10.5 பவுண் நகைகளை திருப்பிக் கொடுக்க கேரளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தங்க ஆபரணங்கள் அணிந்துகொண்டு வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்குள் வருவதை தடுக்கும் சட்டம் ஏதுமில்லை என தீர்ப்பளித்த கேரள மேல் நீதிமன்றம், இலங்கை சுற்றுலா பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்த தங்க சங்கிலியை திருப்பிக் கொடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த மனுதாரர், 10.5 பவுண் நிறையுள்ள ஒரு தங்க சங்கிலியை அணிந்திருத்தார். சுங்க அதிகாரிகள் இதை பறிமுதல் செய்ததுடன் 5000 ரூபா தண்டமும் விதித்தனர்.
இதனை எதிர்த்து மனுதாரர் கேரள மேல்நீதிமன்றில் வழக்குறைஞர் அஸ்வின் கோபகுமார் ஊடாக மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அணிந்து வந்த தங்க நகையை பறிமுதல் செய்ததும், தண்டம் விதித்ததும் சட்டவிரோதமதனதும் எதேச்சாதிகரமானதும் அநீதியானதும் என கூறப்பட்டிருந்தது.
மனுதாரர் தங்கச் சங்கிலி வைத்திருப்பதை வெளிப்படுத்தாதது சட்டவிரோதமானது எனவும் அதனாலேயே அதனை பறிமுதல் செய்தோம் என சுங்க அதிகாரிகள் சார்பில் வாதிட்ட வழக்குறைஞர் வாதிட்டார்.
இரண்டு பக்க வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பயணி, தங்க நகையை வெளிப்படையாக அணிந்து வந்ததனால் அதை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு இல்லை என தீர்ப்பளித்து, பறிமுதல் செய்த நகையை திருப்பிக் கொடுக்கும்படி தீர்ப்பளித்தது. அத்துடன் தண்டமும் இரத்து செய்யப்பட்டது.
http://www.jvpnews.com/srilanka/71505.html
Geen opmerkingen:
Een reactie posten