[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 03:24.14 PM GMT ]
வாழைச்சேனை பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரான கண்ணமுத்து யோகரா (48) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் விடுதலை புலிகள் அமைப்பில் இருக்கும் போது வீரமணி என்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனேரி குளத்து மடுவவைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் யானை வழங்கி எனும் வயல் பிரதேசத்தில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் இருப்பதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் இவருக்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தின் மூலம் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையிலயே இன்று பிற்பகல் வாழைச்சேனை பொலிஸ் நிலைய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgr3.html
மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரை இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 03:33.05 PM GMT ]
தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
மொஹமட் ஹுசைனி என்ற இந்த இலங்கையர், மலேசிய பொலிஸாரால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 29ல் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த மற்றும் ஒருவரான ஹுசைன் வழங்கிய தகவலின் அடிப்படையில் தமிழக பொலிஸாரினால் முன்னதாக இவருக்கு எதிராக இன்டர்போல் சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே ஹுசைனி மலேசியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgr4.html
Geen opmerkingen:
Een reactie posten