கோண்டாவில் வாள் வெட்டு: சகோதரர்கள் கைது
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 08:38.24 AM GMT ]
கடந்த 19ஆம் திகதி கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ரவீந்திரன் சுகிர்தன் உயிரிழந்தான். அதனையடுத்து கைகலப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இறந்தவரின் சகோதாரர்கள் இருவரையும் இன்று கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுகிர்தனின் மரணம் தொடர்பில் இன்று விசாரணைக்கு வருமாறு கோப்பாய் பொலிஸாரினால் குடும்பத்தினர் அழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி அவர்கள் விசாரணைக்காக சென்ற வேளை இறந்தவரின் சகோதரர்களான ரவீந்திரன் செந்தூரன், ரவீந்திரன் சாரங்கன் ஆகியோரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பாடசாலை உடையுடனேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafuy.html
ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிப்போரின் விபரம் பாதுகாக்கப்படும்!- ஒஸ்கார் பெர்னாண்டஸ் உறுதி
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 09:37.13 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அவருடன் நடத்திய சந்திப்பின் போது, ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
அதுகுறித்துக் கூறும் போதே ஐ.நா உதவிச் செயலர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
இந்த விசாரணையின் போது, இலங்கை அரசாலும், அதன் இராணுவத்தினராலும் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராகவுள்ளனர்.
ஆயினும் இலங்கை அரசு, ஐ.நா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளதுடன், சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, சாட்சியமளிப்பவர்கள் எதிரிகளாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இவற்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.
நேற்றைய சந்திப்பிலும் இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் தெரிவித்திருந்தது. அதற்குப் பதிலளித்த ஐ.நா உதவிச் செயலர், சாட்சியமளிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafu2.html
Geen opmerkingen:
Een reactie posten