தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

வடக்கு முதல்வருக்கு ஆதரவளிக்குமாறு பிரைடே போரம் அமைப்பு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்!

ரவூப் ஹக்கீமை கட்சித் தலைவராக கருத முடியாது: பிரதி சபாநாயகர்
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 04:54.35 PM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சித் தலைவராக கருத முடியாது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஹக்கீமை கட்சித் தலைவராக கருத முடியாது. ரவூப் ஹக்கீமை சபாநாயகர் கட்சித் தலைவராக அங்கீகரிக்கவில்லை.
கட்சித் தலைவர்கள் பட்டியலிலும் சபாநாயகர், ஹக்கீமின் பெயரை உள்ளடக்கவில்லை.
எனவே விசேட உரையாற்றுவதற்கு இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர் என்ற ரீதியில் நாடாளுமன்றில் உரையாற்ற அனுமதியளிக்குமாறு ஹக்கீம், பிரதி சபாநாயகரிடம் இன்று கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நிராகரித்துள்ளார்.
நான்கு பெயர்கள் மட்டுமே கட்சி தலைவர்களாக உள்ளடக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfq1.html
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக சந்திரிக்கா பிரசாரம் செய்யவுள்ளார்!
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 11:44.04 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பிரசாரங்களை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில்ää எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடுவார் என்று உறுதியாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக சிங்கள மக்களின் வாக்குகளை திரட்டுவதற்காக,  சந்திரிக்காவை பிரசாரத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமக்கு அரசியலில் ஈடுபட நாட்டமில்லாத போதும், எதிர்க்கட்சித் தலைவருக்காக அவர் இதனை ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதன்படி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சந்திரிக்கா,  ரணிலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfq3.html
வடக்கு முதல்வருக்கு ஆதரவளிக்குமாறு பிரைடே போரம் அமைப்பு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 11:34.05 PM GMT ]
அரசியல் விரோதங்களை மறந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கு மாகாண மக்களின் நலன் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்று பிரைடே போரம் (Friday forum) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள  அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடபகுதி  மக்கள் அனைவரும் வடமாகாண சபையையும், அதன் முதலமைச்சரையுமே நம்பி இருக்கிறார்கள்.  மத்திய அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு நாட்டம் இல்லை.
இந்த நிலையில் வடமாகாண சபை சுயாதீனமாக செயற்படுவது முக்கியமானதாக காணப்படுகிறது.
எனவே வடமாகாண சபையின் சுயாதீனத் தன்மையை உறுதி செய்வதற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் ஒத்துழைத்து செல்ல வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfq2.html

Geen opmerkingen:

Een reactie posten