[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 10:40.29 AM GMT ]
இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தகவல்களைத் திரட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் அரசியலில் ஈடுபடும் ஆர்வத்தை இதன்மூலம் மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை, இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த போட்டியில், தனது பாதுகாப்பை பலப்படுத்த தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட வேண்டும் என மஹிந்த தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல ஒற்றுமைகள்: மோடி
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 10:50.26 AM GMT ]
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
மிக அருகில் உள்ள அயல் நாடு என்ற வகையில் மத, மொழி கலாச்சாரம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒன்றுமைகள் உள்ளன. ஒரே காலப் பகுதியில் தான் இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றன.
உலக பொருளாதாரத்தின் பிரதான பங்காளியாகவே உலகம் இந்தியாவை காண்கிறது. இதன் பிரதான உதவியாளராக இலங்கை கொண்டு வரவே இந்தியா முயற்சித்து வருகிறது.
தெற்காசியாவின் அபிவிருத்தியில் இரண்டு பிரதான இயந்திரங்களாக இலங்கையும் இந்தியாவும் மாற வேண்டும்.
இந்தியாவின் செய்மதி தொழில்நுட்பத்தில் இலங்கை கூடிய பலன்களை பெற முடியும். இலங்கை பிரஜைகள் இந்தியாவுக்கு வருவதற்காக நாங்கள் ஒன் அரைவல் வீசாவை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
நான் பிறந்த இடம் புத்த மதத்தின் முக்கிய இடம். இரு நாடுகளின் இருப்புக்கும் கடல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
முன்னேற்றத்திலும், அனர்த்தங்களிலும் கைகோர்க்கும் சக்தி இரு நாடுகளுக்கும் இருக்க வேண்டும்.
எமது பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் கெடுதியான அழுத்தங்களை கொடுப்பவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். இதற்கு இடமளிக்க கூடாது.
இலங்கை, மாலைதீவு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். எமது சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பு என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmwzE.html
நரேந்திர மோடியின் பெயரில் இலங்கைக்கு கிராமம்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 12:02.46 PM GMT ]
பின்னர் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ இலங்கையின் புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பாக இந்திய பிரதமரிடம் விளக்கியுள்ளார்.
குறித்த வீடமைப்பு திட்டத்திற்கு இந்தியா தனது ஆதரவை வழங்க வேண்டுமாறு அமைச்சர் நரேந்திர மோடியிடம் வேண்கோள் விடுத்துள்ளார்.
இதேவேளை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்ரீ நரேந்திர மோடி என்ற பெயரில் கிராமம் ஒன்று உருவாக்கவுள்ளது தொடர்பாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அவதானத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அதற்கு இந்திய பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
13வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தக் கூடிய சூழலை மோடி உருவாக்க வேண்டும்: டக்ளஸ்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 12:05.35 PM GMT ]
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் முன்னாள் அமைச்சர் டக்ளசை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்,
1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் வரப்பிரசாதமாக மாகாணசபை உள்ளடங்கிய 13வது திருத்தச்சட்டம் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கப்பெற்றது.
அதுபோல் தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்குவதற்கு தமது தார்மீகக் பங்களிப்பை வழங்கவேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
கடந்த யுத்த காலங்களின்போது பேரழிவைச் சந்தித்து தற்போது அபிவிருத்தியூடாக மீளக் கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கு கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளில் இந்திய அரசின் பங்களிப்பும் உதவி, ஒத்தாசைகளும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmwzH.html
Geen opmerkingen:
Een reactie posten