அமைச்சர் டிலானின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது - பிபில பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 04:30.04 AM GMT ]
குறித்த பெண் இத்தாலி மற்றும் கொரியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து ஐந்து பேரிடம் 13 லட்ச ரூபா பணத்தை மோசடி செய்துள்ளார்.
பதுளை, பசறை பகுதியைச் சேர்ந்த தனுஜா நவாம் ராஜபக்ச என்ற பெண்ணை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிய விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ரக்வான, காலி, கொடகவல்ல, அக்குரஸ்ஸ, நிவிதிகல, கலஹிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை ஏமாற்றிப் பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து இரண்டு முதல் மூன்று லட்ச ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு எதிராக 17 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சரின் இணைப்புச் செயலாளர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு குறித்த பெண் இவ்வாறு மோசடி செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பிபில பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி
பிபில பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிலில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெத்தபதின்ன பிட்டகும்புர என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
38 வயதான பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் பிபில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கள்ளத் தொடர்பே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பை பேணிய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளையும் பிரேதப் பரிசோதனையும் இன்று நடைபெறவுள்ளது.
பிபில பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfr7.html
யேர்மனி மற்றும் பிரான்ஸில் மலேசியா தூதரகத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 02:40.22 AM GMT ]
இவ் நடவடிக்கைக்கு எதிராக கடந்த நாட்கள் யேர்மனியில் பேர்லின் மற்றும் பிராங்க்போர்ட் நகரிலும் பிரான்ஸ் நாட்டிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
யேர்மனியில் பேர்லினில் மலேசியா தூதரகத்துக்கு முன்னரும் பிராங்க்போர்ட் நகரில் மலேசியா துணைத்தூதரகத்துக்கு முன்னரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டது.
நிகழ்வில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பதாகைகள் மக்களால் ஏந்திய வண்ணம், மலேசியா பாதுகாப்பு தேடி புகலிடம் தேடி வருபவர்களை சிங்கள பேரினவாத அரசிடம் திருப்பி அனுப்ப கூடாது எனவும் கோரப்பட்டு மனு கையளிக்கப்பட்டது.
பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையால் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனதுக்கு முன்னரும் கவனயீர்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.இக் கவனயீர்ப்பில் மலேசியா தமிழ் மக்களை சிங்கள கொலைக்களத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் மனு கையளிக்கப்பட்டது.
சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக அப்பாவித் தமிழர்களை நாடுகடத்தி, சித்திரவதைக்கும் கடூழியச் சிறைக்கும் இனவழிப்புக்கும் துணைபோகும் தமிழர் விரோதப் போக்குடைய நாடுகளுக்கு எதிராக நியாயக் குரல்களை எழுப்பி, உலகத் தமிழர்கள் போராட வேண்டியது மிகவும் அவசியமாகும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfr2.html
யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவ பிரதிநிதிகளின் விபரங்களை திரட்டும் மர்ம மனிதர்கள்
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 05:47.23 AM GMT ]
இவ்வாறு சட்டத்திற்கு முரணாக் தொடர்ந்தும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய நடவடிக்கைகள் நிறுதுதப்பட்டு பல்கலைக்கழக சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தி, சுமூகமான நிலைமையை
ஏற்படுத்த வேண்டுமென்றும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்படுத்த வேண்டுமென்றும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைக கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகங்கள் மீதான அரசியல் தலையீட்டை நிறுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழ ஆசிரியர்கள் நாடாளாவிய ரீதியில் நேற்று அடையாள பணிப்புற்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கமைய யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இந்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதன் போது பல்கலைக்கழக சமுகம் மீதான அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளை கண்டித்தும் அநாமதேயமான வகையில் அதாவது சட்டத்திற்கு முரணாகச் செயற்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் கலாநிதி கு. திருக்குமரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய மற்றும் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இனந்தெரியாதோரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டும் மிரட்டப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு பல்கலைக்கழக சமுகத்திற்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதில் குறிப்பாக கிராம சேவகர் பிரிவு ரீதியாகவும், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட தரப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தகைய விபரங்களை இராணுவத்தினர் கோரி வருகின்றனர். இவ்வாறு விபரங்களைச் சேகரிப்பவர்கள் இரானுவத்தினர், புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் என்று தம் வசதிக்கு ஏற்ற வகையில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்திக் கொள்வதுமில்லை. உத்தியோகபூர்வமாக எதையும் கேட்பதுமில்லை. இந்நிலையில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இரானுவம் தலையிட வேண்டியதில்லை. ஆனால் இங்குள்ள நிலைமைகள் வேறு விதமாகவே இருக்கின்றது.
எனவே பல்கலைக்ககழ சமுகம் மீதான அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளைகள் நிறுத்தப்பட்டு மாணவர்கள் ஆசிரியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகத்தில் சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இதனூடாக இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமென்றம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு இதற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற போராட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்தின் அடிப்படையில் ஆசிரியர் சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயந்து அனைவருமான இணைந்து செயற்படுவோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyG
Geen opmerkingen:
Een reactie posten