[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 05:32.37 AM GMT ]
மன்னர் வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து புத்த மதத்தை தோற்றுவித்தவர், கௌதம புத்தர்.
பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கயாவில் உள்ள போதி என்ற இடத்தில் ஒரு மரத்தின் கீழ் 49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்ற புத்தப் பெருமான், உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டம், சாரநாத் என்ற இடத்தில் தனது பிரதம சீடர்கள் ஐவருக்கு ’தர்ம சக்கரம்’ என்னும் ஞான உபதேசத்தை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் போதித்தார்.
அவர் ஞானம் பெற்றதாக நம்பப்படும் புத்தகயாவில் உள்ள போதி மரத்தின் ஒரு கிளையை அசோகப் பேரசரின் மகளான சங்கமித்திரை இலங்கைக்கு கொண்டு சென்று நட்டு, வளர்த்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
அந்த மரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கிளை புத்தர் முதன்முதலாக ஞான உபதேச பிரசாரம் செய்த சாரநாத்தில் உள்ள மலகந்தகுத்தி புத்த விகரை வளாகத்தில் நடப்பட்டு, அந்தக் கிளை பல்கிப் பெருகி பெரிய மரமாக வளர்ந்திருந்தது.
முதிர்ச்சியடைந்திருந்த அந்த போதி மரத்தின் ஒரு கிளை நேற்று முறிந்து விழுந்தது. கிளையின் உள் தண்டு சக்தியிழந்து விட்டதால் அது முறிந்து, விழுந்ததாக குறிப்ப்பிட்ட புத்த பிக்குகள் நேற்றைய பகல் பூஜைக்கு பின்னர் கிளையை அறுத்து வெளியேற்றினர்.
இச்சம்பவத்தினால் புத்த விகாரைக்கோ, உள்ளே இருந்தவர்களுக்கோ எந்த சேதமும் இல்லை என்று இந்திய மகா போதி சங்க தலைமை பிக்குவின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவர் இனந்தெரியாதோரால் படுகொலை- சந்தேக நபர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 06:21.39 AM GMT ]
அலஹர பிரதேசத்தின் விஹாரை ஒன்றைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அலகொட தம்மர ரட்ன என்ற 47 வயதான பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஹிரட்டியே புன்யாவர்தனாதிபதி என்ற விஹாரையின் விஹாராதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி பௌத்த பிக்கு கொல்லப்பட்டுள்ளார்.
பிக்கு கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
பக்கமுனை வீரஹிரடிய பிரதேச்தில் உள்ள விகாரை ஒன்றின் பிரதம பிக்கு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
நேற்றிரவு நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை நடத்தினர்.
பொலிஸ் மோப்ப நாய் ஒரே நபருக்கு அருகில் பலமுறை சென்ற நிலையில், அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten