தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

முள்ளிவாய்க்கால் பகுதிகளில் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்க நவனீதம்பிள்ளை முயற்சி!



கண்டி பள்ளிவாசல் மீது தாக்குதல்!- தொடரும் பொதுபல சேனா அட்டகாசம்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 11:48.01 PM GMT ]
கண்டியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனா ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது 
கண்டி, குருந்துகொல்லை பிரதேசத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் மீது வெள்ளிக்கிழமை ஒரு மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி பள்ளிவாயிலின் கண்ணாடி ஜன்னல்களையும், மின் விளக்குகளையும் உடைத்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்து பிரதேச வாசிகள் திரண்டு வந்த நிலையில், பொதுபல சேனா ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிசார் ஸ்தலத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரதேசத்தின் அமைதி நிலையை பேணுவதில் முஸ்லிம் மதகுருக்கள் பொலிசாருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaht0.html
முள்ளிவாய்க்கால் பகுதிகளில் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்க நவனீதம்பிள்ளை முயற்சி!
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 11:34.51 PM GMT ]
இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் மனித புதைகுழிகளை தோண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக நந்திக்கடல் மற்றும் வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் மனித புதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரணை நடத்தும் முனைப்புக்களில் நவனீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளார்.
குறித்த இடங்களில் காணப்படும் மனித புதைகுழிகளை தோண்டும் நோக்கில் பிரதிநிதிகள் குழுவொன்றை இலக்கைக்கு அனுப்பி வைக்க நவனீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார்.
இந்த நோக்கத்திற்காகவே விசாரணைக்குழுவில் இரசாயன பகுப்பாய்பு நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
போர் இடம்பெற்ற வலயங்களில் லட்சக் கணக்கான மனி எலும்புக்கூடுகள் காணப்படுவதாக புலி ஆதரவாளர்கள்ää நவனீதம்பிள்ளையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
போரின் போது 147ää000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக பி.பி.சீ செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்திருந்தார்.
நவனீதம்பிள்ளை மிகவும் திட்டமிட்ட வகையில் பிரதிநிகளை நியமித்துள்ளார்.
வன்னியில் மனித புதைகுழிகளை தோண்டி, எலும்புக்கூடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தவே நவனீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahtz.html

Geen opmerkingen:

Een reactie posten