் எனவும் இது மிகப் பெரிய பிழை எனவும் வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlozF.html
விக்னேஸ்வரனுக்காக காத்து நின்ற மோடி: யாழில் இடம்பெற்ற சுவாரஸ்ய சம்பவங்கள்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 09:02.36 AM GMT ]
யாழ். கீரிமலையில் இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய பிரதமர், நரேந்திர மோடி பால் காய்ச்சி வீடுகளை கையளித்தமை தொடக்கம் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
- மோடிக்கும் புரியாமல் போன இலங்கையின் அரசியல்
- பிரதமர் மோடியால் வட-கிழக்கின் வான் பரப்பை இழந்ததா இலங்கை? வெளிவராத உண்மைகள்
- தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்களுக்கு கவலை
- மோடியின் இலங்கை விஜயம் குறித்து பாரதிய ஜனதாக்கட்சி பெருமிதம்
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlozA.html
Geen opmerkingen:
Een reactie posten