குறிப்பிட்ட இந்தச் சிறார்கள் தப்பிப்பதற்குக் காரணமாகவிருந்த கனடியப் பொலிசார் கிட்டத்தட்ட குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாக 4 மாதங்களுக்கு மேலாக சகல மாகாணங்களிலும் விசாரணையை மேற்கொண்டிருக்கின்றார்கள் எனவும், 150 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனவும் தெரியவருகின்றது.
அதுமட்டுமல்ல பொலிசாரின் இந்த அயராத உழைப்பின் விழைவாக குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாக 2 மில்லியன் வரையிலான புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதில் கைக் குழந்தைகள் மட்டுமல்ல நடக்கத் தொடங்குகின்ற பராயத்துச் சிறார்களது புகைப்படங்களும் காணப்படுகின்றன என்பது பெற்றோர்கள் தமது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்யவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
குறிப்பிட்ட சம்பவத்தில் கனடாவில் கிட்டத்தட்ட 40 ற்கு மேற்பட்ட பொலிஸ் நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிசாரின் தகவலின் படி தற்போது காப்பாற்றப்பட்ட சிறுவர்களில் இருவர் பிரிட்டிஸ் கொலம்பியாவிலிருந்தும், 3 சிறுவர்கள் ஒன்றாரியோ, குவிபெக், நியுபுறுன்ஸ்விக் விலிருந்தும் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள் எனப் பொலிசார் வியாழக்கிழமை தெரிவித்திருக்கின்றார்கள்.
மேலும் குறிப்பிட்ட சம்பவம் பற்றிப் பொலிசார் மேலும் சில தகவல்களைப் பெற்றோருக்கு குழந்தைகள்மேல் இருக்கும் கவனத்தை அதிகரிக்கும்பொருட்டு வெளியிட்டிருக்கின்றார்கள். குறிப்பிட்ட இந்த நடவடிக்கையின்போது 343 பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், இதில் 104 நபர்கள்மேல் இந்தக் குற்றச் சாட்டக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றைத் தவிர இன்னமும் குற்றங்கள் நிலுவையில் இருக்கின்றன எனவும் தெரிவித்திருக்கின்றார்கள். இவைகள் மட்டுமல்ல குறிப்பிட்ட குற்றமானது கனடாவைக் கடந்தும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன எனவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten