தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

ஈரானிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவில்லை - இலங்கை மறுப்பு!

மூன்றாம் தரப்பு ஊடாக ஈரானிடம் இருந்து இலங்கை எரிபொருளை பெறுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறி இலங்கை ஈரானிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்து வருவதாக அந்த செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
ஈரானிடம் இருந்து பெறும் எரிபொருளை மலேசியா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகிறது என அமைச்சர் கெஹெலிய கூறியதாக ரொய்டர் செய்தித்தளம் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, அந்த செய்தியை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஈரானிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பான தகவல் கசிந்துள்ளதை அடுத்து, இலங்கை அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா தலைமையிலான நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் பொருளதார ரீதியான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டால், அது இலங்கைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahwy.html

Geen opmerkingen:

Een reactie posten