ஸ்கைப் மற்றும் ஜீ.பி.எஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாட்சியங்கள் திரட்டப்படும்: பிரதீபா மஹாநாமஹேவா
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 10:42.51 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரமளவில் சாட்சியங்களை திரட்டும் பணிகளை ஆரம்பிக்க உள்ளனர் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
லண்டன், ரொறன்டோ மற்றும் ஒஸ்லோ ஆகிய நகரங்களில் சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாக பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ளவர்களிடமிருந்து நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்கைப் மற்றும் ஜீ.பி.எஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் நாட்டை விட்டு வெளியேறி குறித்த நாடுகளில் தங்கியிருந்தவர்கள், சாட்சியமளிக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு எட்டு மாதங்களுக்கு விசாரணை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டால், இலங்கையிலிருந்து நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சாட்சியங்கள் பற்றிய விபரங்கள் உதவிக்குப் பெற்றுக்கொள்ளப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaeqz.html
ஹற்றனில் மதபோதகரின் வானை கடத்திய சம்பவம்! 2 மாதங்களின் பின் பிரதான சந்தேகநபர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 10:46.34 AM GMT ]
சம்பவம் தொடர்பில் விசேட குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதபோதகர் ஒருவருக்கு சொந்தமான வானை வாடகைக்கு பெற்ற சிலர் அதனை கடத்திச் சென்றதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுக்கு அமைய வான் கடந்த 13ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதோடு, சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களால் கடத்தப்பட்ட வானின் இலக்கத் தகடு மற்றும் எஞ்சின் இலக்கம் என்பன மாற்றப்பட்டு, வேறு ஒருவருக்கு விற்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சந்தேக நபர் கண்டி வத்தேகம பகுதியை சேர்ந்தவர் என்றும், இவர் பல இடங்களில் வாடகைக்கு வாகனங்களை எடுத்து விற்பனை செய்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்த நபரை இன்றுறு ஹற்றன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேக நபரை அடுத்த மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹற்றன் நீதவான் அமில ஆரியசேன உத்தரவிட்டுள்ளார்.
ஹற்றன் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaeq0.html
யாழ்.மாநகர முதல்வர் கூறியிருக்கும் கருத்துக்கள் மிக மோசமான பொய்கள்!- சீ.வி. கே.சிவஞானம்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 11:00.27 AM GMT ]
மாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேரவை தலைவர் ஆகியோரின் வாகனங்கள் கொள்வனவுக்கு சுமார் 50மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், உறுப் பினர்களுக்கான வாகனங்கள் இரண்டரை வருடங்களுக்குப் பின்னரே வழங்கப்படும் என உள்ளுராட்சி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளமையினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை மாகாண பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
யாழ்.மாநகரசபை முதல்வர் 65லட்சம் ரூபா செலவில் முன்னர் ஒரு வாகனத்தை வாங்கியிருந்தார். அந்த வாகனத்தை விபத்திற்குள்ளாக்கி அந்த விபத்து தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த வாகனத்திற்கான காப்புறுதியையும் பெற்றுக் கொண்டு, மேலதிகமாக 13லட்சம் ரூபா கொடுத்து இப்போது 78லட்சம் ரூபாவுக்கு வாகனம் ஒன்றினை வாங்கியிருக்கின்றார்.
ஆனால் எமக்கு ஒதுக்கப்பட்ட 70லட்சம் ரூபாவில் 58லட்சம் ரூபாவுக்கான வாகனத்தை மட்டுமே வாங்கியிருக்கின்றோம். மிகுதி பணத்தை நாங்கள் மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிட இருக்கின்றோம்.
எனவே உன்மையில் சுகபோகத்தை யார் அனுபவிக்கின்றார்கள் என்பதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு இரண்டரை வருடங்கள் பூர்த்தி செய்த பின்னரே வாகன வரி விலக்கு பத்திரம் அவர்களுக்கு வழங்கப்படும் என உள்ளுராட்சி அமைச்சு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மிக பொய்களை கூறி மக்களை திசை திருப்ப முனையும் யாழ்.மாநகரசபை முதல்வரின் நோக்கத்தை மக்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைச்சர்கள் மற்றும் நான் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் இரவல் வாகனங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaeq1.html
Geen opmerkingen:
Een reactie posten