தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

UN உதவிச் செயலாளர் இலங்கைக்குள் நுளைகிறார்…

இன ஐக்கியத்தை ஏற்படுத்துவோம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் JVP



மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி ஆகியோர் தலைமையிலான குழுவினரே துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.JVP-Colombo
http://www.jvpnews.com/srilanka/73811.html

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மீது STF தாக்குதல்

அதன் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.அன்சீர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் போது அங்கு கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை சிப்பாய் ஒருவர் தவிசாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாவும் சம்பவத்தையடுத்து விசேட கூட்டமொன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல்; வீட்டின் மீது கழிவு எண்ணெய் வீச்சு
மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியரின் வீட்டின் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி 4ஆம் குறிச்சி மின்சார நிலைய ஒழுங்கையிலுள்ள வீடே இவ்வாறு தாக்கதலுக்கு உள்ளாகியுள்ளது.
அளுத்கம சம்பவத்தை கண்டித்து காத்தான்குடியில் வியாழக்கிழமை (19.06.14) அனுஷ்டிக்கப்பட இருந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட மாட்டாது, எனவும் வர்த்தகர்கள் வழமைப்போன்று கடைகளை திறக்கலாமெனவும் இவர், தனது தலைமையிலான வர்த்தக அமைப்பின் அங்கத்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவல் அனுப்பபட்டு சில நிமிடங்களிலேயே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/73821.html

UN உதவிச் செயலாளர் இலங்கைக்குள் நுளைகிறார்…

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ இன்று வியாழக்கிழமை (19.06.14) இலங்கையை சென்றடைவார்என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி அளிப்பதா? என்பது குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (17.06.14) விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று 18.06.14) பிற்பகல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 134 வாக்குகளால் குழுவை அனுமதிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வான நிலையிலேயே ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ இலங்கை செல்கிறார்:
UN உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ இலங்கை செல்கிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ நாளை வியாழக்கிழமை (19.06.14) இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாகவே திட்டமிடப்பட்ட இந்தப் பயணத்தின் போது இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர்- அளுத்கம- பேருவளை வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்புவார் எனவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி அளிப்பதா? என்பது குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று (17.06.14) விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று 18.06.14) பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ- ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/73824.html

Geen opmerkingen:

Een reactie posten